தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 மார்ச், 2009

உடல் ஓவியங்கள்-தொடர்ச்சி

மேலும் சில படங்கள் உங்களுக்காக.

உடல் ஓவியங்கள்
உடலில் ஓவியம் வரைவது என்பது ஒரு கலை.அதற்கு வெளி நாடுகளில் மிகுந்த வரவேற்பு காணப்படுகின்றது.நம்மூரின் பச்சைக் குத்தும் வழக்கமே வெளி நாடுகளின் டாட்டூ குத்தும் வழக்கம்.முக்கியமான உடல் பாகங்களிலும் இந்த ஓவியம் வரையும் முறையும் இருக்கின்றது.நீங்கள் பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவராக இருப்பின் படிக்கக் கூடாத காமக் கதைகள் வலைதலத்தில் சென்று பாருங்கள்.

சிவராத்திரி கதைகள்சிவராத்திரி கதைகள் தொடர்ந்து இத்தளத்தில் வெளிவரும்

மனக் கோயில்

அவன் ஒரு விவசாயி,அதிக வருமானம் கிடையாது.மனதுக்குள்ளேயே சிவனை வழிபடுவான்.
ஒருநாள் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான்.அப்போது இடி,மின்னலோடு மழை பெய்தது.ஒரு மண்டபத்துக்குள் ஒதுங்கினான்.
உள்ளே போனவன்,அது ஒரு பாழடைந்த சிவன் கோயில் என்பதை உணர்ந்தான்.இடிந்த நிலையில் புதரும் செடியுமாக கோயில் இருந்த காட்சியைப் பார்த்து வருந்தினான்.நமக்கு வசதி இருந்தால் கோயிலை புதுப்பிக்கலாமே என நினைத்தான்.கண்களை மூடினான்.மனதில் கற்பனையாலேயே கோயிலை சீர்செய்தான்.
அந்தக் கோயிலின் ராஜகோபுரம்,பிராகாரங்கள்,மண்டபங்கள்,மூல சந்நிதிகள் எல்லாம் அமைத்து விமர்சையாக கும்பாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது போல் மனதினுளேயே எல்லாம் முடித்துவிட்டான்.கருநாகம் சீறிக்கொண்டு வரும் சத்தத்தைக் கேட்டவுடன்,அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடினான்.
அவன் வெளியேறும்வரை காத்திருந்தது போல தடதடவென மண்டபம் இடிந்து விழுந்தது.அந்த நேரத்திற்கு மழையும் விட்டிருந்தது.தான் உயிர் பிழைத்த கதையை ஊராரிடம் சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்த ஒரு சித்தர்,
அப்பனே இன்று சிவராத்திரி .நீ இன்று மரணத்தை தழுவ வேண்டியவன்.ஆனால் மானசீகமாக சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டதால் பாவங்கள் நீங்கப் பெற்றாய்.அந்த கண்டத்திலிருந்து உன்னை காக்கவே யாம் பாம்பாக வந்தோம் என்றபடியே மறைந்தார்.
அப்போது தான் வந்தது சிவனென அறிந்தனர்.ஊரே விவசாயின் பக்தியை கண்டு வணங்கியது.

கால் மாற்றி ஆடிய ஈசன்

சிவராத்திரி கதைகள்

கால் மாற்றி ஆடிய ஈசன்

பாண்டிய மன்னன் ராஜசேகரன் அறுபத்துமூன்று கலைகளில் தேர்ச்சி பெற்றவன்.பரதக்கலை மட்டும் தெரியாது.
ஒரு சமயம் சோழநாட்டுப் புலவன் ஒருவன் எங்கள் கரிகாலனுக்கு பரதக்கலை தெரியும்.அதில் வல்லவன் அவன் என்று ஏகத்திற்கும் பெருமையாக பேசினார்.
இதைக் கேட்ட பாண்டியனுக்கும் பரதம் கற்கும் ஆசை ஏற்பட்டது.ஆனால் பயிற்சி காலத்தில் உடல் வலியால் அவதிப்பட்டான்.நமக்கே இப்படி இருக்கின்றதே சதா சர்வகாலமும் வெள்ளியம்பலத்தில் நடனம் ஆடுகின்ற இறைவனின் திருவடிகள் எவ்வளவு வலிக்கும் என மிகுந்த கவலையுற்றான்.
சிவராத்திரியன்று நடராஜப் பெருமானை கண்ணீர் மல்க வணங்கி எம்பெருமானே நடனம் ஆடும்போது பூப்போன்ற தங்கள் பாதங்களுக்கு வலிக்குமே எனவே நின்ற திருவடியை எடுத்து வீசி அடியேன் காணும்படி கால் மாற்றி தாங்கள் ஆடவேண்டும்.இல்லையேல் நான் இங்கேயே உயிரி துறப்பேன் என வேண்டினான்.
பாண்டியனின் அன்பிற்கு மனம் இரங்கி சிவபெருமான் கால் மாறி ஆடிக்காட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மகிமைமிக்க சிவராத்திரி

