தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

புதன், 17 நவம்பர், 2010

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல்

கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை. மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள்.

என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபடல்களும் மறதியும் இயல்பாகவே இருக்க கூடும்.

இந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள் தமிழில் வெளியாகி உள்ளன. இவை ஆங்கிலத்தில் ஒரே தொகுப்பாக வெளியாகி உலக இலக்கிய பரப்பில் கவனம் பெற வேண்டும் என்பதே எப்போதும் உள்ள விருப்பம்.

இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன. இது புதிய வாசிப்பிற்கான அடையாளம் காட்டும் முயற்சி மட்டுமே. அக்கறை உள்ள வாசகன் நிச்சயம் இதிலிருந்து தனது வாசிப்பின் தளங்களை விரித்துக் கொண்டு செல்ல முடியும்.

- எஸ்.ராமகிருஷ்ணன்.

நூறு சிறந்த சிறுகதைகள்

1. காஞ்சனை – புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் – புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்
11. பாயசம் – தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி
15. கோமதி – கி. ராஜநாராயணன்
16. கன்னிமை – கி.ராஜநாராயணன்
17. கதவு - கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது – பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜூவிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்
51. ஓடிய கால்கள் – ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி
54. ரீதி – பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து – திலீப்குமார்
62. கடிதம் – திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

கிராம தேவதைகள்

முனியம்மா -

ஐம்முனிகள் -

மதுரைவீரன் மனைவிகளுடன் -

லாட சன்னாசி -


வீர, தீர செயல்களுக்காக நம் முன்னோர்கள் சிலரை கிராம தேவதைகளாகவும், தெய்வங்களாகவும் வணங்கியிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தேடும் போது, சோகங்களும்,வீரங்களும் நிறைந்த அற்புதத்தினை காண முடிந்தது. அவர்கள் எதற்காக தெய்வமானார்கள் என்ற தேடுதலின் விடை அவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.

அந்த அற்புதத்தினை அறிய சகோதரன் வலைப்பூவிற்கு வாருங்கள்.

தமிழ் மண்ணின் சாமிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

வியாழன், 22 ஜூலை, 2010

இரண்டு குழந்தைகள் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனை சிறுகதைகளின் அரசன் என்று சொல்லலாம். அவரின் பல கதைகளில் இரண்டு குழந்தைகள் கதை எனக்கு மிகவும் பிடிக்ககும். அதை இங்கு பகிர்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன.

சேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா?....

முதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி.

மழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன?....

பகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, "நீ தின்னுடா ஐயா...." என்று சொன்ன பிறகு தான் தின்பான்.

விறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள்.

மாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள்.

அந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான்.

அந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள்.

சுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது.

திண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார்.

"அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு"

சுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார்.

"என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ? இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள்.

அதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார்.

கஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார்.

"என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே?..." என்று புருவத்தை உயர்த்தினார்.

அம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

"காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்...." என்று இரைந்துவிட்டு உள்ளே போனாள்.

"ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி.

"அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு."

"எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி...." என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:

"ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு" என்று முணகியபின், உரத்த குரலில்....

"அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது...." என்று சொன்னார்.

"ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள்.

அம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும்.

ராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து "பஞ்சம் பிழைப்ப"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி.

பெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்'

ஆனால் இப்போது....

முறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை.

இடுப்புக் குழந்தையும் தாயுமாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதாவது வேலை தேடி வருவதாகச் சொல்லி, வடக்குச் சீமைக்குப் போன அவள் புருஷன் கருப்பையாத் தேவனின் முகதரிசனம் ஆறு மாசமாகியும் கிடைக்கவில்லை.

அன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது.

பிள்ளை பசியால் துடித்தான்.

அவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி.

"ஒங் ஐயா எங்கலே...." என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி.

"ஐயா...ஓ....போயித்தாரு..."

"எப்பலே வரும் ஒங்க ஐயா..." என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான்.

"ஆத்தா...ஐயா....ஊம்" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது.

"ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்...." என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

இந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது----

"ஆத்தா...கஞ்சி....கஞ்சி..." என்று குழந்தை பறந்தான்.

மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி.

சுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார்.

"என்ன சேப்பி?..."

"இன்னக்கி விசேஸங்களா சாமி?"

---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள்.

"என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா?... அதான்...ஹி...ஹி...."

---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர்.

உள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது.

"யாரது சேப்பியா....?"

"ஆமாங்க."

"சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா...." என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து,

"இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'..." என்றார் ஐயர்.

குழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து "ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா?..." என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி.

'சரி' என்று சமர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன்.

சந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான்.

பையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம்.

உள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன்.

"ஏண்டா கண்ணா அழறே? இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ" என்று பேரனை அழைத்தார்.

"மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை.

"அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ?....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ?" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர்.

சோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்'

---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு...

"ஏண்டா சிரிக்கிறே? அப்படியே போட்டேன்னா..." என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். "அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா?"

---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன்.

"இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின்,

"சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள்.

"என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு? இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ?..." என்று அரற்றினார் ஐயர்.

"இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...?"

"சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார்.

"ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா?" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே.

---பையனுக்கு புரியவில்லை.

"மிட்டாயிடா...மிட்டாய், வேணுமா?"

மிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான்.

"அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்...." என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர்.

சோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்....

"எலே...எலே...போடுலே கீளே----தூ...." என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். "துப்புலே.... துப்பு..." என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள்.

"நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா?..." என்று முதுகில் அறைந்தாள்.

"கொழந்தேயெ அடிக்காதே சேப்பி..." என்றார் ஐயர்.

"இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்..." என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து "இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' " என்று சமாதானமாய்க் கேட்டாள்.

பையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, "சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு..." என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள்.

"ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா?... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்..." என்று கோபமாய்க் கேட்டாள்.

"என்னடி அது சத்தம்?" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள்.

"நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி..." என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி.

"நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு?"

"ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா?...." என்று எழுந்து வந்தார் ஐயர்.

"எம்மவன் வறவனுக்கு பொறந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி..." ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி.

ஐயர் அசந்து போனார்'

"ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா?... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ..." என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர்.

"இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்..." என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் "எல்லாம் என் கர்மம், என் கர்மம்' " என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி.

உள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின.

"அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு..." என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது.

மறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தமிழ்மணம் பற்றி தெரிந்தவர்கள் உதவுங்கள்

என்னுடைய சகோதரன் தளத்தில் என்னுடைய எண்ணங்களை பதிந்து வருகிறேன் என உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் என்னுடைய அந்தத் தளத்தினை தமிழ்மணம் இணைக்க நிராகரித்துவிட்டது. ஒரு முறையல்ல பல முறை. காரணங்கள் எதுவும் எனக்கு தெளிவாக புலப்படாத போது. வயதுக்கு வந்தோருக்கான இடுகளைகள் தான் காரணம் என எனக்கு நானே சமாதானம் செய்துக் கொண்டேன்.

ஆனால் என்னுடைய சகோதரன் இணையதளத்திலிருந்து பதிவுகளை திருடி தங்கள் இணையதளத்தில் இட்டிருந்த இரண்டு தளங்களையும் தமிழ்மணம் இணைத்திருப்பதாக தெரிகிறது.

இதைப் பற்றி சகோதரனில் பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை – சகோதரன் ஜெகதீஸ்வரன் என்றொரு பதிவிட்டேன்.

அதில்,...

