தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

இரட்டைக் கோபுர வினோதம்

அமெரிக்காவையே அதிரவைத்த இரட்டை கட்டிடங்களையும் விமானம் மூலம் தாக்கி அழித்த நிகழ்வை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.அந்த விமானத்தின் பெயர் Q33N இதுதான்.

நீங்கள் செய்ய வேண்டியது,
1.உங்கள் கனிணியில் NOTEPADஐ திறந்துகொள்ளவும்.
2.அதில் விமானத்தின் பெயரை Q33N என டைப் செய்யவும்.
3.NOTEPADன் FONT அளவை 72க்கு பெரிது படுத்திக் கொள்ளவும்.
4.இறுதியாக FONTஐ WINGDINGS ல் வைத்துக் கொள்ளவும்.







இப்போது உங்கள் கண் முன்னே இருப்பதைக் கண்டு ரசியுங்கள்....
அடுத்த ஆச்சிரியத்துடன் விரைவில் உங்களை சந்திக்கின்றேன்.

உங்கள் ஜெகதீஸ்வரன்

அன்பார்ந்த பட்டாம்பூச்சி வாசகர்களே,

காலம் செய்த கோலத்தால் தங்களை சந்திக்க சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது.கணினி துறையில் இன்னும் மாற்றங்கள் வரவில்லை.உலக பொருளாதார தேக்கம் எல்லோரையும் விட எங்கள் கனிணி துறையை மிகவும் பாதித்து இருக்கின்றது.

சென்னைக்கு வேலை தேடும் ஆர்வத்தில் வந்தவன்,இப்போது அறிவை வளர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறேன்.கணினி இன்று எல்லா இடங்களையும் சென்றடைந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் கணினி பற்றி எல்லாமும் நாம் தெரிந்து கொண்டோமா என்பது கேள்விக்குறி.

நான் ஆங்கிலத்தில் படித்த,நண்பர்கள் எடுத்துக் கூறிய கணினி சம்மந்தப்பட்ட ஆச்சிரியங்களை இனி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.இதில் கொஞ்சம் என் சுயநலமும் உண்டு.ஆம் இடுகைகள் இடுவதற்காக நான் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை கண்டிப்பாக இந்த வலைப்பூ எனக்கு ஏற்படுத்தும்.அத்தோடு உங்களுக்கும் கொஞ்சம் நன்மையாகவும் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்...உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் கூறுங்கள்... பகிர்ந்து கொள்ளுதலில் பெருகும் குணம் கல்விச் செல்வத்திற்கு மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.

எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரனமான ஆசிர்வாதங்களோடு உங்கள் ஜெகதீஸ்வரன்.