தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

திங்கள், 23 நவம்பர், 2009

ஆன்மீகம் - கேள்வி பதில்

தேடல் மட்டும் தான் வாழ்க்கையை ருசியாக வைத்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய ஆன்மீக கேள்விகளுக்கு நான் தேடி கண்டறிந்த பதில்கள் இவை.

இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

மதம் என்பது மனித நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. இதை புரிந்து கொண்ட முன்னோர்கள் தங்களின் சந்ததியினருக்கு வாழும் முறைப் பற்றி சொல்லவும், உயிர்களை காக்கவும் பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைத்தனர். இந்த கதாபாத்திரங்களின் குணநலன்கள் மூலம் மக்களுக்கு நல்லதை எடுத்து சொன்னார்கள். (மிக மிக சுருக்கமாக சொன்னால் பாட்டி சொல்லும் நல்வழி கதைகள்) . எந்த ஒரு பொருளும் முழுக்க முழுக்க கற்பனையினால் உருவாக்கி விட முடியாது எனவே மனித ரூபத்தில் சில மாற்றங்களை செய்து கடவுள் எனவும் அந்த கடவுள்களுக்கு தங்களுடன் வாழ்ந்த மனிதர்களின் குணநலத்தை மிகப் படுத்தியும் வடிவமைத்தனர். இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் ஏகப்பட்ட கடவுள்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் புகழ் உச்சியிலிருத கிரேக்க மதத்தில் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பதை போன்றே குடும்ப கட்டமைப்புடன் காணப்பட்டன. கிறித்து மதத்தினை பொருத்த மட்டும் ஏசுவும், அவரது அன்னையும் கடவுளாக குறிப்பிடபட்டாலும் போப் முதல் பாதிரியார் வரை கடவுளாக மதிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமிய மதத்திலும் அல்லா முதல் கடவுள். அவருடைய வழியை உலகிற்கு சொன்ன தூதர்கள் நபிகள் பெருமான் வரை கடவுளாக மதிக்கப்படுகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தனை தெய்வங்கள் இருந்தும் அதென்ன குலதெய்வம்?

கடவுள்களின் தோற்றம் பற்றி நான் முன்பே கூறிவிட்டேன். குலதெய்வமும் அப்படிதான். ஆனால் குலதெய்வங்கள் உண்மையாலும் வாழ்ந்த மனிதர்கள். தங்களுடைய இன மக்களை காப்பாற்றுவதற்காக இறந்து போன முன்னோர்களையும், அதிசய குணம் கொண்டவர்களையும் மறக்காமல் இருப்பதற்காக மக்கள் ஏற்படுத்திக் கொண்ட வழிபாட்டு முறை குலதெய்வ வழிபாடு. பாப்பாத்தி, ராசாத்தி, வெள்ளையம்மா, பெரியண்ணன், கருப்பு, வீரபத்திரன் இப்படி ஒவ்வொரு குலதெய்வத்தின் பின்னாலும் ஒரு நெஞ்சம் நெகிழ்கின்ற உண்மை சம்பவமும் மனித வாழ்க்கையும் இருக்கிறது. இதுபற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?

விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன என்பதை நினைவில் கொள்க.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடவுளை நினைக்க கூடாது என சொல்லுகின்றார்களே?

இந்த கேள்வியே மிகவும் அபத்தமானது. இறையை நினைக்க கால நிர்ணயம் செய்ய இவர்கள் யார். இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் தீட்டு என கூறி சாமி அறைக்குள் செல்வதில்லை. இதற்கு முதல் காரணம் அறிவியல் தான். பெண்ணின் மாதவிடாய் காலங்களில் நடக்கும் உதிர போக்கு காரணமாக அவர்கள் உடல் சக்தியிழந்து காணப்படும். இந்த நேரத்தில் பூஜை செய்ய கூட்டி மொழுகி (அந்த காலத்தில்) அவர்கள் வேலை செய்தால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுவிடும். எனவே முன்னோர்கள் பெண்களை மாதவிடாய் காலங்களில் அதிக வேலை செய்ய அனுமதிப்பதில்லை. இதை தவறாக புரிந்து கொண்டவர்கள், பெண்களை கடவுளை நினைக்கவும் தடை செய்வது மிகவும் கேவலமான செயல். அவர்கள் இன்னும் இந்து மத கோட்பாடுகளை புரிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல் முறையில் நிறைய சடங்குகள் இருந்தாலும் தலையில் தேங்காய் உடைப்பது போன்ற மூடநம்பிக்கைகளும் காணப்படுகின்றனவே?