என்னுடைய இடுகை -

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்

திருடப்பட்டது -
இடிமுழக்கம்,…

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+)

என்னுடைய இடுகை -
அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள்

திருடப்பட்டது -
மகாராஜாவில்,…
அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள்
இரண்டு இணையதளங்களும் திருடியவை வயதுக்கு வந்தோருக்கான இடுகைகளை. அவர்களுக்கு அனுமதி வழங்கிய தமிழ்மணம் எனக்கு அனுமதியளிக்கவில்லை. இதைப் பற்றி என்னால் சரியான முடிவுக்கு வர இயலவில்லை. அதற்கு காரணம், எனக்கு அதன் சேர்க்கை விதிமுறைகள் தெரியாமல் இருப்பதே,... இருந்தும் மீண்டும் ஒரு முறை முயன்றேன்.


Dear ஜெகதீஸ்வரன்,
Your blog is Rejected by tamilmanam.net, Administrator due to follwing reason

திரு. ஜெகதீஸ்வரன்
உங்களின் மற்றைய பதிவுகளை அனுமதித்திருக்கிறேன். இக்குறித்த \'சகோதரன்\' பதிவினை எத்தனைமுறை அனுப்பினாலுங்கூட, உள்ளடக்கத்திலே விலக்கப்பட்டபோதிருந்த இடுகைகள் இருக்கும்வரை நான் அனுமதிக்கப்போவதில்லை. அவ்விடுகைகள் விலக்கப்பட்டால்மட்டுமே அனுமதிக்கப்படமுடியும்.

இருவருக்கும் நேரத்தினை வீணடிக்காதீர்கள். நன்றி.

-/இரமணிதரன், க.
தமிழ்மணம் திரட்டிக்காக.

நிர்வாகி

என பதில் வந்தது.

சகோதரன் தளத்தை இணைக்க இயலாது நீங்கள் அனுப்பிய மின் மடலை படித்தேன். தங்கள் நேரத்தை வீணடித்தமைக்காக வருந்துகிறேன். மற்ற தளங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி!,...

சகோதரன் தளத்தில் உள்ள எந்த இடுகை தமிழ்மணத்திற்கு தகுதியை இழக்க வைக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய வலைப்பதிவிலிருந்து திருடப்பட்ட சில பதிவுகளை இட்டிருக்கும் வலைப்பூக்களை தமிழ்மணம் அங்கிகரித்திருப்பதாக அறிகிறேன்,..

இடி முழக்கம், மகாராஜா போன்றவை அந்த தளங்கள். இடிமுழக்கம் திருடிய பதிவும், மகாராஜா திருடிய பதிவும் கூட வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான உள்ளடக்கம் பொருந்தியதுதான். அவர்களை உங்களின் தமிழ்மணத்திலிருந்து நீக்க வேண்டுமென சொல்லவில்லை. அவர்களுடைய தளம் இணைக்கப்படிருப்பதால், என்னுடைய தளமும் இணைக்கப்படலாம் என்றே முயன்றேன். மன்னித்துவிடுங்கள்.

என்னுடைய வலைப்பூ தமிழ்மணத்தில் தகுதியிழக்கும் இடுகைகளை ஆய்வு செய்து விரைவில் நன்முறையில் இணைக்க முற்படுகிறேன். எந்த உள்ளடக்கம் இருக்க கூடாதென எனக்கு தெரியவில்லை. நேரமிருப்பின் சொல்லுங்கள். இல்லையெல்லால் நான் உங்களை தொல்லை செய்யப் போவதில்லை. கண்டிப்பாக@..

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.


என பதில் மின்மடல் அனுப்பினேன். ஆனால் சென்று சேரவில்லை. எனவே தனியொரு இடுகையாக இங்கு இட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ் மணம் நிர்வாகிகளோ, தமிழ்மண பயணாளர்களோ சேர்க்கை விதிகளை கூறினால் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்

jagadees1808@gmail.com

சனி, 26 ஜூன், 2010

விரதம் என்பது எது? -அவ்வையார்

* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.
* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.
* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல்
ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
-அவ்வையார்

கலைஞர்தான் தமிழுக்கு காப்பு - வாலியின் கவிதை

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்‌னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

- கவிஞர் வாலி

ஞாயிறு, 20 ஜூன், 2010

ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியின் அவலம்என்னுடைய பள்ளி என பெருமை கொள்ளும் காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி சமீபகாலமாக சரியில்லாத நிர்வாகத்தினால் அழிந்து போகும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதைப் பற்றிய வேதனை மிகுந்த முன்னாள் மாணவனின் புலம்பல், இது.

தோற்றம் -

காட்டுப்புத்தூரை தலைமை இடமாக கொண்டு நிகரில்லாத அதிகாரத்தினை அங்கு வசிக்கின்ற ஜெமிந்தார்கள் கொண்டிருந்தார்கள். ஆண்டைக்கும், அடிமைக்கும் இடையேயான வேறுமைகளை கழியும் வகையில் சிதம்பர ரெட்டியார் என்ற மாமனிதர் உதித்தார். கல்வியே மக்களின் சொத்தென உணர்ந்தவர்.

கி.பி 1903 ஆம் ஆண்டு காவேரிக் கரை கிராமமான சீலைப்பிள்ளையார் புதூரில் ஜெமிந்தார் மேல்நிலைப் பள்ளியை தொடங்கினார். கடந்த 2003 ஆண்டோடு நூற்றாண்டைக் கடந்த இந்தப் பள்ளி, மெதுவாக வீழத்தொடங்கியுள்ளது.

ஆசிரியர்கள் -

வகுப்பிற்கு அறுபது முதல் எழுபது வரை நான் படிக்கும் காலத்தி்ல் இருப்போம். ஆரம்பகாலத்தில் முறையான ஆசிரியர்களும், கல்வியாளர்களும் இருந்தார்கள். பள்ளியின் மேல் வழக்குகள் நடந்து கொண்டிருந்ததால் ஆசிரியர்கள் ஓய்வு பெருவது மட்டும் தொடர்ந்தது. அந்தக் காலி இடங்களில் புதிய ஆசிரியர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. ஆசிரியர்களின் பற்றாக் குறையினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இப்போதும் பாதிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

கட்டிடங்கள் -

மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள், அந்தக் காலத்தில் கட்டப்பட்ட குதிரை லாயங்களும், மாட்டுத் தொழுவங்களும் என்பது பல மாணவக் கண்மணிகளுக்குத் தெரியாது. நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட அவைகளின் தரம், பரமரிப்பின்றி எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். லேசான மழைக்கே இடிந்து விழும் அபாயங்கள் இருப்பினும், யாரும் அதைக் கண்டுக் கொள்வதில்லை. பள்ளிக்கு விசிட் அடிக்க வந்த அதிகாரி பார்த்து பதரிப் போய், அந்தப் பகுதியில் இருந்து மாணவர்களை வெறியேற்றி இருக்கிறார்.

கழிவறை வசதிகள்-

நான் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கென தனியான கழிவறைகள் இல்லை. மாணவிகளுக்கு இருந்தமையும் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்த இயலாததாக இருந்தது. இன்னும் இந்தக் குறைகள் சரி செய்யப் படவில்லை என்பது கூடுதல் வேதனை. சுகாதரமின்மை எந்தளவு தங்கள் குழந்தைகளைப் பாதிக்கும் என கிராம மக்களுக்கு தெரிவதில்லை. முறையான நேரத்தி்ல் கழிவுகளை அகற்றாமல் வருகின்ற வியாதிகளுக்கு அளவே இல்லை.

ஆசிரியர்களை அகற்றும் அவலம் -

இந்த விசயங்கள் பொதுமக்களிடம் கசியத்தெடங்க, மாணவர்களின் சேர்க்கையும் மிகக் குறைந்து போனது. மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு ஆசிர்கள் எதற்கென அவகளின் பணி இறுதி அடிப்படையில், அதாவது கடைசியாக சேர்ந்துள்ள ஆசிரியர்களின் வகையில் நீக்கம் நடைபெருகிறது.