சிவன் என்றாலே அன்பு.அதனால் பெரியோர்கள் அன்பே சிவம் என்கின்றனர்.சிவனுடைய கதைகளை தேடிப் பயணப்பட்ட போது,அவரின் அடியார்கள் பலரின் கதைகள் தான் கிடைத்தன.அதில் சிவனின் அடியவர்களின் ஏகப்பட்ட திருவிளையாடல்கள் நிரம்பியுள்ளது.சித்தர்கள்,சிவனடியார்கள்,நாயன்மார்கள் என எல்லோரின் கதைகளிலும் அன்பே மேலோங்கி கானப்படுகின்றது.அந்த சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரியின் மகிமைகளை கதைகளாக வெளியிட தீர்மானித்துள்ளேன்.அதற்கு ஒரு முன்னோட்டமாக சிவராத்திரியைப் பற்றியும்,அன்று செய்ய வேண்டிய செயல்கள் பற்றியும் இப்பொழுது குறிப்பிடுகின்றேன்.
சிவராத்திரி வகை
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை,தேய்பிறை நாட்களின் போது வரும் சதுர்த்தசி நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி.
தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பக்ஷ சிவராத்திரி.
திங்கட்கிழமைகளில்(சோமவாரம்) பகல்,இரவு ஆகிய இரு பொழுதுகளிலும் அமாவசை இருந்தால் அது யோக சிவராத்திரி.
ஆண்டுதோறும் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவதுதானஅ மகா சிவராத்திரி.
சிவம்-சுபம்
சிவராத்திரியன்று தேவாரம்,திருமுறைகள்,சிவபுராணம் ஆகியவற்றை படிப்பது நலம்.ருத்ரம்,சமகம் போன்றவற்ரை ஜபித்தாலோ அல்லது வீட்டில் டேப்ரிக்கார்டரில் போட்டுக் கேட்பதாலோ மன அமைதியோடு வீட்டிலும் அமைதி நிலவும்.
பில்வாஷ்டகம்,லிங்காஷ்டகம்,வேத பாராயணம்,சிவனடியார்களின் வரலாறு,தேவாரம்,பெரியபுராணம்,சித்தர்களின் கதைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை படிப்பதாலோ,இல்லை கேட்பதாலோ எண்ணற்ற பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
இதைச் செய்ய இயலாதவர்கள் சிவநாமத்தை உச்சரித்து கோவிலுக்கு சென்று ஒரு கால பூஜையை தரிசிக்கலாம்.ஏழை.எழியவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிறது பெரியபுராணம்.அதிலும் ஒருவருடைய பசியை போக்குபவனுக்கு பரமனின் அருள் கிடைப்பதாகவும் கூறுகிறு.
சிவம் என்றால் சுபம்.சங்கரன் என்றால் சுபத்தை உண்டாக்குபவன்.சிவனுக்குப் பிரியம் அளிக்கும் மங்கள ராத்திரிதான் சிவராத்திரி.
சிவராத்திரி அபிஷேக ஆராதனை
முதல் ஜாமத்தில்-
பஞ்சகவ்ய அவிஷேகம்,சந்தனம்,வில்வம்,தாமரைப்பூ அலங்காரம்,அர்ச்சனை. பச்சைப் பயறு பொங்கல் நிவேதனம்.ருக்வேத பாராயணம்.
இரண்டாம் ஜாமத்தில்-
சர்க்கரை,பால்,தயிர்,நெய், கலந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம்,பச்சைக் கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல்,துளசி அலங்காரம்,தாமரைப்பூ அர்ச்சனை,நிவேதனமாக பாயசம்,யஜுர்வேத பாராயணம்.
மூன்றாம் ஜாமத்தில்-
தேன் அபிசேகம்,பச்சைக் கற்பூரம் சார்த்துதல்,மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ அர்ச்சனை,எள் சாதம் நிவேதனம்,சாமவேத பாராயணம்.
நான்காம் ஜாமத்தில்-
கருப் பஞ்சாறு அபிசேகம்,நந்தியாவட்டைமலர்,அல்லி,நீலோற்பவ மலர் அலங்காரம் அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம்,அதர்வண வேத பாராயணம்.