ஆம். இது எல்லா மதங்களுக்கும் உண்டான பிரட்சனை. இஸ்லாமியர்களின் குர்பானிதான் இந்து மதத்தின் பலி கொடுத்தல். உயிர் வதை என்பதை தடுக்க சட்டங்கள் வந்தாலும் இதை தடுக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வேதனை. சில இடங்களில் இவ்வாறான மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. இதனை சரி செய்ய முதலில் எதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்பதை வரையரை செய்ய வேண்டும். பிறகு இதனுடைய விளைவுகளை எடுத்து கூறி நாம் அவற்றை அழிக்க வேண்டும். பால்ய திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்றவையெல்லாம் விழிப்புணர்வு எற்படுத்தி நாம் அழித்து விட்டோம் என்பதை நினைவில் கொள்க.

வாஸ்து படி வீடுகட்டினால் சுபிட்சம் என்கின்றார்களே?

முதலில் வாஸ்து என்பது என்னவென அறிய வேண்டும். எல்லா இடங்களிலும் நில அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலை பிரதேசங்களில் ஒரு அமைப்பு, பாலைவனங்களில் ஒரு அமைப்பு, கலர் நிலங்களில் ஒரு அமைப்பு என காணப்படுகின்றன. இதனை கணக்கில் கொண்டும் வீட்டில் சூரிய வெளிச்சம் பரவ ஏற்றவாரும் எப்படி வீட்டை அமைப்பது என சொல்வது வாஸ்து. இப்போது வியாபாரமாகிவிட்டதால் பலரும் தவறு செய்கின்றார்கள்.

நட்ச்திரம், ராசி , ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது உழைப்பு மட்டும் தான். கல்லை நம்புவதோ, ஜாதகத்தினை நம்புவதோ உயர்விற்கு பலன் தராது. ஜாதகம் என்பது ஒரு கணக்கீடு, வெகு சிலர் மட்டுமே அந்த கணக்கீட்டில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றார்கள்.(உலக புகழ் பெற்ற நாஷ்டோடாமஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிரீர்களா) புதிய கோள்கள் கண்டறியப்பட்டும் கூட பழைய முறையை இன்னும் ஜாதகம் பார்ப்பவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் முறையான கணக்கீட்டை அவர்களால் கணித்து கூறுவது கடினம். பெயரை மாற்றுவது, வீட்டை மாற்றுவது, வாகண எண்ணை மாற்றுவது என செய்யாமல் உங்களுடைய கவணத்தினை தொழில் பக்கம் மாற்றினாலே வெற்றி கிடைத்துவிடும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Hindu gods, religion questions and answers, Hindu questions and answers, big religion questions and answers, Tamil Hindu questions and answers, questions and answers in Tamil, wrongs and rites

வெள்ளி, 20 நவம்பர், 2009

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் இன்று.

தன் எடையில் சரி பாதி புத்தகம் சுமக்கும் கழுதையாய், பெற்றோர்களின் வறுமையை துடைத்தெரிய தொழிலாளியாய், பிச்சையெடுக்கும் மக்களுக்கு கருவியாய், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் அன்பு கிடைக்காமல் தனிமையாய் இன்னும் எத்தனை எத்தனையோ. இதில் புதியதாக சேர்ந்திருக்கிறது பாலியல் வன்கொடுமை. ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லா குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன இந்த கொடூரத்தில். இதை தடுக்கவும், விழிப்புணர்வு செய்திடவும் இங்கு ஆளில்லை என்பதே உண்மை.

தனக்கு என்ன நடக்க போகிறது என்று அறியாமலேயே ஒரு சாக்லேட்டுக்கும், விளையாட்டுப் பொருள்களுக்கும் ஆசைப்பட்டு செத்து போகும் குழந்தைகள் பற்றி நம்மில் எத்தனை பேர் கவலை படுகின்றோம். சரியாக சொல்லப் போனால் யாருமில்லை. நொய்டா பிரட்சனை பகிரங்கமாக தெரிந்தும் இதற்கென சிறப்பு தடுப்பு சட்டம் போடாமல். நம் அன்றாட பிரட்சனையை கவணிக்க போய் விட்டோம்.நகரெங்கிலும் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கும் வேளையிலும் அந்தப் பெண்களிடம் போகாமல் குழந்தைகளை ருசி பார்த்து அலைகின்றது ஒரு கூட்டம். காவல் அதிகாரிகள் பிடித்து கொடுத்தாலும் விசாரனை முறைகளில் வெளியே வந்து விடுகின்றார்கள் குற்றவாளிகள். நாடு விட்டு நாடு வந்து ஒருவன் பல குழந்தைகளை சீரழித்திருக்கின்றான். அவனை பிடித்து ஊர் மக்கள் காவலர்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இப்போது அவன் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். எப்படி வெளிவந்தான் என எல்லோருக்குமே தெரிந்துவிட்டது.

மற்ற பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் நடைபெறும் குற்றங்களை கூட நாம் பெரிது செய்ய இயலாது. தனக்கு ஒத்து வராத மேல் அதிகாரிகள், கணவன் குடும்பத்தினர் என எல்லோரையும் சில பெண்கள் பழி தீர்ப்பதற்காக அபாண்ட குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள். காதல் என்று சொல்லி பலருடன் ஊர் சுற்றி கர்பம் தரித்துவிட்டு கலைக்க முடியாது போனால் மட்டுமே திருமணம் என்ற கொள்கை வைத்திருக்கின்றார்கள் பெண்கள்.மனைவி இருக்கும் போதே பிற பெண்களை தேடும் கணவன்கள். தங்களின் மகிழ்வுக்காக பெண்களை கிண்டல் செய்யும் வாலிபர்கள் என பலரும் இருக்கின்றனர்.