மாவட்ட ஆட்சியாலரின் நேரடி தலையீடு -

சரியாக நிர்வாகம் செய்யதா ஜமிந்தார் வாரிசுகளை அழைத்து மாவட்ட ஆட்சியாளர் பேசியிருப்பதாக தகவல். அதனால் மீண்டும் பழைய பெருமைகளுடன் பள்ளி நடக்கும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர்.நல்லது நடந்தால் மிக்க மகிழ்ச்சி@

மேலும் காண்க -

விக்கிப் பீடியாவில் காட்டுப்புத்தூர் கட்டுரையில் என் பங்கு!.

காட்டுப்புத்தூர்

வியாழன், 13 மே, 2010

கன்னி தமிழும் கணினி தமிழும் தவழும் வலைப்பூக்கள்

வின்மணி

அனூப்புடன் ஒரு ஐடி வலம்

தமிழ் வெஃப்

மாணவர்களுக்காக

வேலன்

PKP.in

உபுண்டு

தமிழ்நுட்பம்

கணினி மென்பொருட்களின் கூடம்

தகவல் தொழில்நுட்பம்

அதே கண்கள்

வன்னி தகவல் தொழில்நுட்பம்

கற்றது Excel

Tamil Blogging Tips

புதுவை

கிராமத்து பையன்

தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்

சூர்யா ௧ண்ணன்

Vijidon

மகரிசி சிந்தைனைகள்உடலுக்கும், மனதிற்கும், சமூகத்திற்கும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்ன பல உயர்வான சிந்தனைகள் இங்கே.

தீய
எண்ணங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். நீங்களே முயற்சி செய்து ஒருநல்ல எண்ணத்தை தொடர்ந்து மனதில் வைத்திருங்கள். தீய எண்ணம்வருவதற்கு இடமிருக்காது.
  1. பிறப்பு, இறப்பு நடுவே பூவுலக வாழ்வு இதை
  2. மறந்த நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
  3. மனிதன் இறைநிலை உணர்ந்து, அறவழிகண்டு, பொருட்களையும்பாலுறவையும் துய்த்து வாழ்ந்தால்தான் தனி மனிதனிடத்திலும் சமுதாயத்திலும்அமைதி நிலவும்.
  4. நான் திருந்தி என்ன பயன்? அவர் திருந்த வேண்டாமா? என்று நினைக்காமல்முதலில் நம்மை திருத்திக் கொள்வோம். அடுத்தவர் தாமே திருந்திவிடுவார்..!
  5. பாவப் பதிவுகளைப்போக்கி அறிவில் மேலோங்க வேண்டியதே பிறவியின்நோக்கம்.
  6. நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால், தீமைகளை ஒழிக்கவில்லை என்றால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்?

செவ்வாய், 11 மே, 2010

அரவாணிஇப்போதெல்லாம்

கோவில் பிச்சைக்காரர்கள்

வார்த்தைகள் சொல்லி

கைகளை நீட்டி

பிச்சை கேட்பதில்லை!


பாவம் செய்தவர்கள்

விரிந்து கிடக்கும் துண்டில்

காசுகளை ரொப்பி செல்கின்றார்கள்!.


ஆனால் இவர்கள் மட்டும் தான்

பாவாடையை தூக்கி காண்பித்து

எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்

பிச்சையை!

திருங்கை திருமண தளம்

திங்கள், 10 மே, 2010

தயவுக் குறள் - சுவாமி சரவணானந்தா

கொல்லாமையை உலகிற்கே உணர்த்துகின்ற சைவ நெறியில், தயவின் பெருமையை உறைக்க சுவாமி சரவணானந்தா இயற்றிய தயவுக் குறள் இங்கே....முதல் அதிகாரம் - தயா நெறி


1.

தயாமூல தன்மநெறி தானோங்க ஓங்கும்
நியாயநிறை யின்பம் நிலைத்து

குறிப்பு விளக்கம்.

தயவு மூலமாகத்தான் மனித சமூகம் ஒன்றுபட்டு வாழ்ந்து பேரின்ப நிலை அடைய வேண்டியுள்ளது. அன்பும், அறிவும் நிரம்பிய உள்ளுணர்வு தான் இங்கு தயவாகக் குறிக்கப்படுகின்றது. இத் தயவு நெறி தானே, சுத்த சன்மார்க்கமாக யாவரும் உரிமையோடு ஏற்று வாழ்ந்து இன்புறலாகும்.

எல்லாம் வல்ல தயாபெரும் சக்தியை, தயாபரன். தயாசாகரன், தயாமூல பண்டாரம் முதலான கடவுள் தத்துவப் பெயர்களால் குறிக்கலாகும். இப் பதியின் உண்மையை அறிந்து அடைதற்குச் சுத்த தயவு ஒன்றே உண்மை வழி என்று அறிந்து கொள்ளலாகும்.

தயா வாழ்வினால் வரும் இன்பம் ஒன்றே உண்மையான. நியாயமான இன்பம். இதுவே நிலைத்து ஓங்கி வளர்வது.


2.

எண்குணத்தான் ஐந்தொழிலான் யான்காண் தயவாகி
உண்மலர்ந்த(து) இன்றுஇருபத் தொன்று.

கு. வி.

தயவு ஒளி நெறி உள்ளிருந்து உதித்து உலகில் நிரம்பக் கண்டு கொள்ள நேர்ந்துள்ளது. இது சமயம், உலகில் நிறைந்த தயா ஜோதியே, எண்குணத்தான் என்றும். ஐந்தொழிலான் என்றும் காண்கின்றோம்.

தயா உணர்வினாலே கருதி, அத்தயவினாலே அறிந்து கொள்ளப்பட உள்ள கடவுள் தத்துவம் தான் இங்கு எண்குணத்தான். எண்ணத்தகு தன்மையன் எனவும், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐஞ்செயல் புரிகின்றவன் எனவும் தெளியலாகும்.

இருபத்தொன்று என்றதின் விளக்கம்.

இரு-பெரிய, பத்து-பற்று, ஒன்று-பொருந்து. அதாவது, அக மலர்ந்த தயவு ஒளி நமக்கு பெருங் கடவுட் பற்றைத் தந்து அதனோடு ஒன்றுபடச் செய்வதாம்.

மேலும் இத்தினம், (இக்குறள் வெளிப்பட்ட நாள்) 2.1.1956. இது 2-ம், 1-ம் நாளும் மாதமுமாகி நிற்க (1+9+5+6) 21-ஆண்டு எண்ணைக் குறிப்பதாம்.

அன்றியும், நமது ஆன்மா யகரமாகிய பத்து என்ற எழுத்து எண்ணால் குறிக்கப்படுவதால், சீவான்ம பரமான்ம ஐக்கிய நிலையை இருபத்து ஒன்றாகக் கொள்ளலாகும்.

சைவ ஆகமத்தில், சிவகுணம்-8, சீவகுணம்-8. அது,


சிவகுணம் -

1. தன் வயத்தன் ஆதல்

2. தூய உடம்பினன் ஆதல்

3. இயற்கை உணர்வினன் ஆதல்

4. முற்றும் உணர்தல்

5. இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்

6. பேரருள் உடைமை

7. முடிவிலா ஆற்றலுடைமை

8. வரம்பிலின்பமுடைமை

சிவகுணம், ஜீவகுணம் எட்டெட்டாகவும் ஐந்தொழில் கொண்டு சிவம், ஜீவனைத் தன்மயம் ஆக்கிக் கொள்வதும் குறிக்கப்படும். ஆதலால், இந்த (8+8+5-ம்) இருபத்தொன்றையே குறிப்பதாம்.

அன்பு மதம் எனப்படும் இசுலாத்தில் பிறைக்குறியின் அடியிலிடும் 786ம் இருபத்தொன்றே.