ருத்ராட்சம்
சிவபிரானின் கண்ணீர் துளியிலிருந்து பிறந்து ருத்ராட்சம்.ருத்ரன் என்றால் சிவன்,அஷம் என்றால் கண்.இதை அணிவதால் ரத்த அழுத்தம் சம நிலை பெறும்.
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ருத்ராட்ச மாலையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரால் குளித்தால் குறையும்.பெரிய ருத்திராட்சத்தை தண்ணீரில் நனைத்து சந்தனம் போல் நன்கு அரைத்து உள்ளுக்கும் சாப்பிட்டு,மேலேயும் பூசினால் இதய வலி குணமடையலாம்.
தினமும் ருத்ராட்சத்தை குளிர்ந்த நீரில் ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சூடு தணியும்.ஜலதோசம் குணமாகும்.
இவைகள் செவிவழி செய்தியாகவும்,புத்தகங்களில் இருந்தும் தரப்பட்டவை.எனினும் சிவப் பிரியர்கள் திருத்தம் சொன்னால் உடனே அவை திருத்தப்படும்.

நான் அழும் நிலையிலுள்ள கவிஞன்.

ஒரு கவிஞன் குழந்தை போன்றவன்.மற்றவர்களுக்கு மிகச் சாதாரணமாக படும் விசயம் அவனுக்கு பெரியதாகப் படும்.மகிழ்ச்சியென்றால் துள்ளி மகிழ்வான், துயரமென்றால் துவண்டு போவான்.சமீபத்தில் என்னை துயரப் படுத்திய நிகழ்ச்சிதான் இந்த கட்டூரையின் கரு.விடுமுறையை கழிக்க சிற்றன்னையின் ஊருக்கு சென்றேன்.அது மணவாடி என்னும் கிராமம்.கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ளது.
கரூர் தான்தோன்றி மலையருகே கலெக்டர் ஆபிஸ் கட்டிய பிறகு,அதைச் சுற்றியிருந்த கிரமங்களின் நில மதிப்பு பலமடங்காக அதிகரித்துவிட்டது.நில தரகர்களும்,பிளாட் விற்பனையாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு விவசாய நிலங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தார்கள்.இப்போது கரூரின் புதிய பேருந்து நிலையம் வெள்ளியனை அருகே அமையலாம் என்ற செய்தியும் சேர்ந்துள்ளது.இது வதந்தியாகவும் இருக்கலாம் என்கின்றனர் கிராமவாசிகள்.
விளைநிலம் விற்பனையாவதைக் கண்டு அமைதியாக என்னால் இருக்க முடியவில்லை.பசுமையான அந்த கிராமத்து நிலங்கள் கல்களால் பிரிக்கப் பட்டு கிடப்பதை பார்த்து வருத்தமாக இருந்தது எனக்கு.சில இடங்களில் வீடு கட்டும் பனியிலும் ஈடுபட்டிருந்தனர்.ஆனால் கிரமத்து வாசிகள் சந்தோசமாக இருக்கின்றனர்.கிராமத்திற்கு புதியதாக சாலை போடப் பட்டிருக்கின்றது, வீட்டிற்கு அருகிலேயே மினி பேருந்து வருகின்றது, கரூரில் வேலைக்கு பஞ்சமில்லை என எத்தனையோ காரணங்கள் அவர்களுக்கு.
இந்த மாற்றங்களை சில மக்கள் விரும்புகின்றார்களோ இல்லையோ,இவை காலத்தின் கட்டாயம்.என்னால் முடிந்தது வருத்தப்படுகின்ற செயல் மட்டும் தான்.
விடுமுறையென்றாலே ஓடிவருவேன்
சிற்றன்னையின் கிராமத்திற்கு
உச்சிபிளக்கும் வெயிலும்
தோகைவிரிக்கும் மயிலாய்
பச்சையுடுத்திய வயலும்
காட்சியளிக்கும் குளுமையாய்
அண்டைவீடும் என்வீடெனே
மழைபொழியும் பாசமாய்
ஆனால் இப்பொழுதோ
வீடெல்லாம் தன்னைச்சுற்றி
வேலி எழுப்பிவிட்டது
விளைநிலமெல்லாம் கல்ஊன்றி
காசுக்காய் விற்கப்பட்டுவிட்டது
செய்வதறியாது திகைத்துக்
கொண்டிருக்கின்றேன் நான்
என்னருகே சிட்டோன்று
நின்று கொண்டிருக்கின்றது
கூடகட்ட இடம்தேடி
வாயில் செத்தைகளுடன்.
முடிந்த வரை விளை நிலங்களை காப்பது நம்முடைய கடமை.