நாம் இவர்களுக்காக தான் கவலைப் படுகின்றோம். குழந்தைகளை மறந்து விடுகின்றோம். அவர்களுக்கென புத்தகங்கள் இல்லை, திரைப்படங்கள் இல்லை, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் இல்லை. மொத்தத்தில் கவணிப்பாரற்று தங்கள் போக்கில் வளரும் காட்டு செடியாக இருக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் சிறுமியும் சிறுவன் எந்தளவிற்கு கொடுமையை அனுபவிக்கிறான் என பள்ளியில் போய் பாருங்கள். பேச்சாலே கொல்லும் ஆசிரியர்கள் முதல் விதவிதமான கொடுமை செய்யும் சாடிஸ்டுகள் வரை இப்போது பள்ளிகளில் இருக்கின்றார்கள்.

மலரினும் மெல்லிய குழந்தைகள் கசக்கப்படுவதை முயன்றவரை தடுத்திடுவோம். அதற்காக உறுதி எடுத்திடுவோம்.இந்தக் அழகிய குழந்தை யாரென தெரிகின்றதா.உலகையே தனக்குகீழ் கொண்டுவர முயன்ற ஹிட்லர். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த மனிதனின் குழந்தை பருவமும் அழகு தான்.

சாதிகள் இல்லையடி பாப்பா – சிறுகதை

அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் அறையில்,

“ஐந்து வயசாயிடுச்சா”

“ஆயிடுச்சுங்க”

தலைமையாசிரியர் ஒரு தாளை எடுத்து எழுது தொடங்கினார்

“பொண்ணு பேரு”

“பூங்கொடி”

“அப்பா பேரு”

“நான்தானுங்க”

“யாருன்னா கேட்டேன். பேரைச் சொல்லுயா”

“ராசய்யா சாமி”

“இந்து தானே”

“ஆமாம் சாமி”

“முன்னையெல்லாம் பேரைச் சொன்னாலே மதமும் தெரிஞ்சு போயிடும். இப்ப மதம் மாறினாலும் பேரையும் விடரதில்லை, சாதியையும் விடரதில்லை” என மெதுவாக முனகியபடி,

“சரி, என்ன சாதி”

“ ****************** ”

“பார்க்கரப்பவே நினைச்சேன்” மீண்டும் முனகல்.

“பையனை பள்ளிக்கூடத்துல சேத்தாச்சு. வலது கை பக்கமா போயி ஒன்னவது வகுப்பு எதுன்னு கேளு, சொல்லுவாங்க அங்க உட்காரவைச்சுட்டு போ”

“ஏ புள்ள சாமிக்கு வணக்கம் வையி”. சிறுமி வணக்கம் வைத்தாள். ஏதோ ஞாபகம் வந்தவராக,

“பொண்ண, பின்னாடி வரிசையில உட்கார சொல்லு”

“நல்ல படிப்பா சாமி, அதனால...”

“சொல்லரத கேளுயா, நீங்க பாட்டுக்கு முன்வரிசையில உட்கார வைச்சிட்டு போயிடறீங்க, எப்படி எங்க குழந்தைகங்க அவங்கள தாண்டிப் போயி உட்காருன்னு மேல்சாதி காரங்க சண்டைக்கு வாராங்க”

முகம் வாடிப்போய் அவர் வெளியேர, சிறுமி சுவரில் மாட்டப்பட்டுருந்த படத்தை பார்த்தபடியே அவருடன் சென்றாள். தலைமையாசிரியரும் கவணித்தார் பாரதியாரின் புகைப்படம் கீழ் “சாதிகள் இல்லையடி பாப்பா” வரிகள் மின்னின. அதை நோக்கி சென்றார் அகற்றுவதற்கு.

பி.கு –

பள்ளிக்கு படிக்க வருகின்ற குழந்தை முதன் முதலாக கற்றுக் கொள்வது தனது சாதியைதான். பள்ளியின் குறிப்புகளிலிருந்து அகற்றினாலே சாதிகள் அழிந்துவிடும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக-

Short story, Tamil story, Tamil short story, small Tamil story, free story

வியாழன், 19 நவம்பர், 2009

கவுண்டரும் கருத்துப்படமும்


கருத்துப்படம் போட்டு சின்னாதாய் ஒரு கலகம் உண்டு பண்ணலாம் என தோன்றியதும் கவுண்டரிடம் போனேன். சின்னக்கவுண்டர் இல்லைங்க, நம்ம புரட்சி புயல் கவுண்ட மணி. அவரிடம் கால் சீட்டு கிடைச்சிருச்சு. அதோட செந்திலும் வாரேனுட்டார். இனி அவர்கள்...(நவம்பர் 18ம் தேதி வெளிவந்த செய்திகளை வைத்து ஒரு கற்பனை.)

