தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஜூலை, 2009

தட்டச்சு கருவி இல்லாமலேயே...

இந்த முறை நாம் பார்க்ப்போவது ஆப்ரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் XP ன் ஒரு உபயோகமுள்ள செயல்முறை. (WINDOS XP INVISSIBE PROGRAM)

தட்டச்சு கருவி இல்லாமல் தட்டச்சு செய்ய முடியுமா?.
முடியும்.

எதிர்பாராத விதமாக உங்களுடைய தட்டச்சு கருவி பழுதாகினாலோ, இல்லை தட்டச்சு கருவின் ஒரு சில எழுத்துகள் மட்டும் பழுதாகினாலோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய விண்டோஸ் XP-ல் அதற்காக ஒரு புதிய வழி முறை உள்ளது.



நீங்கள் செய்ய வேண்டியது இது தான்,

1. START மெனுவிவை சொடுக்கி கீழே காண்பிக்கப்பட்டுள்ள வழியில் செல்க.

2. START-> ALL PROGRAMS-> ACCESSORIES->ACCESSIBIITY-> On-Screen Keyboard

3. இப்போது On-Screen Keyboard ஐ சொடுக்கினால் உங்களுக்கு தட்டச்சு கருவி விண்டோஸிலேயே கிடைக்கும்.

அல்லது விண்டோஸ் கீயுடன் R கீயையும் அழுத்தி கிடைக்கும் RUN –ல் osk என தட்டச்சு செய்த பின்னும், இதை பெறலாம். தட்டச்சு கருவி சரி வர இயங்காத நிலையில் இந்த வழிமுறை பயனற்றதாக இருக்கும் என்பது கொஞ்சம் வருத்தமான விசயம்.

ஆனால் ஒரு சில தட்டச்சு கீகளை தவிற மற்றவை வேலை செய்தால், இரண்டாவது முறை மிகவும் எளியது.

பிறகென்ன தட்டச்சு செய்ய வேண்டியது தானே?...

ஆட்டம் போடும் புகைப்படங்கள்

இது என்னுடைய நண்பர்கள் சொல்லிக் கொடுத்த வழி முறை. முதன் முதலாக நான் இதைச் செய்து பார்த்த போது வியப்பில் மூழ்கிப்போனேன். அதே வியப்பு உங்களுக்கும் வந்திட வேண்டுமல்லாவா எனவே இந்த முறை செயல் விளக்கப் படங்களை மட்டுமே இடுவதாக முடிவு செய்தேன்.

HACKING பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அது தவறாது என்றா?. இல்லை. அது பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருந்தால் அது தவறுதான்.ஆனால் ஒரு விளையாட்டுக்காக அல்லது நம்முடைய பயண்பாட்டிற்காக புரோகிராம்களை மாற்றுதல் தவறில்லை என்கிறேன் நான். இது ஒரு சின்ன விளையாட்டான INTERNET HACKING TIPS . எனவே எந்த பயமும் இன்றி நீங்கள் இதைப் பயண்படுத்தலாம்.

இந்த வழிமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு INTERNET வசதி தேவையில்லை. OFF LINE என்று சொல்லப்படும் சாதாரண நிலையே போதுமானது. INTERNET EXPLORER , OPERA என்று எந்த வலையுலாவியையும் (BROWSERS) பயண்படுத்தலாம்

இந்த விளையாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டியது-
1. கீழே இருக்கும் இந்த புரோகிராமை காப்பி செய்து கொள்க.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval('A()',5); void(0);

2. பின்பு இதே BROWSER மேலே இருக்கும் ADDRESS BAR –ல் வலைப்பூவின் முகவரியை முழுவதுமாக நீக்கி விட்டு அந்த புரோகிராமை பெஸ்ட் செய்து விடுங்கள். (PASTE THAT CODE IN ADDRESS BAR IN YOUR BROWSER)



3. இப்போது என்டர்(ENTER) கீயை அழுத்தினால் உங்களுக்கு அற்புதமான படங்களின் நடனம் தெரியும்.

அல்லது

4. மேலே இருக்கும் புரோகிராமை காப்பி செய்து விட்டு படங்களைக் கொண்டிருக்கும் ஒரு வலைப்பூவை திறந்து கொள்ளுங்கள்

5. அதனுடைய முகவரியை அழித்துவிட்டு PASTE AND GO அல்லது CTRL கீயுடன் சேர்த்து B கீயையும் அழுத்துங்கள்.

