தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 நவம்பர், 2009

கருத்துப் படம்

நாம் கடந்து வந்த செய்திகளை வைத்து கார்ட்டூன் படங்கள். இப்ப வலைப்பூக்களில் இது தான் பேசன்.














அமெரிக்க ஜனாதிபதி அர்னாடுக் கிட்ட போட்டு கொடுக்குறாரு எல்லோரும் ஓடிப் போயிடுங்க. அட சங்கத்த கலைங்கப்பா.....

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Cartoon, pictures, today Story, karunaneethi cartoon, tamil nadu cartoon, obama cartoon, DMK cartoon, tv shows, vijay tv show, sun tv show, zee tv show, cartoon for tamil people, legends of tamil nadu, USA cartoon, Arnold cortoon, politics leader jokes, cine joke, cinema jokes and cartoons

சனி, 14 நவம்பர், 2009

வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்

வரலாற்றில் மன்னர்களைப் பற்றி வீரம் மிகுந்தவர்கள், ராஜதந்திர்கள், வள்ளல்கள் என ஓவராக மக்களுக்கு பொய் சொல்லிவிட்டு சில நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் கிறுக்குதனங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து விட்டனர். இதையெல்லாம் சேர்த்திருந்தால் வரலாறே பிடிக்கதே மக்கள் அதன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்திருப்பார்கள்.எப்போதுமே வெறும் ஆண்டுகளையும் அரசன் ஆண்ட பகுதிகளையும் மட்டுமே சொல்லி கொடுத்து நம்மை அலறவைக்கும் ஆசிரியர்கள் இதைப் படித்தாலாவது திருந்தட்டும்.

நாம் மன்னன் ஆண்ட ஆண்டு, அவருடைய சாதனை என்பதையெல்லாம் மறந்து ஜாலியாக ஒரு டூர் போவோம். மன்னரெல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல நம்மைப் போன்ற சாதாண மனிதர்கள் என்று நீங்கள் உணர்ந்து சமூக அறிவியல் புத்தகத்தினை தேடிப் போனால் அதுவே வெற்றி. வாருங்கள் பயணத்தினை ஆரமிப்போம்.


தைமூர் –:

தைமூர் இந்தப் பெயர் வரலாற்று ஆசிரியர்களிடையே மிகவும் பிரபலம். இந்தியாவிற்கு வந்து பலவித சேதங்களை ஏற்படுத்திய கொடூரன்.என்னத்தான் பெரிய ஆள் பயங்கர கொலைகாரன் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும்.அவன் செய்த ஒரு காரியம் நம்மை 23ம் புலிகேசிசியே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.அப்படி அவன் என்னதான் செய்தான்

டெல்லியை கைப்பற்ற வந்து அதையும் செய்தவனுக்கு ஒரு இந்திய விசயம் பிடித்துப் போனது.அது தான் யானை.பல இந்து அரசர்களிடம் யானைப் படை இருந்தது குறிப்பிடதக்கது.அதைப் பார்த்த அவன் சுமார் நூற்றி இருபது யானைகளை படைக்காக வரவழைத்தான்.டெல்லியையே கைப்பற்றியிருந்தாலும் அவன் தங்கியது அரண்மனைக்கு முன் டென்ட் அடித்து.(துரைக்கு அரண்மனையில தங்கனுமுன்னு கூட அறிவில்லை. அதுக்கு பின்னாடி பண்ணினார் பாரு ஒன்னு.)வந்திருந்த யானைகளை குளிப்பாட்டி மஞ்சள்,பச்சை,நீளம்,சிகப்பு என உடல் முழுக்க வண்ணம் பூசி கூடாரத்தை சுற்றி நிற்க வைத்தான்.(நினைச்சு பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது).