கிறிஸ்துவ உண்மையும் இதுவே என்பதை, ஏசுவை 18 அடி சிலுவையில், ஒன்றில் மூன்றாம் (திரி ஏகத்துவம்) அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை அச் சிலுவையில் சேர்த்துள்ளனர். இதனால் (18+3=21) அதுவும் 21 ஆம்.

இவை போன்று பிற மதத்தும் காணலாம். ஆதலின், இச் சுத்த தயா நெறிக்குள் எந்நெறியும் அமைவதாம்.


3.

புலையகப் பற்றறுத்துள் தங்கித் தயவால்
உலகில் மகிழ்ந்து வொளிர்

கு.வி.

தயவு மார்க்கத்தில் ஒழுகுபவர்கள் உள் உணர்ந்து தயவு செய்தல் வேண்டும். யாவரிடத்தும் தடைபடாத் தயவு செலுத்தற்கு தேகப்பற்றை முதலில் ஒழித்தல் வேண்டும். அப்பொழுதுதான் செய்பணியாவும் கடவுளுக்கே புரியும் தொண்டாகும். இதனால் பெரு நலத்துடன் விளங்கலாம்.


4.

ஒன்றுநீ யல்லை உனையன்றி யொன்றில்லை
என்றுநீ காட்டினை யின்று

கு. வி.

முன் குறளில் குறித்த தேகப்பற்று அறுதற்காக, உண்ணின்று நம் பதி உணர்த்துவது இதுவாகும். யாதெனில், என்றும் உள்ளது, ஒன்றாகிய மெய்ப் பொருள் ஒன்றே. அது, உன்னால், உன்னில் அறியப்படுவதல்லாமல், பிற இடத்தில் காண்டற்கில்லை என்றும், ஆனால், இப்பொழுது அந்த ஒன்று நீ அல்ல, புலை உடம்பின் பற்றால் சரீரியாக இருக்கிறாய் என்றும், அப்பற்று அற்றால்தான் அசரீரியாக உள்ள அந்த உன்னை நீ கண்டு கொள்ளுவாய் என்றும் உணர்த்தப்படுகின்றதாம்.

இதனால் தேகப்பற்றற்று தயா நெறியில் தழைப்போமாக.


5.

ஆன்மசிற் றம்பலத் தாரு மதுவேயின்
றூன்மே வுருவா யுணர்.

கு. வி.

சிற்றம்பலமாகிய ஆன்மாவில் பொருந்தி விளங்குகின்ற ஒன்றுதானே, இன்று இத்தேகத்தில் நிறைந்து, உணர்வில் கலந்துள்ள உண்மை அறியப்படுகின்றது. இவ் வுண்மை அறிவால் தேகப்பற்று நீங்கி, கடவுட் பற்று உண்டாகின்றது. அதோடு தயவு நெறியும் வெளிப்படுகின்றது.


6.

நந்தா வொளிமலராம் நம்பதியே உண்ணின்றே
ஐந்தாய் விரிந்த தறி.

கு.வி.

மன்னகத்தே நித்தியமாய்த் திகழ்கின்ற நமது தலைவர் ஒரு தயாபெருஞ்ஜோதி மலராவார். அவரது தயா பெருஞ்சக்தியே, மலர்களில் ஐந்து இதழ்களாய், நம் ஐம்பொறி உடம்பில் ஐம்புலனாய், விரல்கள் ஐந்தைந்தாய், பிராணன் – உப பிராணன் எனும் உயிர்க்காற்றும் ஐந்தைந்தாய், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் எனும் ஐந்து உணர்வு நிலையாய், புறத்தே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனும் நிலம் ஐந்தாய், சூழ் உலகெல்லாமான மகா பிரபஞ்சமாய் விரிந்துள்ளதாம்.


7.

கலைசேர் புனைசுருட்டுக் கற்பனையாற் கண்ட
திலையே நிறையா மியல்.

கு.வி.

உலக வாழ்வில் நிலையான இன்பம் அடைவதற்கு, சுத்த தயா நெறியே இயல் நெறியாக உள்ளது. இதனை விடுத்து, கலையுரைத்த கற்பனை மார்க்கங்களில் சென்றால் அழிவுதான் காண்கின்றோம். தயா நெறியால் உண்மை கண்டு பேரின்பில் நிலைத்தல் வேண்டும்.


8.

களிமயக் கீன்கலை காட்டாதே நல்ல
அளிசேர் அறிவு அலர்.

கு.வி.

அன்பும் அறிவும் ஓங்க தயவு நெறியிற் பயின்று அருட்கலையாக உலகியலை நடத்த வேண்டும். இப்படி அல்லாது பொறி மயங்கிப் புலனெறியால் கலை வளர்த்தால் பெரு நன்மை உண்டாகாது.


9.

சிற்பதளி யேமுதலாச் செப்புகலை நூலனைத்தும்
கற்பனையில் உற்பவமே காண்.

கு.வி.

வேத முதலான கலைகளுக்கு விளக்கந்தர எழுந்த சிற்ப கவின் நிறை ஆலயங்கள், அற்புத சின்ன வடிவங்கள் யவும் ஒருமை மனக் கற்பனையில் தோன்றிப் பெரு முயற்சியின் பயனாக வெளிப்பட்டனவாம்.

தயா நெறியில் செல்வோர்க்கு இக் கற்பனைகள் எல்லாம் பெருங்கடவுட் சக்தியின் சிற்றணுக்களாகத் தோன்றி, நிறையருட் பெருஞ்சக்தியைக் கண்டு கொள்ளச் செய்வனவாம்.10.

கண்ணாலே யோடுமனக் கண்ணாலே காண்பவெலாம்
எண்ணாதே யின்பளிப்ப தென்று.

கு.வி.

தயவு நெறியில், தயா வாழ்வில் பெறக்கூடிய இன்பமே உண்மை இன்பமாதலின், பிறவற்றைக் கண்ணுக்கினியனவாகக் கண்டு களித்தலும், மனோ கற்பனையில் கருதிக் கண்டு மகிழ்தலும் இன்பமல்லவாம்.

திங்கள், 3 மே, 2010

சிறந்த வலைப்பூக்களின் பட்டியல் -2

தமிழில் எழுதவும் படிக்கவும்

இணைய எழுதி
என்.எச்.எம்
அழகி
பாமினி
கண்டுபிடி
தமிழ்99
கலப்பை
புதுவை
கம்பன்
சுரதா
லதா
கௌமாரம்
ஜனா
யுனிகோட்
தொகுப்பு
தமிழுரு
தமிழ்நேசன்
உதவிக்குழு
தமிழ்வெளி


திரட்டிகள்

சங்கமம்
தமிழர்ஸ்
உழவு

www.namkural.com
www.newspaanai.com
www.thamilbest.com
http://nellaitamil.com/


தமிழ்மனம்
திரட்டி
தமிழிஸ்
தமிழ்வெளி
தமிழ்கணிமை
தமிழ் இணையம்
தமிழோவியம்
தேன்கூடு
மாற்று
கில்லி
ஸ்னேப்ஜட்ஜ்
மழலைகள்
வலைபூக்கள்

101 பதிவர்களின் வலைப்பதிவு


இலவசமாக தொலைப்பேசியில் பேச

அழியாச் சுடர்கள்

வச்சுட்டான்யா ஆப்பு…

சிறந்த வலைப்பூக்களின் பட்டியல்

பிரபலங்களின் வலைப்பூக்கள்

வினோதமான வலைப்பூக்கள்

சில பயனுள்ள வலைதளங்கள்

புதன், 28 ஏப்ரல், 2010

மாதா அமிர்தானந்த மயி சிந்தனைகள்
யாரையும் புகழ வேண்டாம்

* பிறரிடம் கூறி உங்களது கவலைகளைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள். கூறுவது என்று முடிவெடுத்தால் கடவுளிடம் மட்டும் கூறுங்கள். நம் கவலைகளை சர்வேஸ்வரனிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்.