கவுண்டர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்க, செந்தில் வீட்டிற்குள் வருகிறார்.

கவுண்டர் – டேய் கம்பியூட்டர் தலையா, எங்கடா போய் ஊர் சுத்திட்டு வார?

செந்தில் – அது ஒன்னுமில்லைண்ணே, நாட்டுல என்ன நடக்குதுன்னு போய் பார்த்துட்டு வாரேன்.

கவுண்டர் – ஆமா இவர் பெரிய ஐநா செயலாலரு நாட்டை பத்தி பேசராரு. அப்படி என்னாடா நடக்குது நாட்டுல?

செந்தில் – ஆடு நடக்குது, மாடு நடக்குது...

கவுண்டர் – அப்படியே ஓங்கி உதைச்சானா ஒசாமாகிட்டயே போயிடுவ, ஒழுங்கா சொல்லுடா.

செந்தில் – நம்ப முதல்வரு அழுவராருன்ணே(செந்திலும் குலுங்கி குலுங்கி அழுவராரு)

கவுண்டர் – (கவுண்டருக்கு கண்ணெல்லாம் கலங்கிப்போகிறது.இருந்தாலும் மனசை தேற்றிக் கொண்டு)நீ அழாதடா நாயே, கலைஞர் ஏன் அழுவராரு. கொள்ளு தாத்தாவா ஆனதக்கப்புறமும் முதலமைச்சர் நாற்காலியை விட்டு நவுர மாட்டேங்குராரு என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவருக்கு என்னாடா கஷ்டம்

செந்தில் – விடுதலை புலிகள் செஞ்ச தவறுகளால தான் இன்னைக்கி ஈழத் தமிழர்கள் கஷ்டப்படராங்கன்னு சொல்லி பழைசை நினைச்சி அழுவராரு!

கவுண்டர் – அட முள்ளம்பன்றி தலையா அது நீலிகண்ணீர்டா. புள்ளைக்கு மந்திரி சீட் வாங்க அவர் டெல்லி போனது, தமிழ்நாடு நதிகள் இணைப்பு தள்ளிப்போட்டது, முல்லை பெரியாரு அனை பிரச்சனை என எல்லாம் இப்ப அவருக்கு எதிரா மக்களுக்கு தெரிஞ்சுபோச்சில்ல.அதான் தந்திரமா திசை திருப்பராரு.

செந்தில் – ஏன்ணே இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்கலாண்ணே.

கவுண்டர் – இதுவும் பண்ணுவாங்க, இதுக்கு மேலையும் பண்ணுவாங்கடா. நீ வேணா பாரு தமிழ்நாட்டு அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தம்பிதான். எப்பவோ வந்திருக்க வேண்டியவரு இன்னும் சும்மாவே இருக்காரு. அப்புறம் டெல்லில நம்ம ராகுல் தான்.

செந்தில் – ஏன்னே இவ்வளவு செய்சும் மக்கள் நம்பராங்களான்னே

கவுண்டர் – அதான் விதிங்கிறது. பக்கத்து நாட்டுல போர் செஞ்சு மக்களை கொன்னு குமிக்கும் போது இவுங்க காசு வாங்கி ஓட்டு போட்டாங்க. அனுபவிக்கட்டும், அப்பதான் புத்தி வரும். வேர என்னடா செய்தி.

செந்தல் – சர்மிலி மலையாளப் படத்துள்ள நடிக்க போகுதாண்ணே

கவுண்டர் – இந்த புள்ள ஏன் அங்கே போவுது. ஏற்கனவே ஷகிலானால லாலோட படங்கூட ஓடமாட்டேங்கிதுன்னு இப்பதான் அத வெளியே துரத்தினாங்க. பாவம்பா கேரளா நடிகருங்க.

செந்தில் – அண்ணே அப்புறம் ஷெட்லி பத்தி,...

கவுண்டார் – டேய் வேணான்டா அவுன்கள சிபிஐ பாத்துக்கும் நீ சாப்பிட ரெண்டு இட்லி கொண்டா

செந்தில் – (தயங்கியபடி மெதுவான குரலில்)அண்ணே எல்லா இட்லியும் நானே சாப்பிட்டேன்னே.

கவுண்டர் – அடே பாம் தலையா இப்படி நீ பண்ணுவேன்னு எனக்கு முதலையே தெரியுண்டா அதான் கடைக்கு முன்னாடியே சொல்லிவிட்டுட்டேன். இவ்வளவு விசயம் சொன்னியே உனக்கு ராசிபலன் பார்த்தியாடா

செந்தில் – பார்த்தேன்னே, யோகம் அடிக்கும் போட்டிருந்துச்சு.