மாலிக் கபூர் –:

மன்னன் அலாவுதின் கில்ஜியை கொண்றுவிட்ட தளபதி மாலிக் கபூர். அலாவுதினின் மகனை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.அரண்மனை சிறையிலிருக்கும் இளவரசர் முபாரக் தான் அணிந்திருந்த ஆபரத்திலிருந்த வைரம் போன்ற விலையுயர்ந்த கற்களை அவர்களை நோக்கி வீச வந்தவர்கள் அதையெல்லாம் பொறுக்கிக் கொண்டு மாலிக் கபூரை கொன்றுவிட்டனர்.பல காலம் தளபதியாக இருந்து எல்லா காய்களையும் சரியாக நகர்த்தி ஆட்சிக்கு வந்த 36ம் நாளே மாண்டு போனான் மாலிக்.(ஒரே பீலிங்கா இருக்குதப்பா)

மாலிக் கபூர் ஒரு அலி (திருநங்கை) என்றாலும் அரசன் அலாவுதினின் மூன்றாவது மனைவியை அதற்குள் திருமணமும் செய்திருந்தான்.(என்ன கொடுமை சார் இது.ஆமா பஸ்ட் நைட்டுல என்ன பண்ணிருப்பாரு.)


முபாரக் –:

அவமானச்சின்னம் என்று முஸ்லீம்கள் கூறுவது இவனைதான்.அப்படி என்ன செய்தான் முபாரக்...

பெண்களெல்லாம் சலித்துப் போக இருதியில் குஸ்ரூகான் என்ற என்ற இளைஞனுடன் அந்தப்புறத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான். (ஓ இப்ப இதுக்கு அனுமதி கொடுத்துட்டாங்க) இவன் தான் முதல் ஓரினச் சேர்க்கை சுல்தான்.அந்தப்புறத்தில் இருந்த அழகிகலெல்லாம் சும்மா இவர்களின் கூத்தை பார்த்தபடி என்கிறது வரலாறு.(வெறென்ன செய்ய முடியும்).


துக்ளக் –:

ஜோக், நகைச்சுவை என்பது மட்டும் பிடிக்காது துக்ளக்கிற்கு. ஆனால் கோமாலித்தனம் என்றதுமே நினைவுக்கு வருகின்ற முதல் சுல்தான் இவர்தான். (துக்ளக் லக் இல்லாத மனுசன் போல) வரலாறு முழுக்க தேடிப்பார்த்தாலும் இவர் நடத்திய காமெடிகள் போல யாரும் செய்யவில்லை.( ஐயோ பாவம்)

சீன நாட்டினைப் பார்த்து பணத்தினை அச்சடித்தார். அவரை விட அறிவாளியான நம் மக்கள் கள்ள பணத்தினை அச்சடித்தார்கள்.(அப்பவேவா).அதன் பின்பு பணம் அச்சடிப்பதை சுல்தான் நிறுத்திவிட்டார்.டெல்லியிலிருந்து தேவகிரி என்ற ஊருக்கு தலை நகரை மாற்றினார்.பின்பு மீண்டும் டெல்லிக்கே போனார்.(அட போங்கப்பா)இப்படி ஒன்று செய்வதும் பின்பு அதையையே மாற்றி பழைய நிலைக்கே வருவதும் என காமெடி செய்து கொண்டிருந்தவர் செத்தும் ஒரு காமெடியே.... எப்படி தெரியுமா

மசாலா மீனை தின்றவர் அது ஒத்துக் கொள்ளாமல் போக நோயால் அவதிப்பட்டு இறந்துபோனார்.வீரமரணம், இயற்கை மரணம் என்ற இரண்டுக்கும் இடம் கொடுக்காமல் இவர் இறந்த்து வியப்பு என்றாலும் இவரை மிஞ்சும் வகையில் இறந்த சுல்தான்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்(இதுக்கும் மேலையா).


குத்புதின் –:

நான்கு ஆண்டுகள் டெல்லியை ஆண்டவர் குத்புதின்.குதுப்மினாரை கட்டிய புண்ணியவான் என்றால் எல்லோருக்கும் தெரியலாம்.இதிலென்ன காமெடி இருக்கிறதென்றால் ஒருமுறை போலோ என்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்த சுல்தான் குதிரையிலிருந்து இடறி விழுந்து செத்து போனார். எதிரிகளால் பழி தீர்க்கப்பட்டு மரணமடைந்தவர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், நோயின் மூலம் இறந்தவர்கள் என பல மன்னர்களைப் பற்றி படித்திருந்தாலும் இப்படி கீழே விழுந்து செத்துப் போன மன்ன்ன் வரலாறும் இருக்கத்தான் செய்கின்றது.(இதுக்கு துக்ளக்கே தேவலாம்)


பாபர் –:

பாபர் என்ன தான் பெரிய முகலாய அரசனாக இருந்தாலும் இரவுகளில் திருப்தி அடையாத அவர் முதல் மனைவி அவரை விட்டு ஓடிவிட்டார்.ஆனால் அதனை பாபரை விட்டு விலகிவிட்டார் என்று மென்மையாக சொல்கின்றன வரலாற்று நூல்கள்.(அதான்னே பார்த்தேன், அரசர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை மறைப்பதே வேளையாகப் போய்விட்டது).