* நான் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் இறைவனே செய்கிறார் என்ற உறுதியான உணர்வு கொண்டவன் எந்த இடத்திலும் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவன் எல்லா இடத்திலும் ஆண்டவனையே பார்க்கிறான்.

* நான் செய்கிறேன் என்ற எண்ணம் கொண்டவன் தான் செய்யும் நல்ல, தீய செயல்களுக்குப் பொறுப்பாளியாகிறான். அவனுக்கு எல்லாச் செயல்களையும் கடவுள் செய்விக்கிறார் என்ற எண்ணம் உண்டாவதில்லை.

* எச்செயலையும் இறைவனுக்கு அர்ப்பணமாக்கி செய்யத் தொடங்கினால் அச்செயல் புனிதமாகி விடும். சாப்பிடுவதாக இருந்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்த பின்பே சாப்பிடும் போது உணவு புனிதமாகி விடுகிறது.

* ஆன்மிக வாழ்வின் நோக்கமே நமக்கு சொந்தமில்லாதவற்றை உதறி விடுவதாகும். இதைத் தான் துறத்தல் என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு சொந்தமான கடவுளை மட்டும் பற்றி நிற்பதே உண்மையான ஆன்மிக நிலைப்பாடாகும்.

* யாரையும் புகழ வேண்டாம்.புகழ்ச்சியை விரும்பவும் வேண்டாம். புகழை விரும்பினால் நம்மை அறியாமலேயே அகங்காரம் வளர்ந்து விடும். என்றும் ஒரே நிலையில் இருக்கும் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழக்கூடாது.


உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்


* காற்றை நீங்கள் கண்ணால் காண முடியவில்லை என்பதால் காற்றே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இறைவனை நேரில் காண முடியாவிட்டால் இறைவனே இல்லை என்றாகிவிடுமா?

* சூரிய ஒளியின் சக்தியை ஒரு பூதக்கண்ணாடி வழியே ஒளிக்கிரணத்தை செலுத்துவதன் மூலம் அறியலாம். மனதை ஒருமுகப்படுத்தினால் தியானத்தில் இறைவனின் ஆற்றல் வெளிப்படும்.

* உங்களுடைய ஆத்மாவைக் காண விரும்பினால் வெளியே தேடக்கூடாது. உள்ளேதான் பார்வையைத் திருப்ப வேண்டும். இறைவனைத் தேடி எத்தனை தூரம் போவீர்கள், அவன் உங்களுக்குள் ஒளிவிடுவதைக் கண்டு கொள்ளாமல்.

* மூன்றாவது மாடியிலுள்ள அலுவலகத்தை அடைவது உங்கள் நோக்கம். அதற்கு லிப்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்கள்.

அதுபோல, அரூபமான இறைவனை அடைய உருவங்களையும், பெயரில்லாதவனை அடைய பெயர்களையும் பயன்படுத்துகிறோம்.

* ஒருவர் சரசரவென்று நேரடியாக மரத்தில் ஏறி மாங்காய் பறித்து விடுகிறார். இன்னொருவருக்கு துறட்டு தேவைப்படுகிறது. வேறொருவருக்கு ஏணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று, ஞானிகள் இறைவனுடன் நேரடித் தொடர்புடையவர்கள்; நாமோ இறைவனை படிப்படியாய் முயன்று அடைகிறவர்கள். அவரவர் பக்குவத்துக்கேற்ப சாதனம் தேவைப்படும்.

* நம் உறவினரின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவரையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. ''படத்தை ரொம்ப அருமையா எடுத்திருக்கிறார் போட்டோகிராபர்,'' என்போம். அதற்குமேல் போட்டோகிராபரோ, கேமரா நுணுக்கமோ நம் நினைவுக்கு வராது. அதுபோல் தான் இறைவனின் நற்குணங்கள் தெரியும். அவனை ஆராய வேண்டுமென்றால் முடியாது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இசுலாத்தில் தீண்டாமை

இந்து மதத்தில் மட்டும் தான் சாதி இருக்கிறது என்றார் பெரியார். அது கிறித்துவ மதத்திற்கும் இப்போது போய்விட்டது. இஸ்லாத்தில் இல்லை என்றார்கள். ஆனால் விக்கிப் பீடியாவில் இப்படியொரு கட்டுரை.

சாதியமைப்பு

அஷ்ரபுகளின் கிளைப் பிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்ஸ் அடையாளப்படுத்தப்படுகின்றனர். சையதுகள் நபிமுகமதுவின் வழித்தோன்றல்கள், ஷேக்குகள், அரபு, பாரசீக பூர்வீகத்தினர், மொகல்கள் துருக்கி, முகலாய ஆட்சிப் பரம்பரையினர், பதான்ஸ் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பகுதி பூர்வீகத்தினர் என்பதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அஷ்ரப் அல்லாதவர்களில் ஒரு பகுதியினர் அஜ்லபுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் பாரம்பர்ய மூதாதையர் தொழிலை செய்து வரும் சமூகங்கள் தாழ்ந்தவர்கள், புனிதமற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.


முஸ்லிம்களிடத்தில் நிலவும் மற்றுமொரு அடிநிலை சாதிப்பிரிவாக அர்சால்கள் உள்ளனர். தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களாக கருதப்படுகின்றனர். துப்புரவாளர்கள், உணர் மண்ணெடுக்கும் வண்ணார், நாவிதர், கழிவு சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அடிநிலை தொழில் செய்யும் முஸ்லிம்களாக அடையாளம் கொள்ளப்படுகின்றனர்.


இந்திய முஸ்லிம் பண்பாட்டு ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் தெற்காசிய முஸ்லிம் சமூகங்களில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் சாதீய படிநிலை கட்டமைப்பு உள்ளதாக குறிப்பிடுகிறார். வங்காளப் பகுதியில் குவாகஸ் குலம் சடங்கியல் ரீதியாக கீழ் படிநிலை அமைப்பினை கொண்டுள்ளது. மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் சார்ந்து நிறுவப்பட்ட சுத்தம் - அசுத்தம் கருத்தாகி அடிப்படையில் கீழ்நிலையினர்களாக சொல்லப்பட்டனர்.


ஒஞ்சிசாத் உயர்சாதி மற்றும் நீச்சிசாத் அடிநிலை சாதி உறவுகளும், இயங்கு முறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளன. அதிகார உரிமை கொண்ட உயர்சாதிக்குழுக்கள் ஜஜ் மன்ஸ் சலுகை பெறும் அடிநிலை வர்க்க சாதிக்குழுக்கள் காமின் (எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர்நிலை சாதியினரை அடிநிலை சாதியினர் தொட்டுவிட்டால் குளித்தல் சடங்கின் மூலம் அசுத்தம், சுத்தமாகிவிடுகிறது. இருபிவினருக்கும் மையவாடிகளும் தனித்தனியாகவே உள்ளன.


வங்காள முஸ்லிம்களிடையே நிலவும் பொதுஉணவு மறுப்பு, பொதுமையவாடி மறுப்பு, அகமணமுறை, தீட்டுக் கொள்கை கூறுகளை முஸ்லிம் ஆய்வாளர் எம்.கே.ஏ. சித்தீகு விளக்குகிறார். டபலிஸ் சாதியினர் லால்பெகிஸ் மக்களிடமிருந்து தண்ணீரோ உணவோ வாங்கிச் சாப்பிட மறுத்துவிடுவார்கள். சையதுகள் மற்றும் ஷேக்குகள் என்பதான உயர்சாதி முஸ்லிம் ஆண், அடிநிலை சாதியாக கருதப்படும் பிரிவின் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அடிநிலைப் பிரிவு முஸ்லிம் ஆண் உயர்சாதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முடியாது. முதல் நிலை பிரிவு கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் சையது சாதா மற்றும் ஷேக்சாதா என்று குறிக்கப்படுகின்றனர்.