கவுண்டார் – உனக்கு யோகமெல்லாம் அடிக்காது டா, இட்லியை ஒன்னுவிடாம தின்னதுக்கு நான் தான்டா அடிப்பேன். இந்தா வாங்கிக்கோ, இந்தா....

வழக்கம் போல செந்திலை கவுண்டர் துரத்துகிறார்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Politics leader, politics jokes, politics news, kounder, sendil, kowdamani sendil comedy, fake dialog , politics member and minister jokes, tamil nadu politics joke, karunaneethi, ragul Gandhi, Sonia Gandhi, prinka Gandhi, starlin, Tamilnadu chief minister , india prime minister , cine joke, south cinema news

சுஜாதா மென்நூல்கள்

சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் திருவரங்கத்தில் பிறந்தவர்.பெரும்பாலான கதைகளில் அதன் தாக்கம் நிறைந்திருப்பதை காண முடியும். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எதுவுமே படிக்க படிக்க திகட்டாதவை.

சுஜாதாவின் அனைத்து படைப்புகளும் மென்நூல் வடிவில் கிடைப்பதில்லை. என்றாலும் இங்கு கொஞ்சம் மென்நூல்கள் இருக்கின்றன. தரவிரக்கம் செய்து படியுங்கள்.

ஆ நாவல் –

கணேஷ் வசந்த் நாவல்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ஆ. ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஆ என்ற சொல்லுடன் முடித்திருப்பார். நான் சில இடங்களில் அது திணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இருப்பினும் மிக அழகாக புதிய முறையை புகுத்தியமை வியப்பு தருவதாக இருந்தது.

இந்த நாவல் இந்து மதத்தின் பூர்வ ஜென்ம விசயங்களை சார்ந்தது. அதை மெய்யென சொல்லும் விதமாக எழுதப்பட்ட புனைவு கதை. தன் மனைவியை கொல்லும் ஒருவன், நான் அந்த கொலையை செய்யவில்லை என வாதிடுவதும், அந்த உண்மையை வக்கில் சரியாக வாதாடி நிறுபிப்பதும் கொஞ்சம் புதுமை. முக்கியமாக கட்டளை இடுவதாக ஒரு குரல் அவனுக்குள் ஒலிப்பது நமக்கு கூட சில சமயங்களில் இப்படி நடந்ததே என எண்ண வைக்கும். நாவல் படித்து பல மாதங்கள் ஆன பின்பும் கூட இன்னும் ஜெயலட்சுமி டீச்சர் மனதிலே இருக்கிறார். இது நாவலுக்கு கிடைத்திட்ட வெற்றி.

ஆ நாவல் தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

அனிதாவின் காதல்கள்

அனிதா மாதிரி ஒரு லூஸ் இருக்குமா என்று கதையை படிக்கும் போது தோன்றியது. இதில் அனிதா என்ற பிரமணப் பெண் எதையும் முடிவெடுக்காமல் இருக்கின்றாள். அவளுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானித்தாலும் கடைசியாக அவள் ஒரு முடிவெடுப்பதுதான் கதை. மிக பெரிய பணக்காரன் ஒருவன், சொந்தகாரன் ஒருவன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழன் ஒருவன், இப்படி வருவோர் போவோரெல்லாம் அனிதாவை காதல் செய்வதாக நாவல் போகின்றது. கோடிகளில் புரலும் கணவன் திடீரென நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் ஒரு தமிழ் பெண் என்ன செய்வாள். பெண் குடும்பம் அதை எப்படி பார்க்கும், ஆண் குடும்பம் எப்படி பார்க்கும் என சாதாரண சமூகத்தின் கதை இது.

எழுத்தாளர் சுஜாதா எழுதியதிலேயே சுமாரான நாவல் இதுவாகத்தான் இருக்கும். கணேஸ் வசந்தை இந்தக் கதையில் எதிர்பார்த்து நான் அடைந்த ஏமாற்றமாக கூட இருக்கலாம்.இருப்பினும் சேர் மார்கெட் போன்ற விளக்கங்களை கேட்கும் போது சுஜாதா அவர்களின் பல்துறை அறிவு வியப்பளிக்கிறது.

அனிதாவின் காதல்கள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

கற்றதும் பெற்றதும் -

ஆனந்த விகடனில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் தொகுப்பு. சுஜாதாவை வாரம் ஒரு முறை வீட்டிற்கு கூட்டிவந்த அற்புதமான தொடர். சுஜாதா சினிமா முதல் அரசியல் வரை அலசிய மேடை.

கற்றதும் பெற்றதும் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மெரினா நாவல் –

தீய நண்பர்களின் சகவாசமும் பணமும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதற்காக எழுதப்பட்ட நாவல். வழக்கமான முடிவை யூகம் செய்ய கூடிய நாம் கடைசியில் ஏற்படும் திருப்பத்தினை எண்ணி வியப்படைய வேண்டியிருக்கும்.

இது ஒரு கணேஷ் வசந்த் நாவல்.