ஹூமாயூன் –:

மூட நம்பிகையின் மொத்த உருவம் இந்த மன்னர்.பாபரின் வாரிசு என்றாலும் எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்ப்பவர்.அதை கணிக்கும் திறமையும் இருந்த்தாக சொல்கின்றனர். எங்கு கிளம்பினாலும் வலது காலை முன் வைத்தே நடக்க கூடியவராக இருந்தார்.ஒரு அமைச்சா இடதுகாலை எடுத்து வைத்து உள்ளே வர, அவரை வெளியே அனுப்பி மீண்டும் வலது காலை முன்வைத்து வரச்சொல்லிய மகா அறிவாளி.

அவருடைய மரணம் கூட சற்று சோகமான காமெடி தான்.மந்திரியுடன் பேசிக் கொண்டு படிகளில் கீழிரங்கியவரின் காதுகளில் தொழுகைக்கான அழைப்புவிழ, உடனே திரும்ப முயன்று கால் இடறி மாடிப்படிகளில் உருண்டு கோமா நிலைக்கு போய் இறந்தார்.( ஐயோ பாவம்)


அக்பர் –:

முகலாய பெரும் சக்கிரவர்த்தி என்றே எல்லோறும் கூறினாலும் என் முகமதிய நண்பன் ஒருவன் அக்பர் முஸ்லிமே இல்லை என கூறுகிறான்.அந்த அளவிற்கு மற்ற மதங்களின் மீதும் மதிப்பு கொண்டிருந்தார் அக்பர்.

பீர்பாலைப் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை.அவருடைய கதைகளை நாடே அறியும்.ஆனால் பீர்பால் இல்லாமலே அக்பர் தனியாக ஒரு காமெடி செய்தார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா.

அக்பருக்கு 54 வயதாகிவிட்டதே நினைவில் இல்லை.ஏதோ தன்னை இளைஞனாக நினைத்துக் கொண்டு ஒரு பௌணர்னமி இரவில் மானைப் பிடிக்க சென்றிருக்கிறார்.மான் கையில் மாட்டிக் கொண்டதும் அக்பருக்கு சந்தோசம்.மான் என்ன நினைத்த்தோ அவர் கைகளிலிருந்து திமிர அந்த மானின் கொம்பு பதம் பார்த்த்தோ அக்பரின் மர்ம உறுப்பில் இருக்கும் கொட்டைகளை.அந்த விபத்திருந்து மீண்டுவர அக்பருக்கு இரண்டு மாதம் ஆனதாம்.

சக்ரவர்த்தியின் பிரத்யோகமான அந்த காயத்திற்கு மருந்து போடும் பாக்கியம் எனக்கு கிடைத்து என்று உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார் அப்துல் ஃபஸல்.(ஐயோ கருமம், கருமம்)

காமடிகள் மட்டுமல்ல “இந்துக்களிடையே இறந்தவருக்கு கூட குடி தண்ணீர் தருகின்ற பழக்கமிருக்கு, நீ ஒரு சிறந்த முஸ்லிம். உயிரோடு இருக்கும் தந்தைக்கு குடி தண்ணீர் தர மறுக்கலாமா” – ஷாஜகானான் ஔரங்கசிப்பிடம் அனுப்பிய கடிதம், முகமதியர்கள் அரண்மனையை கைப்பற்றியதும் தீக்குளித்து மாண்டு போன ராஜபுத்திர பெண்கள், கோயிலை காப்பாற்றுவதற்காக போராடி மாண்டு போன சாதாரண இந்து குடி மக்கள் போன்ற நெஞ்சத்தினை உருக்கும் கனமான சம்பவங்களும் உண்டு.