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் திரு.வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் காட்டுப்புத்தூரில் உள்ள ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியில் சில காலம் இருந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.மேலும் அதற்கு சாட்சி போல இந்தக் கவிதை பிரம்மேந்திரகீதம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தின் எழுத்தாலரான இராமராசனை மனமுவந்து பாராட்டுகிறார் நாமக்கல் கவிஞர்.

நாமக்கல் கவிஞரின் கவிதை-

கழனிகள் சூழ்ந்த காட்டுப் புத்தூர்
மதியுள மக்களின் பாக்கிய வசத்தால்
உலக வாழ்க்கையின் உண்மையைக் காட்டி
மெய்ப்பொருள் அதனை மேவிடச் செய்யும்
ஞான வாழ்க்கையை நடந்து காட்டிய
நாரா யணப்பிர மேந்திரர் நல்லோன்
எங்கோ பிறந்து இங்குவந் துற்றன்ன்
துறவற ஒழுக்கின் தூய்மையில் நின்று
இல்லறத் தவர்க்கு இரும்பயன் அளிக்கும்
அறவோர் மடத்தினை ஆக்கினான் அதனை
கண்ணைக் காக்கும் இமையெனக் காத்து
அறம் வளர்த்தருளும் அமிர்தத்தம்மையார்
பிரமேந் திரரின் பிறப்பும் வளர்ப்பும்
வாழ்க்கைக் குறிப்புகள் வகையெலாம் கூட்டும்
படிக்கொரு சரிதம் பாடிடச் செய்த
இனிமைத் தமிழ்ப்பா இந்நூல் முழுதும்
படித்து மகிழ்ந்தேன் பாடிய பாவலன்
இராமராசன் என்னும் பெயரினன்
பல்லாண்டு வாழப் பரமன் காக்கும்.

பிரம்மேந்திரகீதம்,நாமக்கல் கவிஞர்,நாமக்கல் கவிஞர் பாடல்கள்,namakkal kavenar,kattuputhur