6. இப்போதும் உங்கள் கண் முன்னே வலைப்பூவிலிருந்த புகைப்படங்களின் நடனம் ஆரமிக்கும்.

இந்த வலைப்பூவில் இடப்படும் அனைத்து வழிமுறைகளும் என்னால் செய்து பார்க்கப்பட்டு முடிவுகள் நலமாக வந்தால் மட்டுமே இடப்படுக்கின்றன. அபயமான செயல்களை இதுவரை நாம் செய்யவில்லை. உங்களுடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புரோகிராம்களை நான் இங்கு கொடுக்கப்போவதில்லை.எனவே பயம் கொள்ள வேண்டாம்.
மேலும் சில முறை செய்து பார்த்த அனுபவத்தினால் உங்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இயலும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். என்னுடைய மெயிலின் மூலமாகவும் தொடர்பு கொள்ல்லாம். மறக்காமல் கருத்துரைகளை இடுங்கள்... அப்படியே உங்களுக்கு தெரிந்தவைகளை கூட எனக்கும் கூறுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.

எளிய முறையில் START மெனுவை திறக்க இரண்டு வழிகள்

நீங்கள் கணிப்பொறியை வெகு நாட்களாக உபயோகம் செய்கிறீர்கள் என்றால் இந்த வழி முறை உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்.கணினியை பயண்படுத்துபவர்களின் நேரத்தினை மிச்சம் படுத்த KEYBOARD SHORTCUTS பயண்படுகின்றன.



புதிய கணிப்பொறி பயண்பாட்டாளர்கள் இதனை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த வழி முறைகள் உங்களுக்கு எளிமையான இருப்பதோடு, நேரத்தையும் மீதப் படுத்தும்.

1. WIN கீயுடன் சேர்த்து R கீயையும் அழுத்தவும். இப்போது விண்டோவில் START மெனு கிடைக்கும்.
அல்லது
2. தட்டச்சு கருவியில் (KEYBOARD ) விண் கீயை அழுத்தவும். இப்போதும் விண்டோவில் START மெனு கிடைக்கும்.

இப்போது கிடைக்கும் மெனுவில் சில கோடிட்ட எழுத்துகளை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக RUN –ல் R என்ற எழுத்து அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். உடனே நீங்கள் தட்டச்சுகருவியில் R தட்டச்சை அழுத்தினால் ரன் புரோகிராம் கிடைக்கும். ARROW கீயையும் உபயோகித்து உங்களுக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து பயண்படுத்தலாம்

CONTRO PANEL - C
HELP AND SUPPORT - H
SEARCH – S
RUN – R

நீங்கள் சாதாரணமாக மவுசை கொண்டு கிளிக் செய்து ஸ்டார்ட் மெனுவை பெறும் போது உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.

தட்டச்சு கருவியில் உள்ள எளிமையான வசதிகளை பிறகொரு இடுகையில் சொல்கிறேன்.

நீங்கள் நகல் செய்ததை பார்க்க

உங்கள் கணினியில் நோட்பேட், வேர்ட் என எதிலும் நீங்கள் நகல்(COPY) செய்த வார்த்தைகளை CLIPBOARD எனப்படும் தனி அமைப்பில் தற்காலிகமாக சேமிக்கப்படும்.

இதைப் பார்க்க நீங்கள் செய்யவேண்டியது –

1. உங்கள் கணினியில் ரன் புரோகிராமை திறந்து கொண்டு, அதில் கீழ்காணும் சொல்லை தட்டச்சு சொல்லுங்கள்.

2. நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தை - cipbrd . பின்பு என்டர் கீயை அழுத்தவும்.

3. இப்போது உங்களுக்கு ஒரு விண்டோஸ் எஸ்.பியில் மறைந்துள்ள புரோகிராம் கிடைக்கும். இதில் நீங்கள் நகல் செய்த வார்த்தைகள் தெரியும்.


பயண்கள் –

சிலருக்கு எந்த வார்த்தையை நகல் செய்யதோம் என மறந்து விடுவதுண்டு. அவர்களுக்கு இது நிச்சயம் பயண்படும்.

இந்த இடுகை உங்களுக்கு பயணுள்ளதாக இருக்கிறதா?. கருத்துகளை சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.