யாருக்காவது ஆங்கிலேயர்கள் செய்த காமெடிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள்.


நன்றி – :

வந்தார்கள் வென்றார்கள் விகடன் புத்தகம் – மதன் என்கின்ற மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார்.



ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக -:

King Muslim jokes, Jokes of kings, Akbar joke, death of Indian Famous kings, Real incidents of kings life, Baber joke, human jokes, Adult jokes, Child Joke, Old king joke, Sultan jokes

புதன், 11 நவம்பர், 2009

வேட்டைக்காரன் திரை விமர்சனம்

நவம்பர் 12:

மச்சி டிசம்பர் 18 வேட்டைக்காரன் ரிலிசுன்னு சொன்னது தான். துள்ளிக் குதித்தான் என் நண்பன். நீ எப்பருந்துடா விஜய்க்கு ரசிகனானேன்னு நான் விசாரிச்சா.ரொம்ப எதிர் பார்த்த ஆதாவன் ஊத்திக்கிச்சு.இதையெல்லாம் பார்க்கிறத்துக்கு வடிவேலு படம், விவேக் படம் ஏதாவது வந்தா தேவலான்னு இருந்தேன்.விஜய் படமே வருதா எனக்கு சந்தோசம் தாங்கல.... அவன் பேசிக்கொண்டே போக நான் வியந்து போனேன்.

டிசம்பர் 18:

ஏதோ ஆளும்கட்சி பந்த் போல சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது. பாதி மக்கள் தியேட்டரில் கியூவில் நிற்க. மீதி பேர் வேட்டைக்காரன் படம் ஒரு அதிரடி ஆக்ஸன் படம் என பயந்து வீட்டில் பகுங்கியிருக்கிறார்கள்.( திரைக்கு வந்து சில நாட்களே ஆன சூப்பர் ஷிட் திரைப்படம் வேட்டைக்கான் இந்த ஞாயிற்றுக்கு கிழமை உங்கள் சன் டிவியில் என விளம்பரம் ஓடுகிறது கேட்கின்றதா?)

அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் உட்காருகிறோம். இளைய தளபதி வருங்கால முதல்வர் டாக்டர் விஜய் என பெயர் வந்ததும் எங்கும் சிரிப்பலை.ஒரு ரசிகன் வருங்கால அமெர்க்க ஜனாதிபதி விஜய் வாழ்கன்னு கோசம் போட அவனை எல்லோரும் கொலை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கிடையே அனுஸ்கா என்ற பெயரை பார்த்த்தும் விசில் தெறிக்கிறது.



விஜய் வெளிநாட்டில் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டு இந்தியாவிற்கு சேவை செய்ய வருகிறார்.ஏர்ப் போட்டில் எதிர்பாரத விதமாக அனுஸ்கா மேல் மோதிவிட அவருடைய பொருட்களெல்லாம் சிதறி விடுகிறது.சிதறு தேங்காய் ஞாபகம் வர விஜயும் பொருக்குகிறார். விஜயை திருடன் என நினைத்து அனுஸ்கா தலையிலேயே அடித்துவிடுகிறார்.
உடனே “எம் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது” பாடல் ஆரம்பமாகிறது. அனுஸ்காவும் விஜயும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த விசயம் எப்படியோ அனுஸ்காவின் அண்ணன் பன்னி பெருமாளுக்கு தெரிந்து விடுகிறது.அவர் அடியாட்களை அனுப்பி விஜயை கொல்ல சொல்கிறார்.விஜயும்,அனுஸ்காவும் அப்போது டைட்டானிக் கப்பலில் இருக்கிறார்கள். அடியாட்களும் விஜயும் சண்டை போடும் போது கப்பல் இரண்டாக உடைந்து மூழ்க தொடங்குகிறது.விஜய் சற்றும் யோசிக்காமல் கடலில் குதித்து ஒரு கையில் கப்பலையும், இன்னொறு கையில் அனுஸ்காவையும் எடுத்துக் கொண்டு நீந்துகிறார். அப்போது ஒரு பாடல்
“ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே”.பாடல் முடியும் போது கரையில் அனுஸ்காவின் அண்ணன் நிற்கிறார் அவர் விஜயை பார்த்ததும் நீ இன்னும் உயிரோடவா இருக்கிற என ஆச்சிரியப்பட்டு கத்துகிறார்.