மெரினா நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விக்ரம் நாவல் –
நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தின் மூலம் இந்த நாவல். இந்தக் கதை பலருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படம் வசுல் சாதனை புரியவில்லை என கமல் 50 ரசிகன் எக்ஸ்பிரசில் சொன்னார்கள்.

விக்ரம் நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்.

சுஜாதா சிறுகதைகள் -

சுஜாதாவின் குட்டி குட்டி சிறுகதைகளின் தொகுப்பு. யதார்த்ததோடு விஞ்ஞானமும் கூடி கலக்க கூடிய கதைகள். ஹிமோபிலியா நோய் முதல் திருபதி கோவிலின் தீர்க தரிசனம் முதல் சின்ன சின்னதாய் வியப்பு ஒவ்வொரு கதையிலும் இருக்கிறது.

சுஜாதா சிறுகதைகள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய Sujathavin Sirukathaigal.pdf

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Sujatha Aah..!, Sujatha Anithavin Kaathalgal,Tamil Novel, Sujatha Katrathum Petrathum, Sujatha-Eppadiyum Vaazalaam,Sujatha-Kadavul Irrukkiraram,Sujatha-Kanayaliyin Kadaisi Pakangal, Sujatha-Oru Vingyana PaarvailIrundhu,Sujatha-Vikram, Sujathavin Sirukathaigal ,Sujatha books in pdf format,Sujatha all book links,download Sujatha e book free,free download novels,shoetstory, free tamil novel,short story in PDF format

சத்குருவும் சங்கரன் பிள்ளையும்

வாசுதேவ் என்றவுடன் உங்களுக்கு கௌம் வாசுதேவ் மேனன் ஞாபகம் வந்தால் நீங்கள் திரைப்பட ரசிகன்.அதுவே சத்குரு ஜக்கி வாசுதேவ் ஞாபகம் வந்தால் நீங்கள் வாழ்க்கையின் ரசிகன்.

புத்தகங்கள் ஆகட்டும், தொலைக்காட்சி ஆகட்டும் எதிலும் சத்குரு சொல்வதை கேட்கும் போது ஒரு நிம்மதி, ஒரு தெளிவு. நான் யோகா கற்றுக் கொள்வதற்காக ஈசாவுக்கு சென்றதில்லை என்றாலும் ஈசாவைப் பற்றி எனக்கு நிறைய தெரியும். அதற்கு புத்தகங்களும் தொலைக்காட்சியும் உறுதுனையாக இருந்தன.

அத்தனைக்கும் ஆசைப்படு என்ற புத்தகத்தில் சங்கரன் பிள்ளை என்றொரு கதாபாத்திரம் மூலமாக அவர் சொல்கின்ற கருத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அந்த சங்கரன் பிள்ளையை உங்களுக்காக வலைப்பூவில் உலவவிட்டிருக்கிறேன்.பாருங்கள் சங்கரன் பிள்ளையை......

நீதிபதியும் சங்கரன் பிள்ளையும் -

சங்கரன்பிள்ளை ஒரு முறை குடித்துவிட்டு கலாட்டா செய்தார். அவரை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்தனர். அவரிடம் நீதிபதி சலிப்பாக, “மறுபடி மறுபடி கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா உன்னை சொல்லி குற்றமில்லை.எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!” என்றார். உடனே சங்கரன்பிள்ளை “ உங்களுக்காவது உண்மையான காரணம் தெரிந்திருக்கிறதே!.என் மனைவி விஸ்கியை சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்” என்றார்.

நாமும் இப்படிதான் நம்முடைய இயலாமையை மறைத்துவிட்டு யார் யார் மேலோ குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறோம்.

“எண்களையும், எழுத்துகளையும் உருவாக்கியதே மனிதன் தானே?. அவை எப்படி மனிதனை உருவாக்க முடியும்?.உங்கள் திறமையை நம்பித் தொழிலை துவங்குவீர்களா?, இல்லை எண்களை நம்பியா?” என நியூமராலஜி, நேமாலஜி என சுற்றி கொண்டிருக்கும் மூடநம்பிகை மிக்கவர்களை சொல்லாலே திருத்துபவர் சத்குருவை தவிற வேறுயாராக இருக்க முடியும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sathguru Jaki vasudev , jaki book, sankaran pilli, hindu darma, hindu wisdom, hindu stages, legends of religion, story form tamil nadu, tamil kadai, vasudev book, guru story, guru talk, sathguru think

கருத்துப் படம்

நாம் கடந்து வந்த செய்திகளை வைத்து கார்ட்டூன் படங்கள். இப்ப வலைப்பூக்களில் இது தான் பேசன்.


அமெரிக்க ஜனாதிபதி அர்னாடுக் கிட்ட போட்டு கொடுக்குறாரு எல்லோரும் ஓடிப் போயிடுங்க. அட சங்கத்த கலைங்கப்பா.....