நாரயண பிரம்மேந்திரர்

என்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களை சென்ற வாரம் வீட்டிற்கு கூட்டி சென்றேன்.என் ஊரான காட்டுப்புத்தூரின் மகிமை என்னவென்றால் அது திருச்சி,நாமக்கல்,கரூர் என மூன்று பெரிய நகரங்களுக்கு மத்தியில் இருக்கின்றது.அதனால் அந்தந்த ஊர்களின் சிறப்புமிக்க இடங்களை சுற்றி காண்பித்தேன்.அதைவிடவும் எங்கள் ஊரில் சிறப்புமிக்க ஒரு இடத்தை அவர்களுக்கு காண்பித்தேன்.அது தான் நாராயண பிரம்மேந்திரர் மடம்.
இந்த நாராயண பிரம்மேந்திரர் மடத்தை பார்த்த நண்பர்கள் அதிசயித்தார்கள்.அவருடைய மகிமைகளை எடுத்துச் சொல்லவும் ஆனந்தப்பட்டார்கள்.உடனே என்னிடம் இந்த மடத்தைப் பற்றி இணையதளத்தில் கண்டிப்பாக எழுது,அது பலருக்கும் பயணளிப்பதாக இருக்கும் என்று அன்பு கட்டளையிட்டார்கள்.அதன் விளைவு இக்கட்டூரை.
தள வரலாறு-
நாராயண பிரம்மேந்திரர் தன்னுடைய அறுபது ஆண்டுகளை கழித்து,அவர் வாழ்ந்த இடத்திலேயே நூற்றி இருபதாவது வயதில் சமாதி அடைந்த இடம் இந்த காட்டுப்புத்தூரில் இருக்கும் மடம்.
நாராயண பிரமேந்திரர் வரலாறு-
பிறப்பும் இல்லறமும்-
நாராயணன் பிறந்தது ஆந்திரா மாநிலத்தில் உள்ள வேட்கூர் என்னும் கிராமம்.அவருடைய தந்தையார் பெயர் வேங்கடாசல ரெட்டி.நாராயணன் படிப்பிலும் பக்தியிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.கற்றதை பிறருக்கு எளிய முறையில் விளக்கி சொல்லுவார்.கோவில்களுக்கு நண்பர்களுடன் சென்று வழிபடுவார்.
இல்லற வாழ்வு-திருமணத்திற்கு நாராயணன் மறுப்பு தெரிவித்த போதும் உறவுகள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்தனர்.நாராயணனின் மனைவி பெயர் இலக்குமி.இவர்களின் இல்லறம் நல்லறமானதில் ஆணொன்றும் பெண்ணொன்றும் பிறந்தன.இருவரையும் கல்வி கற்க வைத்து,தக்க காலத்தில் திருமணமும் செய்தார்.
தடுத்தாட் கொள்ளல்-
மூன்று முறை அம்மையே எடுத்துக் கூறியும் நாராயணன் துறவு மேற்கொள்ளவில்லை.அதனால் நான்காம் முறை கனவில் வந்த அம்மை ஒரு துணியில் நீ சம்பாதித்த பணத்தை கட்டி ஓர் இடத்தில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வை.ஒருவாரம் கழித்து அங்கு சென்று பார் அது நிலைத்திருக்குமா என்றாள்.இருமுறை அவ்வாறு செய்து பார்த்ததில் பணம் காணாமல் போனது.அதன் அர்த்தம் உணராமல் நாராயணன் மிகவும் தவித்து போனார்.என்றாலும் இல்லறத்தை துறக்கவில்லை.மீண்டும் கனவில் வந்த அம்மை இந்த வாழ்க்கை நிலையில்லை என உணரவைத்தார். அதோடில்லாமல் நாராயணனின் உறவினர்கள் அடுத்தடுத்து மாண்டனர்.சுமார் முப்பது பேருக்கும் மேல் மாண்டதை எண்ணி கலங்கினார் நாராயணன்.
ஐந்தாம் முறையாக கனவில் வந்த அம்மை “ஒட்டனாய் பிறந்தபோது கல் சுமக்கவில்லையா?.நாட்டுக்குள் தோட்டியாய் பிறந்த போது மாட்டைக் கட்டி சுமக்கவில்லையா?.இப்போது மார்நோக திருவோட்டை சுமந்தால் மட்டும் தேகம் இளைத்துவிடுமா?.”என கேள்வி கேட்க.இனியும் இப்படியே இல்லறத்தில் இருந்தால் ஈசனுக்கு கோபம் வருமென எண்ணி துறவறம் பூண்டார் நாராயணன்.
சித்தூர்-
நாராயணனை பல இடங்களில் தேடி கடைசியாக சித்தூரில் கண்டுபிடித்தனர் அவரின் உறவுகள்.ஆனால் இப்போது அவர் நாராயணாக இல்லை பிரம்மேந்திரராக இருந்தார்.இல்லற வாழ்க்கையை தாம் துறந்துவிட்டதை எடுத்துக்கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.அங்கிருந்த ஒருவர் அவருக்கு தினமும் ஒருபிடி கடலைப் பருப்பும் மோரும் தந்து அன்புடன் ஆதரித்தார்.
சோலை,நதி,மணல் மேடு என அனைத்து இடங்களிலும் பத்மாசனத்திலிருந்து தேவியை வழிபட்டு வந்தார்.பார்வதி தேவியின் பக்தி தவத்தில் மண்ணையும் நீரையுமே உணவாக் கொள்ள ஆரமித்தார்.சித்தூரில் மூன்று வருடம் தங்கியிருந்தார்.மக்கள் இவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு வரம் தர வேண்டுமென தொல்லை செய்தனர்.தாம் தனியாக தவமிருக்க எண்ணி சித்தூரிலிருந்து வெளியேறினார்.