இடைவேளை :

விஜய் சின்ன பையனா இருக்கும் போது பன்னி பெருமாளோட ஒரு பன்னியால ஊரிலே பன்னி காய்ச்சல் வந்திடுது.அதுல விஜயோட குடும்பம் செத்து போயிடுது. உடனே விஜய் உலகத்தில்ல இருக்கிற எல்லா பன்னி சாகடிக்கரதுக்காக ஒரே ஜம்பில் கடலை தாண்டி வெளிநாட்டுல போயிடறாரு. எல்லா பன்னியும்
“நான் அடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்கமாட்ட
மோதிபாரு வீடு போய் சேரமாட்ட”ன்னு பாட்டுபாடி டான்ஸ் ஆடியே சாகடிக்குறாரு அதாவது வேட்டையாடுராரு.அதுல டாக்டர் பட்டம் வாங்கிட்டு இந்தியா வந்ததுக்கப்புரம் தான் முதல் பார்ட்டுல நடந்தது.





அனுஸ்காவோட அண்ணனுக்கும் விஜய்க்கும் சண்டை நடக்குது. அவனுக்கு துணையா பன்னிகளும் வந்து சேர அத தூரத்திலிருந்து பார்த்த விஜய் வெள்ளை புலின்னு நினைச்சு
“புலி உறும்முது புலி உறும்முது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரதபார்த்து”ன்னு விஜய் பாட்டு பாடி டான்ஸ் ஆடுராரு.அதைப் பார்த்துட்டு பன்னிக் கூட்த்தோட அனுஸ்கா அண்ணனும் செத்து போயிடறான்.

விஜயும் அனுஸ்காவும்
“கரிகாரன் காலப்போல கருத்திருக்கிறது குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மகால் நிழலு”ன்னு
டூயட் பாடிக்கிட்டு இருக்காங்க. சுபமுன்னு போடுவாங்கன்னு பார்த்தா, இவரு பாட்டுப்பாடி டான்ஸ் அடினதுள்ள ஆடு,மாடு கோழி எல்லாம் செத்துப்போச்சு.
“டேய் எல்.கே.ஜி பெயிலான்னவெல்லாம் டாக்டர் பட்டம் வாங்கின இப்படிதான்” என ஊரே துரத்த மருத்துவர் ராமதாசிடம் அரசியலில் சேர ஓடுகிறார் விஜய்.

வேட்டைக்காரனின் வேட்டை தொடரும்.

குறிப்பு:- :



இந்த வேட்டைக்காரன் கதை விளையாட்டுக்கு தான், யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வேட்டைக்காரனின் பட்டையகிளப்பும் பாடல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Vijay’s latest film review, vettaikaran film review, Story of vettaikaran movie, anuiska, A.V.M in vettaikaran, SUN PICTURES in vettaikaran, Actor Vijay Joke, Vijay funny

செவ்வாய், 10 நவம்பர், 2009

வேட்டைக்காரன் (கோமாளி) விஜய்

கோமாளி விஜய்

இன்று என்ன வலைப்பூவில் பதியலாம் என மண்டையை கசக்கி யோசனை செய்த போது ஒரு குறுஞ்செய்தி வந்து கிச்சுகிச்சு மூட்டியது. சரி நாமும் நம்முடைய வலைப்பூவில் தேன் தேட வருபவர்களுக்கும் கிச்சுகிச்சு மூட்டுவோம் என்று எடுத்த முயற்சியே இது.

நடிகர் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம். அப்படியே பேச்சை மீறி ரொம்ப ஆர்வமாக படித்தாலும் வீடு தேடி வந்து அடிக்க வேண்டாம். சிரிக்க மட்டுமே மற்றவர் மனதினை புண்படுத்த அல்ல.