வியாழன், 16 ஜூலை, 2009

விசைக் குறியின் மூலம் விந்தைகள்

விசைக் குறி என நான் சொல்லுவது ARRO KEY ஐயை தான். நீங்கள் மைக்ரோ சாப்ட் ஆபிஸ் வேர்ட் டாக்குமென்ட்(WORD DOCKUMENT), நோட் பேட்(NOTEPAD) போன்றவற்றில் வலது, இடது விசைக் குறியை(LEFT AND RIGHT ARROW KEYS) அழுத்தினால் அது ஒரு எழுத்தினை விட்டு அடுத்த எழுத்திற்கு செல்லும். அதுவே மேல்,கீழ் விசைக்குறிகளை(UP AND DOWN ARROW KEYS) அழுத்தினால் ஒரு வரியை(SENTENCE) விட்டு அதன் மேலுள்ள அல்லது கீழுள்ள வரிகளுக்கு செல்லும். இப்படியில்லாமல் அதே குறிகளைக் கொண்டு ஒரு பத்தியிலிருந்து(PARAGRAPH) இன்னொரு பத்திக்கு செல்ல முடியும். அதே போல ஒவ்வொறு வார்த்தையாகவும் செல்ல முடியும்.

இனி செய்ய வேண்டியது-

1. கன்ரோல்(CTRL) கீயை அழுத்திக் கொண்டு விசைக் குறிகளை இயக்குங்கள். நீங்கள் இயக்குவது வலது மற்றும் இடது விசைக் குறிகளாக இருப்பின், உங்களுடைய கர்சர்(CURSER) ஒவ்வொறு வார்த்தைகளாக போகும்.

2. அல்லது நீங்கள் இயக்குவது மேல் மற்றும் கீழ் விசைக் குறிகளாக இருந்தால் உங்களுடைய கர்சர் பத்தி பத்தியாக செல்லும்.

முயன்று பாருங்கள்... இந்த வழிமுறைகள் உங்களுடைய செயல்களை எளிமையாக மாற்றும் என நினைக்கிறேன்.

ஒரே செய்தி மீண்டும் மீண்டும் வந்திட

ஒரே செய்தி நீங்கள் படித்த முடித்த பின்னும் மீண்டும் மீண்டும் வந்து உங்களை கடுப்பேத்தும் படி உங்கள் நண்பர்கள் யாரேனும் செய்திருக்கிறார்களா. ஆம் என்றால் அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் நண்பர்களை கொஞ்சம் திக்குமுக்காட செய்திடுங்கள். இது ஒருவகையான குட்டி வைரஸ்(VIRUS) எனவோ, மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலோ(HACKING) இல்லை என்றாலும் நண்பர்களை தவிர மற்றவர்களிம் விளையாடி விபரீதங்களை வளர்த்து கொள்ள வேண்டாம்.

நீங்கள் விளையாட்டுக்கு செய்யப் போய் அது வில்லங்கமாய் முடிந்து விடப் போகிறது. ஜாக்கிரதை(BEWARE)...

இனி செய்ய வேண்டியது-
1. உங்களுடைய நோட்பேடை(NOTEPAD) திறந்து(OPEN) கொள்ளவும்.

2. அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புரோகிராமை(PROGRM) அப்படியே தட்டச்சு(TYPE) செய்யவும். உங்களுக்கு மேலும் எளிதாக இருக்க நகலொன்றை(COPY) வேண்டுமாலாலும் எடுத்துக் கொண்டு அதை ஒட்டி(PASTE) விடலாம். ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வெறும் நகலெடுக்கும் பழக்கம் மட்டும் இருந்தால் அதில் உள்ள நுனுக்கங்களை கற்றுக் கொள்ள இயலாது போய்விடும். @ECHO off
:Begin
msg * Hi friend,
msg * This is a trick for
msg * Cycle Msg
msg * I learn from
msg * jagadeesktp.bogspot.com
GOTO BEGIN


3. எல்லாவற்றையும் தட்டச்சு செய்த பிறகு எதாவது ஒரு பெயரில் BAT கோப்பாக சேமித்துக் கொள்ளுங்கள். அதற்காக அதனுடைய கடைசியில் .BAT என்று தட்டச்சு செய்தால் போதுமானது.

4. இப்போது அந்த FILE வேறு வடிவத்தில் இருப்பதால், உங்கள் நண்பர்கள் ஏமாற மாட்டர்கள். எனவே அவர்களிடம் காட்டும் போது ஐகானை(ICON) மாற்றி விடுங்கள்.


















அவர்கள் அதை கிளிக் செய்து விட்டு படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். பிறகு இந்த வழி முறைகளை கற்றுக் கொடுத்து பாராட்டை பெறுங்கள். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளால் உங்கள் நட்பு இன்னும் வலுபெறும் என்பதில் ஐயமில்லை.