பழனிமலை பயணம்-
சித்தூரிலிருந்து திருப்பதி செல்லலாம் என முடிவெடுத்தார்.வேங்கடமுடையான் மீது நூறு விருத்தம் பாடினார்.ஆனால் திருப்பதி பயணம் வேண்டாமென உத்திரவு வர,அதை ஏற்றுக் கொண்டு தென்திசையில் நடக்கலானார்.ஒரு துறவியிடம் நம்மை போன்றவர்களுக்கு ஏற்ற இடம் இங்குள்ளதா என வினவ,அத்துறவி பழனிமலையை ஏற்ற இடமாக சொன்னார்.
காட்டுப்புத்தூருக்கு வருதல்-
பழனி செல்ல திருச்சிராப்பள்ளி கருர் வழியாக செல்ல இருவரும் முடிவெடுத்தனர்.அதன்படி திருச்சிராப்பள்ளி வர அங்கே காட்டுப்புத்தூரிலிருந்து வருகின்ற சாதுகள் தங்களுக்கு உண்டியும்,உணவும், அரை ரூபாயும் தந்த ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசுவதை கேட்டார் நம் சுவாமிகள்.தனக்கும் குளிருக்கு உடையும்,பணமும் கிடைக்குமென காட்டுப்புத்தூருக்கு வந்தார்.அவருடன் வந்தவர் சாவடில் இருக்க பிரம்மேந்திரர் மட்டும் ஊருக்குள் வந்தார்.
காட்டுப்புத்தூரில் தங்குதல்-
நாராயண பிரம்மேந்திரர் ஊருக்குள் வருவதைக்கண்ட சந்திரசேகரப் பிள்ளை,செவ்வைத்தியலிங்கம் பிள்ளை,சஞ்சீவி உபாத்தியாயர் என்ற மூன்று உள்ளூர் வாசிகள்,அவருடன் பேசி மகிமையை அறிந்து கொண்டார்கள்.தங்கள் ஊரிலேயே தங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்ள,பிரம்மேந்திரரும் சம்மதம் தெரிவித்தார்.அந்த மூன்று பேரையும் காட்டுப்புத்தூர் மக்கள் மிகவும் மதிப்புடன் மரியாதையுடனும் ஞாபகம் வைத்துள்ளார்கள்.காட்டுப்புத்தூர் மக்களின் அன்பைக் கண்டு பழனி செல்லும் முடிவை மறந்தார்.ஊர் மக்கள் அமைத்து தந்த குடிலில் வசிக்கலானார்.
சமாதியடைதல்-
காட்டுப்புத்தூரில் அறுபத்து மூன்று வருடம் வாழ்ந்து பல்வேறு அதிசியங்களை நிகழ்த்தினார் பிரம்மேந்திரர்.நூற்றி இருபதாவது வயதில் ஈசனிடம் கலந்து பிறவியை முடிக்க எண்ணினார்.அதனால் எதையும் உண்ணாமல் இருந்தார்.பிறகு கலியுகம் 5012 விரோதிகிருது வருடம் மாசி மாதம் 28ம் தேதி வாரம் கோட்டை நட்சதிரத்தில் அடியார்கள் புடை சூழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே உடலை விடுத்து ஈசனை அடைந்தார்.
சிறப்பு-
பசிக்கும் போது ஒருபிடி மணலும்,நீரும் மட்டும் உண்டு உயிர்வாழ்ந்த ஒப்பற்ற துறவி.இவ்வாறு பதினைந்து வருடங்கள் இருந்ததாக கூறுகிறது இவரைப் பற்றிய பிரம்மேந்திரகீதம் என்னும் நூல்.
துயரமென்று யார் வந்தாலும் நல்வார்த்தைகள் கூறி,அவருடைய துயரங்களை அகற்றும் சாது.
அப்பாதுரை பிள்ளை என்பவர் தம் மனைவிகள் இருவருக்கும் குழந்தையில்லாமல் போக பிரம்மேந்தரிடம் வேண்டினார்.அதன் பிறகு அவரின் ஒரு மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கோட்டையம்மாள் என்னும் பெண்மணி வேகவைத்த துவரம் பருப்பையும் சர்க்கரையையும் நெய்யும் சேர்த்து தினமும் பிரம்மேந்திரருக்கு தருவார்,அவரும் அதை அன்பு கூர்ந்து ஏற்றுக்கொண்டார்.ஒரு முறை 15 படி அரிசி சமைத்து ஊரிலிருக்கும் மக்களுக்கு அன்னமிட்டார்.அப்போது பிரம்மேந்திரரையும் அழைக்க அவரும் ஒரு கொட்டாங்கட்சி அளவு அன்னம் மட்டுமே உண்டார்.
செல்லும் வழி-
காட்டுப்புத்தூருக்கு செல்ல நாமக்கலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கிறது.
திருச்சியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.என்றாலும் நேரடி பேருந்துகள் குறைவு.எனவே திருச்சியிலிருந்து சேலம் அல்லது நாமக்கல் செல்லும் பேருந்துகளில் ஏறி தொட்டியம் என்னும் ஊரில் இறங்கினால்,ஏகப்பட்ட பேருந்துகள் காட்டுப்புத்தூருக்கு உள்ளன.
கரூரிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.அதிலும் வேலூர்,மோகனூர் வந்துவிட்டால் இன்னும் அதிக பேருந்துகள் கிடைக்கும்.
நன்றி-
வரலாறுக்காக பிரம்மேந்திரகீதம் புத்தகத்திற்கும்,
இதர தகவலுக்காக என் அன்னை மருதாம்பாள் தமிழாசிரியைக்கும்.