இன்றைய புதிய காமெடி பீஸ் யார் தெரியுமா அட நம்ம இளைய தளபதி விஜய் தானுங்க. இளசுகளின் மொபைல் இன்பாசில் இவரைப் பற்றிய காமெடி தான் இப்போதைக்கு லேட்டஸ்ட். அரசியலுக்கு வந்திடுவாரோ என பயந்து சிற்றிதல்கள் முதல் தின செய்திதால்கள் வரை அடக்கி வாசிக்க. கைப்பேசியில் கதரவிடுகின்றனர் எதிரணியினர்.பீடிகையெல்லாம் போதும் அப்படி என்ன தான் செய்தி வருகிறது என நீங்கள் கேட்பது புரிகிறது, சீக்கிரம் கீழே போங்க.




>>>>
>>>>
ஏங்க கொஞ்சம் சிரிங்க,

சிரிக்க மாட்டிங்களா...

சிரிக்க வைச்சுடுவேன்...

அப்புறம் கோவிச்சுக்க கூடாது

சிரிச்சிடுங்க

அட விஜய் அடுத்த படத்துல சிக்ஸ் பேக் வைக்கப் போராராம்.
பாத்திங்களா சிரிச்சிட்டிங்களே...இதுக்கு தான் முன்னையே சொன்னேன்.
>>>>
>>>>
விஜய் – நான் நம்ப பையனை வேட்டைக்காரன் படத்துக்கு கூட்டிட்டுப் போகப் போரேன்.
சங்கீதா - அப்பனாயா நீ, பெத்த புள்ளையையே கொல்ல பார்க்கறியே
விஜய் –????????
>>>>
>>>>
ரசிகர்- தலைவா உன் படம் ஒன்னு விடாம நான் திருட்டு விசிடியில பார்த்திருக்கேன்
விஜய் – அண்ணா தியேட்டருல்ல போயி படம் பார்த்தே இல்லையிங்களாண்ணா
ரசிகர் – போ தலைவா தனியா பார்க்க் பயமா இருக்குதில்ல
>>>>
>>>>
நடிகர் சூர்யாவின் வீடு...
சூர்யா – ஜோ காபி எடுத்துக்கிட்டு வா
ஜோ – என்னங்க ஒரு பிச்சக்காரன வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிரீங்க
சூர்யா – மெதுவா பேசு.அது விஜய், மேக்கப் இல்லாம வந்திருக்கிரார்
>>>>
>>>>
விஜய் – ஒரு தடவ முடிவெடுத்துட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்
ஒருவர் – உங்க பொண்டாட்டி
விஜய் – நானே கேட்க மாட்டேன்னு சொல்லறேன் எம் பொண்டாட்டி எப்படியா கேப்பா (அழுகிறார்)
>>>>
>>>>
அமெரிக்க உளவுதுறையின் மிகமிக ரகசியமான எச்சரிக்கை இது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அடுத்த மாசம் பல பேர் சாகப் போராங்கலாம்.அதைப் பத்தி தீவிரமாக விசானை செஞ்சதுள்ள வேட்டைக்காரன் படம் வெளிவரதுக்கு தயாரிப்பாளர் சம்மதம் தெரிவிச்சாச்சுன்னு தெரிஞ்சதாம்.எல்லாரும் படத்த பார்க்காம எச்சரிக்கையா இருங்க நமக்கு உயிர் தான் முக்கியம்.
>>>>
>>>>
ஒருவர் - தமிழ்நாட்டின் சிறந்த காமெடியனுக்கான விருது கொடுக்கரதுள்ள ஏதோ பிரச்சனையாமே
வேறெருவர் – ஆமான்யா எத்தன தடவ தான் விஜய்க்கே விருது தருவிங்கன்னு வடிவேலுவும், விவேக்கும் கோவிச்சுக்கிட்டாங்கலாம்
>>>>
>>>>
விஜயும், அஜித்தும் தேர்வு அறையில்....
விஜய் – தல கொஞ்சம் பேப்ரை காமியேன், பார்த்து எழுதிக்கிறேன்
அஜித் – டேய் நான் எழுதுரது தெலுங்கு பரிட்சை
விஜய் – நீ காட்டு மட்டும் காட்டு தல, நான் ரீமேக் பண்ணி எழுதிக்கிறேன்
அஜித் – அடப்பாவி
>>>>



>>>>
இன்னும் மோசமாகவெல்லாம் குறுஞ் சேதிகள் வந்தன. வருங்கால தமிழக முதல்வரைப் பற்றி தப்பாக எழுத கூடாதென விட்டுவிட்டேன்.அட ஏம்பா சிரிக்கிரீங்க.