இந்தியாவில் சூபி மரபுகளை தோற்றுவித்த ஞானிகள் பெரும்பான்மையும் அரபு பூர்வீக உரிச்மையைக் கோரும் சையதுகளாகவே இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். அரபு குறைஷி இனக்குழு தொடர்போ, அரபு பூர்வீகமும், நபிமுகமதுவின் வழித்தோன்றல் மரபோ அல்லது அரபு அல்லது பாரசீக பகுதியிலிருந்து வந்த அடையாளமோ, இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர் படைத்தலைவர் வாசுகளாகவோ சையதுகள், ஷேக்குகள், மொசல்கள், பதான்ஸ்கள் நால்வகை பிவினர்களும் அஷ்ரபுகளாக கருதப்படுகிறார்கள்.


ஷெரினாபட்டி மற்றும் இம்தியாஸ் அகமது ஆய்வொன்றில் அஷ்ரபு சாதியினர் தவிர்த்த அடித்தள முஸ்லிம்கள் பற்றி சுட்டிக்காட்டுகிறார். ஜ÷லாஹஸ் - நெசவாளர், தர்சிஸ் - தையலர், டோபிஸ் -வண்ணார் சாதியினர்களும் அடிநிலையில் நட்ஸ் எனப்படும் இறந்த மிருகங்களின் தோல்களிலிருந்து இசைக் கருவிகளை செய்பவர்களும் உள்ளனர்.


மேலும் இசைக் கலைஞர்களில் ஒரு பிவினரான மிராசிஸ் அஷ்ரபு உயர்சாதியினருக்காக, அவர்களைப்போல் உடையணிந்து பாவனை செய்து உருது மொழியில் கலைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகும். ஆனால் நட்ஸ் எனப்படுவோர் பொதுமக்கள் மத்தியிலும், வட்டார மொழி வழக்கிலும் இக்கலைகளை நிகழ்த்துகின்றனர்.


பஞ்சாபின் சிஸ்தி பாரம்பர்ய குலம் என்பதும் ஒரு வகையில் சாதியக் குழுவின் அடையாளமாகவே மாறியுள்ளது. இங்கு சூபி ஞானி பாபா பரீதுத்தீண்ட (1265) தர்காவை மட்டுமல்ல நிலங்கள் மற்றும் விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். சூபி சகோதரத்துவ உணர்வை இசையின் மூலம் பரப்பும் கவாலி இசைக் கலைஞர்கள் ஆன்மீகத் தன்மை கொண்ட அவர்களின் கவாலிப் பாடல்கள், இசைக்கருவிகளின் ஓசைகள் அனைத்தையும் இசைக்கும் இவர்கள் சூபிமரபின் தொடர்பை போற்றினாலும் உண்மையிலேயே தீண்டத்தகாத இசைக்கலைஞர்களாக கருதப்பட்டார்கள்.


உத்திரபிரதேசத்தில் முஸ்லிம் சாதி கலாச்சார தொடர்பு குறித்த தனது ஆய்வில் கெüஸ் அன்சா தீண்டத்தகாத சாதியாக கருதப்படும் பங்கிகள் கழிவு சத்தம் செய்பவர் பற்றி எழுதுகிறார். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு உள்ளோ, முஸ்லிம் ஞானிகளின் தர்காவிற்கு உள்ளோ பங்கிகளை நுழைய அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பங்கிகளுக்கு உள்ளே ஒரே உரிமை என்பது குர்ஆனை கற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே. ஆனால் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுப்பவர்கள் ஆக முடியாது. அஷ்ரபுகள், முஸ்லிம் ராஜபுத்திரர்களிடத்தில் பங்கிகள் தங்கள் பாத்திரத்திலேயே உணவு சாப்பிடவேண்டும். அது இல்லையெனில் மண்சட்டியில் மட்டுமே உணவு வழங்கப்படும். பங்கிகள் தண்ணீர் குடிக்கும்போதுகூட உதடுகள் ஜார்களில் பட்டுவிடக்கூடாது என்பதான வரைமுறைகளும் உண்டு[சான்று தேவை]. .


லீலாடூப் கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவுகளில் வாழும் மக்களின் சமூக படிநிலை குறித்த ஆய்வில் மூன்று விதமான அடுக்குகளை குறிப்பிடுகிறார். பழங்குடி முஸ்லிம்கள் 95 சதவிகிதத்திற்கு மேல் இங்குதான் வாழுகிறார்கள். நம்பூதிகள், நாயர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் காரணமானவர்களாக கோயாக்கள் உள்ளனர். சமயத் தூய்மையின் அடையாளமாக கருதப்படும் இவர்கள் நிலங்களின் ஏகபோக உமையும், போக்குவரத்து படகுகளின் உமையும் பொருளாதார வலிமை கொண்டதாக உள்ளது. அடுத்தப் பிவினராக உருக்கார்ஸ் மாலுமிகள் படிகோட்டி சாதியினராகவும், மிளசேரிஸ் மரம் ஏறும் தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.


கபோயவு) பவுத்தர், இந்துக்கள் அதிகமாக வாழும் நேபாளத்தில் நான்கு சதவிகிதமே வாழும் முஸ்லிம்கள் பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். காஷ்மீரத்து முஸ்லிம்கள் உயர்குடி அஷ்ரபுகளாக வாழ்கின்றனர். நாவிதத் தொழில், சுன்னத் செய்வதற்கு இந்திய முஸ்லிம்களிலிருந்து செலவு செய்து அழைக்கின்றனர். செல்வ நிலை உயர்ந்ததும் வேறு தொழிலுக்கு பெயர்ந்து விடுவதால், மீண்டும் புதிய நாவிதர்களை அழைக்கிறார்கள்.


காட்மண்டுவில் வாழும் அஷ்ரபுகள், காஷ்மீரிகள், சூபிஞானிகளின் கலாச்சார சடங்குகளை பேணுகின்றனர். ஆனால் பள்ளத்தாக்கில் வாழும் அடிநிலை முஸ்லிம்களுடனான உறவுகளை மறுக்கிறார்கள். ஹிந்துஸ்தானி என அழைக்கப்படும் இந்த முஸ்லிம்கள் பல்வேறு கைவினைத் தொழில் சாதி குழுக்களிலிருந்து வந்தவர்களாகும்.

பாகிஸ்தானிலும் சாதியபடி நிலை அமைப்பு இறுக்கமாகவே காணப்படுகிறது. வடபாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் முஸ்லிம் சமூகம் குவாம்கள் குழுக்களாக தொழில் அடிப்படையில் பிரிந்துள்ளன. குழுக்களுக்கிடையிலான திருமணம், ஒன்றாக வாழ்தல் என்பவை மேல் - கீழ் பாகுபாடுகளால் பாதிப்படைந்தும் உள்ளன. மனிதக் கழிவுகளோடு தொடர்புடைய தொழில்களைச் செய்வோர் அடிநிலைப் பிவாகவே கருதப்படுகின்றனர். அடிநிலை சாதி முஸ்லிம்கள் உயர்சாதியினரால் உமைகள் மறுக்கப்படுபவர்களாகவும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும் உள்ளனர்.


பாகிஸ்தானின் 1959, 1979 களில் இடம் பெற்ற நிலச்சீர்திருத்தச் சட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாமைக்கு காரணமாக நில உடைமைத்துவத்தை பாதுகாக்க நின்ற உலமாக்களை குறிப்பிடலாம். சிந்து மாகாணப்பகுதி முஸ்லிம் விவசாயிகள் தாழ்நிலை வாழ்வுக்கு காரணம் இறைவன் ஏற்படுத்திய தக்தீர் எனும் விதிக் கோட்பாடே என பிரச்சாரம் செய்யும் பீர் மற்றும் சீர்சாதாக்களின் கருத்தாளுமையாலும் ஒடுக்கப்பட்டே இருக்கிறார்கள். இந்த பீர் மற்றும் சீர்சாதாக்கள் கி.பி. 711ல் சிந்துவில் நுழைந்த அரபு பூர்வீகர்களின் வழித்தோன்றலில் உருவான இஸ்லாமிய சமயத் தலைவர்களாக இருக்கிறார்கள்.


முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இத்தகையதான சாதீய படிநிலை கட்டமைப்பை தத்துவரீதியாகவும், கோட்பாட்டு ரீதியான பார்வையிலும் அங்கீகக்கும் வகையில் திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துச் சொல்லி ஆதிக்க கருத்தியலை நிலைநாட்டத் தகுந்த விளக்கங்களை சில அறிஞர்கள் சொல்ல முற்படுகின்றனர்.


மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறை அச்சம் கொண்டவர்கள் தான். (திருக்குர்ஆன் அத். 49 அல்ஹ÷ஜ÷ராத், வசனம் 13)


திருக்குர்ஆன் ஆண் / பெண் என்பதான பாலின வேறுபாட்டையும், பல்வேறு குலங்கள், கோத்திரங்கள் சமுதாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த மேல் கீழ் வேறுபாடுந்தன்மையை இறை அச்சுக் கோட்டின் அடிப்படை மூலமே கண்டடையமுடியும் என்பதான கருத்தியலை முன்வைக்கிறது. சமூக தன்மையை, ஆன்மீகத் தன்மையால் இடம் பெயரச் செய்கிறது.


மக்காவில் வாழ்ந்த அரபிகள் குறித்த பார்வையிலும் இறைவனையும் மறுமையையும் நம்பாத அரபிகள் குறித்து எதிர்மறைக் கருத்துக்களையே திருக்குர்ஆன் முன்வைக்கிறது. நாட்டுப்புறத்து அரபிகள் அல்லது காட்டரபிகள் குறித்த பல பதிவுகளில் கீழ்க்கண்டதும் ஒன்று. நிராகப்பிலும் வஞ்சகத்திலும் காட்டரபிகள், மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். (அத்யாயம் 9: அத்தெüபா வச. 97)


நபிமுகமது வாழ்ந்த அரபுச் சமூகங்களில் இன, குல, கோத்திர வேறுபாடுகளும், ஒரு இனம் அல்லது குலத்தின் மேலாதிக்கமும் இருந்துள்ளது. ஹதீஸ்களின் மூலமாக தெயவருகிறது. அரேபிய சமூகத்தில் இன அடிப்படையில் மிகப்பிரதானமாக அரபுகள், பாரசீகர்கள், ரோமர் இனங்கள் வலுவாக இருந்துள்ளன. அரபு இனத்திற்குள்ளேயே குறைஷியர், தமீம், முளர், ரபீஅ உள்ளிட்ட பல கபாயில் குலங்களும் அஸ்ஸம், கிஃபார், முûஸனர் குலங்களும், பிறவகைகளான பனூதமீம், பனூஆமிர், பனூஅஸத், பனு சதப்பான், ஹவாசின், கஹ்தான் குலங்களும் வாழ்ந்து வந்தன.


நபி முகமது வாய்மொழி வரலாறுகளின் வழி குறைஷி குலமே மிகமுக்கியமாக அரபுச் சமூகத்தின் பின்பற்றத்தக்க குலமாகவும் ஆளும் தகுதி படைத்த உயர்குலமாகவும் கருதப்பட்டுள்ளது.


1. மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளை பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமிலிருப்பவர்கள் குறைஷிகளில் முஸ்லிமாயிருப்பவரை பின்பற்றுபவர் ஆவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறைமறுப்பாளரை பின்பற்றுபவர் ஆவார். (புகா, ஹதீஸ் 3495, அபுஹ÷ரைரா அறிவிப்பு)


2. இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. (புகா ஹதீஸ் 3501, இப்னு உமர் (ரலி) அறிவிப்பு) இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் கபாவின் நிர்வாகமும், ஹாஜிகளுக்கு நீர், உணவு அளிக்கும் பொறுப்பும் குறைஷிகளுக்கே இருந்துள்ளது. ஆட்சியதிகாரம் மட்டுமல்ல, குறைஷி குலம் பேசிய வழக்கு மொழியில்தான் அமைந்துள்ளது குர்ஆன் கூட இறங்கப்பட்டது.


கிழக்கு திசையிலிருந்துதான் குழப்பங்கள் தோன்றும். ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் ரபீஅ மற்றும் முஸர் குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையேதான் கல்மனமும் கடின சித்தமும் காணப்படும். (புகா ஹதீஸ் 3498, அபூமஸ்ஊத் அல் அன்சா அறிவிப்பு)


ரபீஅ மற்றும் முஸர் குலாம்களைச் சார்ந்த கிராமப்புற மக்கள் முரட்டுத்தன்மையும், இறுகிய பிடிவாத குணமும் கொண்டுள்ளவர்கள் என்பதான குற்றச்சாட்டு ஆதிக்கத் தன்மை நோக்கிலான பிற குலங்களின் அணுகுமுறையாக அமைந்துள்ளதை கவனப்படுத்திக் கொள்ளலாம். இந்த வகை ஆதிக்க கருத்தியல் அணுகுமுறை இந்திய முஸ்லிம் அமைப்பின் சாதீய படிநிலைக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறதா என்பதான கேள்வியும் இங்கு எழுப்பப்படுகிறது.


இஸ்லாமியர் ஆட்சியின் மத்திய கால உலமாக்களின் நூல்களில் சாதீய படிநிலைக்கு ஆதரவான கருத்தியல்கள் பல இடம் பெற்றுள்ளன என்பதை நவீனகால இஸ்லாமிய ஆய்வாளர்களில் ஒரு சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லி நேரு பல்கலைக்கழக அரபு மொழித்துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மசூத் ஆலம் பலா இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி þ தீண்டாமை குறித்த ஆய்வில் இதனை தெவித்துள்ளார்.


இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி அறிமுகப்படுத்தி எழுதியும் வரும் யோகிந்தர் சிக்கந்த் இந்திய முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமும் சாதிய வேறுபாடுகளும் ஆய்வின் வழியாகவும் இதனை நிறுவுகிறார். உலக முஸ்லிம்களின் இரு முக்கியப் பிவுகளாக சுன்னி மற்றும் ஷியாக்கள் உள்ளனர். திருக்குர்ஆன், ஹதீஸ் நபிமுகம்மதுவின் வழிகாட்டுதல்களோடு சுன்னிகளும், கூடவே நபிமுகமதுவின் மருமகனார் இமாம் அலி மற்றும் அவர் தம் மரபினர்களின் ஹதீதுகளோடும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாக ஷியாக்களும் உள்ளனர்.


இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தேவ்பந்த், பரெல்வி எனப்படும் தெற்காசிய முஸ்லிம்களில் சுன்னி பிவினர் இருபெரும் சட்டப் பள்ளிகளுக்குள் தங்களை வரையறுத்துக் கொள்கின்றனர். ஹனபி, ஷாபி, ஹன்பலி, மாலிகி என்பதான துணைப் பிவுகளான மத்ஹபுகளின் சிந்தனைகளும் இதில் உள்ளடங்கும்.


டெல்லியில் 1867ல் தேவ்பந்த் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்ட மதரஸô இஸ்லாமிய சமய நிறுவனத்திலிருந்து உருவாகி வரும் சமய அறிஞர்கள் தேவ்பந்த் அறிஞர்களாக கருதப்படுகின்றனர். இந்த தோற்றுவாயிலிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி, தலிபானியம், வகாபிய இயக்கங்களின் அறிஞர்களும் உருவாகி வந்துள்ளனர். ஹனபி மார்க்கச்சட்டப் பள்ளி சார்ந்த கருத்துக்களை, நூற்களை எழுதியுள்ளவர்களாகவும் இவர்கள் உள்ளனர். சவூதி ஹன்பலி மத்ஹபு சிந்தனைகளின் தாக்கமும் மிகுந்த அளவில் இதன் வழியாகவே உருவாகியுள்ளது. இப்பிவின் பெரும்பான்மையினர் சூபிச கோட்பாட்டிற்கு எதிராகவுமே இயங்கியுள்ளனர்.