தமிழ் எண்கள்

நம்மில் பலருக்கு தமிழில் எழுத்துகள் இருப்பதைப் போல எண்களும் இருக்கின்றன என்பது தெரியாது.நாம் ஆங்கிலத்தின் பிடியில் சிக்கி நாட்கள் பல ஆகின்றன.சென்றதைப் பற்றி பேசுவதில் பலன் இல்லை என நினைப்பவன் நான்.இதுவரை அறியாததை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா.உங்களின் உதவிக்காக இந்த இடுகை.


நம்முடைய தமிழைப் பொருத்த வரை சுழிக்கென (பூஜ்ஜியத்திற்கென) தனியாக எண் இல்லை.அதற்கு பதிலாக 10,100 மற்றும் 1000க்கென தனியான எண்கள் உள்ளன.தமிழுடைய எண்களும் அதனுடைய எழுத்துக்களைப் போலவே இருக்கின்றன.சில எண்கள் தமிழ் எழுத்துகளின் பின்பமாக இருக்கின்றன.


எடுத்துக்காட்டாக 3782 என்பதை எடுத்துக் கொள்வோம்.இதை ௩௭௮௨ என்று நவீன முறைப்படியெல்லாம் எழுத முடியாது.அதற்கு பதிலாக ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨ என்று எழுதுவது சாலச் சிறந்தது.படிக்கும் போது எப்போதும் போல மூன்றாயிரத்து எழுநூற்றி என்பத்தி இரண்டு என படிக்கலாம்.


கீழே இருக்கும் பட்டியல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இதை படிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள்,பயண்பாட்டிற்கும் கொண்டு வாருங்கள்.


௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

பெரியசாமி

சங்கிலி கருப்பு,முனி,பெரியசாமி,பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணன் தான் எங்கள் குல தெய்வம்.மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது.சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் பெரியண்ணன்.திருச்சி,நாமக்கல்,துறையூர் என பல மாவட்டங்களில் பெரியண்ணன் கோவில்கள் இருந்தாலும்.இங்குள்ளதுதான் மூலம் என்கின்றனர்.மற்ற இடங்களின் சாமியின் உத்திரவுவாங்கி அடிமண் எடுத்து கோவில்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன.

சோழிய வெள்ளாளர் சமூகத்திற்கும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்திற்கும் பெரியண்ணன் குலதெய்வமாக விளங்குகிறார்.

