தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
ஈஸ்வரன் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈஸ்வரன் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூலை, 2009

இடுப்பு - குட்டி சிறுகதை

முன்னால் போகும் பைக்கில் உக்காந்திருக்கும் மாமியின் இடுப்பை பார்த்தபடியே மெதுவாக போய்க் கொண்டிருந்த ராகவனை `ஏங்க வேகமாக போங்க பின்னாடி ஒருத்தன் என் இடுப்பை ஒருமாதிரி பார்த்துக் கிட்டே வாரான்` என்று அவன் மனைவி சொன்னாள், அவனுடைய கள்ளத்தனம் அறிந்து.

லஞ்சம் - குட்டி சிறுகதை

இந்த லிஸ்டில் உள்ள பொருளெல்லாம் நீ கடையில போய் வாங்கிவந்தேனா, உனக்கு பிடிச்ச சாக்லேட் தாரேன் என்று மகனை தாஜா செய்து கொண்டிருந்த ராகவி, தனக்கு வந்த போனை அட்டன் செய்கையில் அம்மா உங்க புருசன லஞ்சம் வாங்கின குற்றத்திற்காக போலிஸ் கைதுபண்ணிருக்கு, சீக்கிரம் பூந்தமல்லி ஸ்டேசனுக்கு போங்க என்றது ஒரு குரல்.

சனி, 11 ஜூலை, 2009

கவனம் - குட்டி சிறுகதை

ஏங்க வீட்டை நல்லா பூட்டிக் கோங்க, நேத்து மாதிரி சமைச்சு வைச்சிட்டு உள்தாழ்பாள் போடாம தூங்கிடாதிங்க. நான் வேலைக்கு போயிட்டு மதியம் சாப்பிட வந்திடறேன் என்று சொல்லிவிட்டுப் போனாள் அந்த ஏரியா எஸ்.ஐ.ராகவி .

எல்லோரும் இப்படிதான் - சிறுகதை

ராதாவுக்கு மண்டை உடைஞ்சு போச்சி ராமு சொல்வதைக் கேட்டதும் சம்பூரணம் வீட்டில் உள்ளவர்கள் பேசத்தொடங்கினர். ராதா பக்கத்து தெரு பெண்.ராமு எல்லோர் வீட்டிலையும் எடுபிடி வேலை செய்யும் பையன். உடனுக்குடன் செய்திகளை பரப்புவதில் வல்லவன்.
இதோட, மூனாவுது பேர். இந்த மணல் லாரியையெல்லாம் ஏன்தான் இந்தப் பக்கம் அனுப்பராகளோ இது கமலத்தில் பேச்சு
அட கருமாந்திரம் புடிச்சவங்க வேகமா வந்து நம்ம உயிர எடுக்கரத்துக்கே பார்க்குரான்னுங்கோ இது ரத்தினம்
பாவி பயலுக, அவளுக்கு குழந்தை பொறந்து இரண்டு மாசம் தானே ஆவுது. பச்ச புள்ள எப்படி தாங்குறாளோ இது சம்பூரணம்.
எல்லோரும் கொஞ்சம் வாய மூடுறீகளா. சொல்லவந்ததை முழுசா கேட்காம நீங்கபாட்டுக்கு ஏதேதோ பேசுரீகளே. ராதாவுக்கு மண்டை உடைஞ்சது உண்மைதான். ஆனா லாரில அடிப்பட்டு இல்ல.
பின்ன எல்லோரும் ஆவலானார்கள்
ராதாவோட புருசன் குடிபோதையில அவள தள்ளி மண்டையை உடைச்சுப்புட்டான் என்று ராமு கத்தினான்.
ஓ... குடும்ப பிரட்சனையா... அது தானா சரியாப் போயிடும் எல்லோரும் அவரவர் வேலையை கவணிக்க தொடங்க ராமுவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது.

வெள்ளி, 20 மார்ச், 2009

மனக் கோயில்

அவன் ஒரு விவசாயி,அதிக வருமானம் கிடையாது.மனதுக்குள்ளேயே சிவனை வழிபடுவான்.
ஒருநாள் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான்.அப்போது இடி,மின்னலோடு மழை பெய்தது.ஒரு மண்டபத்துக்குள் ஒதுங்கினான்.
உள்ளே போனவன்,அது ஒரு பாழடைந்த சிவன் கோயில் என்பதை உணர்ந்தான்.இடிந்த நிலையில் புதரும் செடியுமாக கோயில் இருந்த காட்சியைப் பார்த்து வருந்தினான்.நமக்கு வசதி இருந்தால் கோயிலை புதுப்பிக்கலாமே என நினைத்தான்.கண்களை மூடினான்.மனதில் கற்பனையாலேயே கோயிலை சீர்செய்தான்.
அந்தக் கோயிலின் ராஜகோபுரம்,பிராகாரங்கள்,மண்டபங்கள்,மூல சந்நிதிகள் எல்லாம் அமைத்து விமர்சையாக கும்பாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது போல் மனதினுளேயே எல்லாம் முடித்துவிட்டான்.கருநாகம் சீறிக்கொண்டு வரும் சத்தத்தைக் கேட்டவுடன்,அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடினான்.
அவன் வெளியேறும்வரை காத்திருந்தது போல தடதடவென மண்டபம் இடிந்து விழுந்தது.அந்த நேரத்திற்கு மழையும் விட்டிருந்தது.தான் உயிர் பிழைத்த கதையை ஊராரிடம் சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்த ஒரு சித்தர்,
அப்பனே இன்று சிவராத்திரி .நீ இன்று மரணத்தை தழுவ வேண்டியவன்.ஆனால் மானசீகமாக சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டதால் பாவங்கள் நீங்கப் பெற்றாய்.அந்த கண்டத்திலிருந்து உன்னை காக்கவே யாம் பாம்பாக வந்தோம் என்றபடியே மறைந்தார்.
அப்போது தான் வந்தது சிவனென அறிந்தனர்.ஊரே விவசாயின் பக்தியை கண்டு வணங்கியது.