சனி, 11 ஜூலை, 2009

தேவையில்லாததை மறைய வைத்திடுங்கள்





இந்த முறை நாம் பார்க்கப் போகும் கணினி விந்தை(COMPUTER TRIKS) FLODER OPTIONS-ல் இருந்து.நீங்கள் சாதாரணமாக பயண்படுத்தும் விண்டோவில் File and folder tasks, other places, details ஆகியவை இருக்கும். இதை நீங்கள் பயண்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்றால் அதை உங்கள் கணினியிலிருந்து நீக்கி விடலாம்.

ஆனால் இவை மிகவும் எளிய முறையிலான செயல்கள். இதனைப் பற்றி பின்பு உங்களுக்கு விளக்கமாக கூறுகிறேன். இப்போது அதை மறைய வைக்க, நீங்கள் செய்ய வேண்டியது-

1. விண்டோவை திறந்து விட்டு அதில் இருக்கும் tools-> folder options ஐ தேர்வு செய்யவும்.
2. இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும் folder options ல் task பகுதியில் இருக்கும் இரண்டாவது தேர்வை கிளிக் செய்யவும், படத்தில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதி.
3. APPLAY செய்துவிட்டு, பிறகு OK செய்யவும்.
4. இப்போது விண்டோவை பாருங்கள் அது அழகான தோற்றத்துடன் உங்களுக்கு காட்டிசியளிக்கும்.

FOLDER OPTIONS -ல் இருக்கும் மற்றவற்றையும் முயன்று பாருங்கள். மாற்றங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் கவலை கொள்ள வேண்டாம் இருக்கவே இருக்கிறது, அற்புதமான RESTORE DEFAULTS . அதை கிளிக் செய்து பழைய நிலையை திரும்ப பெற்றிடுங்கள்.

கணிப்பொறியில் மை கம்பியூட்டரை திறக்க எளிதான வழிகள்

மை கம்பியூட்டரை (MY COMPUTER) நீங்கள் ஓப்பன் செய்ய வேண்டுமானால், என்ன செய்வீர்கள்.ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று அதில் மை கம்பியூட்டரை கிளிக் செய்வீர்களா அல்லது டெஸ்க் டாபில் உள்ள மை கம்பியூட்டரின் சாட் கட்டை பயண்படுத்துவீர்களா.

அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படியுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும். சூ மந்திரக் காளி என்ற மந்திரம் போல இது வேகமாக செயல்படும்.(சும்மா தமாசுக்கு)

நீங்கள் செய்ய வேண்டியது-

1. விண்டோஸ் கீயுடன் சேர்த்து E பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு எஸ்போலர்(EXPLORER) கிடைக்கும்.இது ஒரு வகையான வழிமுறை.

2. விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீயை அழுத்தி ரன் புரோகராமை திறந்து கொள்ளவும். அதில் மூன்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளை வைத்துவிட்டு என்டர் செய்யவும். இப்போதும் உங்களுக்கு மை கம்பியூட்டர் கிடைக்கும்.

3. இறுதி வழி முறை என்னவென்றால் இரண்டாவது படியில் உள்ளதைப் போன்று ரன் புரோகிராமை திறந்துவிட்டு, அதில் explorer என்று டைப் செய்த பின் என்டர் செய்யவும்.

இந்த மூன்று வழிமுறைகளும் உங்களுடைய கணிப்பொறியை நீங்கள் இயக்கும் வேகத்தை அதிகரிக்கும் என்பதில் அச்சமில்லை. முயன்று பாருங்கள். நண்பர்களிடம் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். ஈசன் அருள் புரியட்டும்.

வலைப்பூவின் மாற்றம்

எமக்கென ஒரு தனித் தன்மை கிடைப்பதற்காக தான் இந்த பட்டாம்பூச்சி வலைதளத்தினை ஆரமித்தேன். அடிப்படையில் ஒரு ஆன்மீகவாதியாகவும், நடைமுறையில் அறிவியல் சார்ந்த படிப்பின் காரணமாகவும் எனக்குள் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் பகிர்தலினால் அறிவு குறைவதில்லை வளர்கின்றது. அதனால் தான் சிவராத்திரி கதைகள், சித்தர்களின் மகிமைகள், சித்தர்களின் பாடல்கள் என்பவைகளை வெளியிட்டு வந்தேன். பழைமைகளை மறக்காமல் கடைபிடித்தாலும், புதியவைகளின் தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