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Cartoon, pictures, today Story, karunaneethi cartoon, tamil nadu cartoon, obama cartoon, DMK cartoon, tv shows, vijay tv show, sun tv show, zee tv show, cartoon for tamil people, legends of tamil nadu, USA cartoon, Arnold cortoon, politics leader jokes, cine joke, cinema jokes and cartoons

செவ்வாய், 17 நவம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் – 3

அன்பு எதையும் பொருட் செய்யாது என்பதே உண்மை.ஈசன் அருளில் தொடரின் மூன்றாவது பாகம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு.

சிவனோடு பதினென் சித்தர்களும்.
சித்த மருத்துவம் –

சித்தர்கள் மக்களுக்கு செய்த நன்மையில் மிக முக்கியமானது மருத்துவ உதவி. கொல்லிமலை, சதுரகிரி, பொதிகை மலை, பழனி மழை, திருவண்ணாமலை என பலபல மலைகளில் செடிகள், கொடிகள், பட்டைகள், வேர்கள் என ஆய்வு செய்து மருத்துவ துறைக்கே புதிய வழிமுறையை வகுத்தவர்கள். இதை நாம் தமிழ் மருத்துவம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பல பெயர்களில் அழைக்கிறோம்.

இந்த வைத்திய முறையில் மட்டுமே பக்க விளைவுகள் எனப்படும் பெரும்குறைபாடு இருக்காது. எளிமையான வழி முறைகளும், விலை அதிகமில்லா இயற்கை தாவரங்களும் மக்களிடம் சித்த மருத்துவத்தை தனித்தன்மையில் வைத்திருக்கின்றன. பல மருத்துவமுறைகளில் குணமாகாத நாள்பட்ட நோய்களுக்கும் சித்த மருத்தும் தீர்வு சொல்கின்றது.

சித்தர்கள் வெறும் செடி,கொடிகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை. மனிதனின் உடலினையும் ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடிகள், பித்தங்கள், ஞானேந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தெளிவான மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

தாங்கள் கண்டறிந்த எண்ணற்ற மருத்துவ குறிப்புகளை மறைக்காமல் பாடல்களாக எழுதிவைத்தவர்கள். சில மதிப்புமிக்க குறிப்புகள் அடங்கிய நூல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது வருத்தமான செய்தி. இந்த குறிப்புகள் தமிழில் மட்டுமல்லாது, சீன மொழியிலும் காணப்படுவதாக வரலாற்று ஆசிர்யர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள ஆங்கில மருத்துவம் கூட அவற்றை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டது.

பக்க விளைவுகள் –

சித்த மருத்துவத்தைப் பொருத்த மட்டில் பின்விளைவுகள் என்ற பயங்கரம் இல்லை. மற்ற மருத்துவத்தில் ஒரு நோய் குணமாவதற்கு எடுத்துக் கொண்ட மருந்தானது மற்றொரு நோயை தோற்றுவிக்கும் குணம் படைத்தது.(என்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு கற்பப்பை புற்று நோய்க்கான மருத்தும் செய்யப்பட்டது. அந்த மருத்துவத்தின் பக்க விளைவால் சில நாட்களில் வெண்குஷ்டம் எனப்படும் தோல்வியாதி அவருக்கு வந்துவிட்டது.) ஒரு நோயை குணப்படுத்திய மருந்து மற்றொரு நோய்க்கு வழிகாட்டியாக அமைந்துவிடும் கொடுமை மற்ற மருத்துவங்களில் இருக்கிறது. ஆனால் முறையான சித்த வைத்தியத்தில் இல்லை.

பத்தியம் -

சித்த மருத்துவத்தில் பின்விளைவுகள் இல்லாதது எத்துனை சிறப்போ அது போலவே பத்தியமும். சில நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பத்தியம் எனப்படுகின்ற உணவு கட்டுப்பாடு உண்டு. இதன் மூலம் தேவையில்லாத ஒவ்வாமைகளை தடுக்கின்றனர்.

இரசவாதம் –

சித்தர்களைப் பற்றி இன்று பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காரணங்களில் ஒன்று இந்த இரசவாதம். இரசவாதம் என்பது ஒருவகையான வேதியியல் முறை. எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயாரிக்கும். சொர்ணம் என்றதுமே சொக்கி போய்விடும் மனிதர்களில் பலர் இந்த சூட்சமம் அறிந்துகொள்ள மலைகளில் அலைந்து கொண்டும், கோடிக்கணக்கான பணங்களை ஆய்வுக் கூடங்களிலும் செலவு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்போது தான் இதைப் பற்றி கேள்விப் படுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான முறையில் செய்தால் நிச்சியம் தங்கம் கிடக்கும்.இதை ஆங்கிலத்தில் ALCHEMY என்று சொல்வார்கள்.இதைப் பற்றிய ஆய்வுகள் உலகமெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல்...