இதற்கு மாற்றமாக பரெல்லி பிவினர் சூபிசம், சூபிஞானிகளின் தர்கா வழிபாடுகளில், தங்களை பழக்கப்படுத்திக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதம் பரெல்லி, இருபது சதவிகிதம் தேவ்பந்த், விஷயாக்கள் பதினெட்டு சதவிகிதம் பரெல்லி இருபது சதவிகிதம், தேவ்பந்த், ஷியாக்கள் பதினெட்டு சதவிகிதம் அஹ்லெ ஹதீத் 4 சதவிகிதம், இஸ்மாயிலிகள், அகமதியாக்கள் இரண்டு சதவிகிதம், பிற சிறுபான்மையினர் நான்கு சதவிகிதம் என்பதான ஒரு கணக்கீடும் உள்ளது.


தேவ்பந்த், பரேல்வி, அஹ்லெஹதீத், ஜமாத்-இஸ்லாமி அறிஞர்களின் நூல்களை ஆய்வு செய்து மசூத் ஆலம் பலா சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். தேவ்பந்த் மதரசா கல்வி நிறுவனத்தில் பிறப்பு அடிப்படையிலான தகுதிக் கோட்பாடான காஃபாவை முன்வைத்து இஸ்லாத்தில் சாதித் தன்மையை வலியுறுத்தும் நடைமுறை இருப்பதுவும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என்கிறார். மேலும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தியாவின் சூபி அறிஞரான ஷாவலியுல்லாவும் பிறப்பு அடிப்படையிலான காஃபா கோட்பாட்டுக்கு வெளியே மணஉறவு கொள்வது கொலை செய்வதை விடவும் அபாயகரமானது எனக்கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


திருக்குர்ஆன் முஸ்லிம்களின் சமத்துவம் பற்றி பேசினாலும் சாதி இந்திய முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது. மேல் - கீழ் தன்மை வெளிப்படுகிறது. தொழில்வகை சாதிக் குழுக்கள் இந்து சமூக நிலையின் கூறுகள், பிராமணிய பிரதிகளில் உள்ள உயர்சாதி அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய நீதி வல்லுனர்கள் சாதியின் ஒப்புத் தன்மைக்கு, காபா என்னும் தகுதிக் கோட்பாட்டிற்கு சமயரீதியான விளக்கமும் அளிக்கிறார்கள். காபா, சாதி, சாதீய மேலாண்மை கொடை சமூக அடுக்குகள், உலமாக்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் திருக்குர்ஆனின் சமத்துவத்திற்கு எதிராகவே இது செயல்படுகிறது.


பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்துயிசமிருந்துதான் மதம் மாறியிருக்கிறார்கள். தனிநபர் மதமாற்றம் மத்தியகாலத்தில் மிகவும் குறைவு. மதமாற்றம் கூட்டு சமூக நடவடிக்கை. எனவே இம்மாற்றத்திற்கு பிறகு திருமணங்கள் உண்மையான சாதிக்குழுக்களிடையே நடைபெற்றது. மதமாற்றம் நிகழ்ந்தபோதும் உள்ளூர், இஸ்லாத்திற்கு முந்திய நம்பிக்கைகளும், நடவடிக்கைகளும் தொடர்ந்தன. இந்து கலாச்சார தாக்கமும், நம்பிக்கைகளும் சாதி கலந்த நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தில் நிலவின.


இந்திய முஸ்லிம்கள் பற்றிய எழுத்துக்களில் மேன்மைமிகு சாதியினர் அல்லது அஷ்ரப், கீழ்நிலையினர் அல்லது ரஸில், கமின் அல்லது அஜ்லப் ஆயினர். நவீன சமூக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே இந்த அஷ்ரப் þ அஜ்லப் பிரிவினையாகும். இதனை மத்திய காலத்து அஷ்ரப் அறிஞர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி தங்கள் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள்.


உள்ளூரில் மதம் மாறியவர்களைவிட அரபு மத்திய ஆசியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழித்தோன்றல்கள்தான் சமூக அந்தஸ்து மிக்கவர்களாக பாவிக்கின்றனர். இது இன வித்தியாசத்தையும் உள்ளடக்கியதாக குறிப்பாக அஜ்லவுகள் கறுத்த தோலுடையவர்களாகவும், அஷ்ரபுகள் வெள்ளை நிறம் சார்ந்ததும், அரசியல் ஆதிக்க படிப்பாளிகளாகவும் அதே சமயம் அஜ்லப்கள் முன்னோன் கைவினைத் தொழில், விவசாயம் உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த அடித்தள தொழில்ககளை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர். குர்ஆனை தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு ஏற்ப பயன்படுத்தியும் கொண்டார்கள்.


மிகப்பெரிய கட்டுரை இது. படிக்க ஆர்வம் கொண்டவர்கள் இங்கு சொடுக்கவும்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

குருநானக் கதை

ஒரு சமயம் சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். அவர் வரும் வழியெல்லாம் தென்பட்ட சிற்றூர்களுக்குள் புகுந்து அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார்.


ஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் பிரவேசித்தார். அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர்வேட்கை. இத்துடன் குளிர் வெட வெடக்க வைப்பதாக இருந்தது.


அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை; அலட்சியப்படுத்தினர். ஒருவராவது எதுவும் தரவில்லை.


அன்றிரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பினர். அப்போது குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.


""எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சர்வ வல்லமைப் படைத்த கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!''


இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது. "ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா?'


"ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?'


அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை! என்றாலும் எவரும் கேட்கவில்லை. அவர்கள் அங்கிருந்து நடக்கத் துவங்கினர். அன்றைய தினம் மாலையில் அதே போல மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்து இருந்தது.


"இங்கு என்ன நிலைமையோ?' என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.


அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன், ""வாருங்கள், வாருங்கள்...'' என்று மிக மிக அன்புடன் வரவேற்றனர்.


""சாப்பிடுகிறீர்களா, நீர் அருந்துகிறீர்களா?'' என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டினர். அவர்களுக்கு உணவு தரப்பட்டது. நீர் தரப்பட்டது. தங்கியிருக்க இடம் தரப்பட்டது. படுக்கை தரப்பட்டது. பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.


சீடர்கள் பெருமிதம் அடைந்தனர்.


""இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்?'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.


""எல்லாரையும் அறிந்திருக்கின்ற ஆண்டவனே இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து மூலைக்கொரு திசையாகப் பிரிந்து போய்விட வேண்டும்!. அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.'' என்றார்


இந்தப் பிரார்த்தனையையும் சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று; அதிர்ச்சி கிளம்பியது.


""என்ன இது இப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறாரே நம் குரு... இது நியாயமா? முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா?


""இது நியாயமா, ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்தனை செய்கிறார் நம் குரு!'' இதைக் கேட்டு விட வேண்டும்! என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க ஒருவருக்காவது துணிவு இல்லை. சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.


""அன்பானவர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர். எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன்.


""ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழி யில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.


""விருந்தினர்கள் நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும் நகரம் எங்கும், நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,'' என்று விளக்கம் கூறினார்.


குருநானக்கின் இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.


மனதில் தெளிவு வேண்டும்!

திங்கள், 22 மார்ச், 2010

ஒபாமா - ஒசாமா கார்டூன்இஸ்லாம் இறை தூதர் கார்டூன் படங்கள்


இஸ்லாம் கடவுள் படமும் வரலாறும்