வேட்டைக்காரன் பாடல்:

புலி உறும்முது புலி உறும்முது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரதபார்த்து
.......................................................................................................
.......................................................................................................
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வரான் பாரு வேட்டைக்காரன்

அட வாரான்யா.(படம் வரத சிம்பாலிக்கா சொல்லறாங்களா?)

அடுத்த சுவையான செய்தியோட சீக்கிரமே வாரேன்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Vijay joke, funny actor joke, tamil joke, tamil actor joke, Dr. Vijay , latest SMS jokes, child joke

செவ்வாய், 3 நவம்பர், 2009

வருத்தப் படாத வாலிபர் சங்கம்.

எமக்கு வந்த எட்டு சில குறுந்தகவல்கள்

SMS கைப்பேசி வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கின்ற மொழி.சங்கங்கள் தமிழ் வளர்க்க மட்டுமா, இல்லை இப்படி மற்றவர்களை தெரித்தோட வைக்கவும் தான் என அலரவைத்த மொக்கைகள் இங்கே.

1)மின்னலைப் பார்த்த கண்ணு போயிடும்.பார்க்காட்டி,மின்னல் போயிடும்.
-மின்னலைப் பார்த்தும் பார்க்காமல் சிந்திப்போர் சங்கம்.

2)குண்டூசி ஒல்லியாதானே இருக்கு.பின்னே ஏன் அதுக்கு குண்டு ஊசி பேர் வைச்சிருக்காங்க.
-குண்டூசியால் குத்திக் கொண்ட போது யோசித்தோர் சங்கம்.

3)கணவன் தன்னை புரிஞ்சிக்கலையேன்னு மனைவியும்,மனைவி தன்னை புரிஞ்சுக்கலையேன்னு கணவனும், நல்ல புரிஞ்சிக்கிட்டு வாழரது தான் வாழ்க்கை.
-புரிஞ்சதை புரிஞ்சுக்கிற மாதிரி பேசுவோர் சங்கம்.

4)நீ என்ன என்னோட லவ்வரா.உன்னைப் பார்த்ததும் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே மலைத்து நிற்கிறேன்.
-பரிட்சை வினாத்தாளை வாங்கியவுடன் கவிதை எழுதுவோர் சங்கம்.

5)கண்ணே உன்னை சுமந்த அன்னைக்கு அன்னையர் தினம் கொண்டாடியாச்சா.என்கிட்ட சொல்லியிருந்தா உன்னையும் அன்னையர் தினத்தினை கொண்டாட வைச்சிருப்பேனே.
-அன்னையர் தினத்தில் அன்னையாக்குவோர் சங்கம்.

6)சிலையை கும்பிடக் கூடாதுன்னு சொன்னார் பெரியார்.ஆனா தெருக்கு தெரு அவரோட சிலையை வைச்சு கும்பிடுகிறார்கள் தொண்டர்கள்.
-பெரியார் சிலைக்கு கீழே அமர்ந்து யோசிப்போர் சங்கம்.

7)டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்குள் போன அது சந்தோசம்.ஆப்பிரேசன் தியேட்டருக்குள் போய் டிக்கெட் வாங்கினா அது துக்கம்.
-டிக்கெட் வாங்க கியூவில் நிற்கும்போது யோசிப்போர் சங்கம்.

8)வாய்ப்பிழந்தமைக்கு வருத்தப் பட்டு கொண்டிருப்பதைவிட,வருத்தப் பட்டு வாய்ப்பை தேடுவது நல்லது.
-வருத்தப் படாத வாலிபர் சங்கம்.

அதென்ன எட்டு குறுஞ்சேதிகள் என வியப்பவர்களுக்கு ஒரு ஆன்மீகச் செய்தியை சொல்லிக் கொள்கிறேன், எட்டு சனிஸ்வரனுக்கு உகந்த எண். பொதுவாக எல்லோரும் எழரை என்பார்கள்,ஆனால் எண்கணிதம் அடிப்படையில் இப்படி.