இத்தனை தமிழ் வலைப்பூக்கள் இந்த வலைதள உலகில் பூப்பதற்கு முக்கிய காரணம், தனித் தன்மையும், பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற பெரிய மனமும் தான். உலக அளவில் புகழ் பெற்றவர்கள் முதல் என்னைப் போன்ற மாணவர்கள் வரை வலைப்பூக்களை தொடங்க காரணமும் அதுதான். மொத்தத்தில் அனைவருக்கும் ஒரு தனி இடம் தேவைப்படுகிறது. என்னுடைய இடத்தினை நான் நிறைவு செய்ய சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரப் போகின்றேன்.

சற்று நாட்களுக்கு முன்பு வரை வெறும் ஆன்மீக வலைப்பூவாக வாசம் வீசிய இந்த வலைப்பூ, இனி கணினி பற்றிய தேடல்களுக்கு விடை சொல்லும் வலைப்பூவாகவும் மாறுகிறது. இந்த மாற்றம் சக வலைதள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் போய் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது வரை வந்தவை தொடரும், அத்துடன் கணினி சம்மந்தமான கட்டூரைகள், வினா விடை என புதிய பகுதிகளும் வெளிவரும்.

அறிவியலும் ஆன்மீகமும் கைகோர்த்து வலம் வரப்போகின்ற இந்த வலைப்பூவில், ஆங்கிலமும் சேருகிறது. கணினி பற்றிய சேதிகளில் சற்று கூடுதலாக தமிழில் தந்தால் மிகவும் அது சிரமமாக இருக்கும் என்பதாலும் பயண்பாடுகள் முறையில் ஆங்கிலம் தவிர்க்க இயலாததாக மாறிவிடுகின்ற காரணத்தினாலும் முழுமையான தூய தமிழில் கட்டூரைகளை வெளியிட இயலாது என்பது சற்று வருத்தமானது.

ஆனாலும் வலைதள நண்பர்கள் பலர் தமிழ்99 என்ற ஒரு பெரிய மாற்றத்திற்கு தங்களை உட்படுத்தி, தமிழை காக்க போராடும் போது என்னுடைய இந்த சிறிய வலைப்பூவும் உதவும் என நம்புகிறேன். தமிழின் பெருமை அதன் தொண்மையில் இல்லை, அதன் பயண்பாட்டில் இருக்கிறது என்பதை உணர்ந்து பலரும் தமிழை பயண்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஈசனின் ஆசிர்வாதங்களோடு உங்களுடைய ஆசிர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கணினி பற்றிய தேடுதல்களுக்கும், தெரியாத புதிர்களுக்கும் விடை தேடி பயணத்தை தருகிறேன். எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வரை காத்திருந்த அன்பானவர்களுக்கு நன்றிகள் பல.

உங்கள் மேலான கருத்துகளை இடுங்கள், அது மட்டுமே இந்த அன்பன் மீது நீங்கள் வைத்திருக்கும் மாறாத அன்பிற்கு சான்று.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!

வெள்ளி, 10 ஜூலை, 2009

பெயின்டில் படம் பாருங்கள்

பலருக்கும் பெயின்ட்டில்(PAINT) படம்(DRAWING) வரைவது தெரிந்திருக்கும்.ஆனால் நான் இப்போது சொல்லப்போவது திரைப்படங்களை(MOVIE) பெயின்ட்டில் பார்ப்பது பற்றி.இது மிகவும் எளிது.கவனமாக கவனியுங்கள்.

இனி செய்ய வேண்டியவை,
1. பெயின்டை திறந்து கொள்ளுங்கள்.
2.ஏதாவது ஒரு பிலேயரில்(PLAYER) படத்தை ஓடவிடுங்கள்.
3.அது ஓடிக்கொண்டிருக்கும் போது உங்கள் கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கீரினை(PRIENT SCREEN) அழுத்துங்கள்.
4.இப்போது பெயின்டில் CTRL+V ஐ அழுத்தி பேஸ்ட் செய்யுங்கள்.அல்லது பெயின்டில் எடிட்(EDIT) மெனுவிற்கு சென்று பேஸ்ட் செய்யுங்கள்.
5.பிலேயரை மினிமைஸ்(MINIMIZE) செய்யாமல் நீங்கள் பெயின்ட்டை திறந்தால் படம் ஓடுவது உங்களுக்கு தெரியும்.