கொல்லி மலை-

நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை.கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது.பசுமையை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு அளவிடமுடியாத அளவிற்க்கு மகிமைகள் கொண்டுள்ளது.எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.இங்கே மின்சாரமே இல்லாத சில கிராமங்களில் கூட இருக்கின்றன என்னுஞ் செய்தி வியப்பை தருகின்றது.இதன் பெருமைகளை முன்பே நாம் கண்டுவிட்டோம்.

மாசி குன்று-

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.அது மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.அதன் வரலாற்றை கேட்டறிய சற்று சிரமமாக இருந்தது.எட்டு நூற்றாண்டுகளை கடந்து இன்றும் அக்கோவில் சிறப்பாக இருக்கின்றது,என்ற செய்தி கேட்டால் உச்சி சிலிர்க்கின்றது.அந்த வரலாற்று கதை இதுதான்.

காசியிலிருந்து பார்வதி தேவியும்,பெருமாளும் தென்திசை நோக்கி வந்தனர்.பார்வதி தேவி காமாட்சியாகவும்,பெருமாள் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர்.துரையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார்.பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது.அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன்.அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது.இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார்.

மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர்.அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.

வேண்டுதலுக்காக வேலில் கோழிகள்மூலிகை குச்சிகள்மூலிகை
மாசி பெரியசாமி கோவில்
அன்ன காமாட்சியம்மன் கோவில்
கல்லாத்துக் கோம்பு-

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதயாகும்.வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார்.காமாட்சியின் தெய்வதன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்ய வில்லை.கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற,பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை-

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம்.சிவனுக்கு கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல்.ஏதேனும் தீய எண்ணங்களை மனதில் வைத்து வருபவர்களை தன்னுடைய மாய சொருபங்களால் மயக்கி கொன்றுவிடுவாள் இந்த பாவை.பாவை என்றால் பெண் என்று பொருள். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.இதன் ஆலையம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது.தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

வேண்டுதல்கள்-

1. பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
2. தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
3. உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
4. ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
5. படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
6. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
7. மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்-

மூலிகை மலை என்பதால் ஏகப்பட்ட மூலிகைகள் கிடைக்கின்றன.பல் வலிக்கு,மன நோய்க்கு என மூலிகைகளை தருவதோடு பயண்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர்.

ஆண்மைக்குறைவு, வெள்ளைப் படுதல் போன்றவைகளுக்கும் இங்கே மூலிகைகளை விற்கின்றார்கள்.

முக்கனிகளும் கிடைக்கின்றன.மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
அசைவப்பிரியர்களுக்கு இங்கே கொண்டாட்டம் அதிகம்,இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.

புதிர்-

சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர். பெரியண்ணனின் வழிபாட்டு முறைகள் சிவ வழிபாட்டை சார்ந்தே உள்ளது.சிவராத்திரி மகிமையாக கொண்டாடப் படுகின்றது.திருநீரு பிரசாதமாக தரப்படுகின்றது.நமது மரபுப் படி திருமணம் ஆன பெண் கணவனோடு மட்டும் தான் வெளியே வருவாள்.எனவே அவர்கள் சிவனும் பார்வதியும் என்றே அடித்துக் கூறுகின்றனர்.மேலும் சித்தர்கள் வாழ்வதாகவும்,பெரியண்ணனை வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள்-

சிவம் இருக்கும் இடத்தில் சித்தர்கள் இல்லாமலா.இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சித்தர்களை பார்த்ததாக சொல்லும் சில கிராமத்துவாசிகள்.பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையு;ம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வது எப்படி-

நாமக்கலிருந்து அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும்.

அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும்.இந்த பாதையில் ஓடையொன்று உள்ளது.அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் வந்துவிடும் பெரியண்ணசாமி கோவில்.

இதைப் படிக்கும் அன்பர்கள் பெரியண்ணன்,காமாட்சி,கருப்புசாமியின் குல வாரிசாக இருந்தால் முடிந்த மட்டும் கொல்லிமலைக்கு சென்று சாமியை தரிசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கொல்லி மலை

கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்கொல்லி மலை-மாசிக் குன்றுகொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.