படத்தினை பிலேயர் வழியாக இல்லாமல் பெயின் வழியாக பாருங்கள்.இது போன்ற சில வினோதமான ஆச்சிரியப்பட வைக்கும் வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்தால் கருத்துகளில் சொல்லுங்கள்.இல்லையேல் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.

அடுத்த கணினி ஆச்சிரியத்துடன் பிறகு சந்திக்கிறேன்.

காணாமல் போகும் எழுத்துகள்

இதுவும் நோட்பேட்(NOTEPAD) அதிசயம்தான்.

இதற்கு செய்ய வேண்டியது,
1.நோடபேட் ஒன்றை புதிதாக திறக்கவும்.
2.அதில் Bush hid the facts என்று டைப் செய்யவும்.
3.இந்த நோட்பேட்ஐ ஏதாவது ஒரு பெயரில் சேமிக்கவும்(SAVE).
4.இப்போது நோட்பேடை மூடி விட்டு,மீண்டும் திறந்து பார்க்கவும்.





நீங்கள் டைப் செய்ய எழுத்துகள் மாறிப்போயிருக்கும்.சிலருக்கு படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்றும் வேறு சிலருக்கு கட்டம் கட்டமாகவும் தோற்றம் அளிக்கும்.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் 4 3 3 5 என்ற சொற்களால் அமைந்த வாக்கியங்கள் யுனிக்கோட்(UNICODE) முறையில் ஏற்றுக் கொள்ளப் படாத்தே என்கின்றனர் நண்பர்கள்.

வேறு சிலவற்றையும் முயன்று பாருங்கள்.அடுத்த கணிப்பொறி ஆச்சிரியத்துடன் பிறகு சந்திக்கிறேன்.

படித்துவிட்டு கருத்துகள் இடுங்கள்.செய்து பார்த்துவிட்டு சந்தேகம் ஏற்பட்டால் jagadees1808@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

இரட்டைக் கோபுர வினோதம்

அமெரிக்காவையே அதிரவைத்த இரட்டை கட்டிடங்களையும் விமானம் மூலம் தாக்கி அழித்த நிகழ்வை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.அந்த விமானத்தின் பெயர் Q33N இதுதான்.

நீங்கள் செய்ய வேண்டியது,
1.உங்கள் கனிணியில் NOTEPADஐ திறந்துகொள்ளவும்.
2.அதில் விமானத்தின் பெயரை Q33N என டைப் செய்யவும்.
3.NOTEPADன் FONT அளவை 72க்கு பெரிது படுத்திக் கொள்ளவும்.
4.இறுதியாக FONTஐ WINGDINGS ல் வைத்துக் கொள்ளவும்.







இப்போது உங்கள் கண் முன்னே இருப்பதைக் கண்டு ரசியுங்கள்....
அடுத்த ஆச்சிரியத்துடன் விரைவில் உங்களை சந்திக்கின்றேன்.

உங்கள் ஜெகதீஸ்வரன்

அன்பார்ந்த பட்டாம்பூச்சி வாசகர்களே,

காலம் செய்த கோலத்தால் தங்களை சந்திக்க சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது.கணினி துறையில் இன்னும் மாற்றங்கள் வரவில்லை.உலக பொருளாதார தேக்கம் எல்லோரையும் விட எங்கள் கனிணி துறையை மிகவும் பாதித்து இருக்கின்றது.

சென்னைக்கு வேலை தேடும் ஆர்வத்தில் வந்தவன்,இப்போது அறிவை வளர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறேன்.கணினி இன்று எல்லா இடங்களையும் சென்றடைந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் கணினி பற்றி எல்லாமும் நாம் தெரிந்து கொண்டோமா என்பது கேள்விக்குறி.

நான் ஆங்கிலத்தில் படித்த,நண்பர்கள் எடுத்துக் கூறிய கணினி சம்மந்தப்பட்ட ஆச்சிரியங்களை இனி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.இதில் கொஞ்சம் என் சுயநலமும் உண்டு.ஆம் இடுகைகள் இடுவதற்காக நான் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை கண்டிப்பாக இந்த வலைப்பூ எனக்கு ஏற்படுத்தும்.அத்தோடு உங்களுக்கும் கொஞ்சம் நன்மையாகவும் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்...உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் கூறுங்கள்... பகிர்ந்து கொள்ளுதலில் பெருகும் குணம் கல்விச் செல்வத்திற்கு மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.

எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரனமான ஆசிர்வாதங்களோடு உங்கள் ஜெகதீஸ்வரன்.