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

இப்படி செய்தால் தங்கம் கிடைக்குமா என ஐயப் படவேண்டாம். நிச்சியம் கிடைக்கும், ஆனால் அவர்கள் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான் சொர்ண ரகசியம் பலிக்க வேண்டுமென்றால் சொர்ணத்தின் மீது உங்களுக்கு ஆசை இருக்க கூடாது. உங்களுக்கு தங்கத்தின் மீது ஆசையில்லையென்றால் இரசவாத முறைகளை தேடிப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதிர்ஸ்டகாரனாக இருக்கலாம்.

பஞ்ச பட்சி சாத்திரம் –

ஐந்து வகையான பறவைகளை கொண்டு எழுதப்பட்ட சாத்திரம் பஞ்ச பட்சி சாத்திரம். அந்த பறவைகள் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். பறவைகளுக்கும் மனிதனுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து இந்த சாத்திரம் எழுதப்பட்டிருக்கின்றது.

இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும்.அந்த ஐந்து செயல்களை ஊண், நடை, நித்திரை, அரசு, மரித்தல் என்பர். ஆனால் வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறி நடக்கும்.

நாடி சோதிடம்-

பஞ்ச பட்சி சாத்திரம் போல இதற்கு தனி முறைகள் காணப்படுகின்றன. இதனைப் பற்றியும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றியும் பின்பு விரிவாக காணலாம். நாடி சோதிடம் மற்றும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றிய பாடல்களை எழுதியவர் அகத்தியர்.

தியானம் மற்றும் யோகா –

முதலில் தியானத்திற்கும் யோகாவிற்குமான வேறுபாட்டினை புரிந்துகொள்ள வேண்டும். தியானம் என்பது மனதினைக் கட்டுபடுத்தக் கூடிய வகையில் ஓரிடத்தில் அமர்ந்தோ நின்றோ செய்யக் கூடிய அகம் சம்மந்தமான செயல்.ஒரு பொருளைப் பற்றி மட்டும் சிந்தித்தல் தியானம் என்கின்றனர்.பல வகையான தியான முறைகள் இன்றளவும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. சற்குருவின் தியான லிங்க அமைப்பை ஆன்மீக அறிவியலின் புதிய முறையாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.

யோகா என்பது அகத்துடன் புறத்தையும் இணைத்து சில படிநிலை ஆசனங்கள் மூலம் இறை நிலை அடைதல். தற்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், வேதாந்திர மகரிசி, நித்தியாநந்தர் போன்றோரும் யோகா வழிமுறைகளை கற்று தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வழிமுறைகளும் சித்தர்களின் வழிமுறைகளை சார்ந்தே உள்ளது.என்றாலும் அவைகளை அடிப்படியாக எடுத்துக்கொண்டு நடைமுறைக்கு தக்கவாறு மாற்றம் செய்துள்ளார்கள்.

பாஷானம் –

பாஷானம் என்பது விஷம். பாதரசம் முதலிய பாஷானங்களிருந்து மருந்து தயாரிப்பது, அதைக் கொண்டே சிலைகள் செய்வது போன்ற பெரும் கலைகளில் வல்லவர்கள் சித்தர்கள்.இந்த பாஷான சித்தர்களில் மிகப் புகழ் பெற்றவர் போகர். இவர் தான் பழனிமலையில் இருக்கும் நவபாஷானத்தினாலான தண்டபாணி முருகன் சிலையை செய்தவர்.

சித்தர்கள் வான் வழியே பறப்பவர்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி அவர்கள் பறப்பதற்கு பாதரசம் என்ற பாஷானத்திலிருந்து ஒருவகையான மணியை செய்து பறந்து செல்வார்கள் என ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த மணியின் பெயர் சூதவான் மணி.

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இந்த மணியைப் பற்றிய செய்தி இருக்கிறது.

கற்பக மூலிகைகள் -

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடல் -
"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.

இவர்கள் இயற்றிய பல தமிழ் நூல்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், மருத்துவம் முதனான துறைகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றன.
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.

மேலும் அற்புதங்களுக்கு -

1.துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்.

2.முனைவர் இர.வாசுதேவன் *தமிழில் மருத்துவ இலக்கியங்கள்*, பூங்கொடி பதிப்பகம்.

3. http://snapjudge.wordpress.com/2008/04/29/ட்விட்டர்த்துவம்/#comment-12568.

4. விக்கிபீடியா

பி.கு –

அடுத்த சித்தமெல்லாம் சிவமயத்தில் அகத்திய மாமுனியின் அற்புதங்கள். காத்திருங்கள் அகத்தியரின் தரிசனத்திற்கு.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sivan, Sivan Story, tamil old people, cetharkal, Sithairkal, Sithergal, Sithargal,mamuni, akatheyar,tamil medical, tamil Songs, tamil poems, 18 hindu guru, munevarkal, munigal

மர்மங்கள் தொடரும்...

திங்கள், 16 நவம்பர், 2009

ஆத்தா நானும் பாஸாயிட்டேன்இது பட்டாம்பூச்சி வலைப்பூவின் வெற்றிகரமான நூறாவது இடுகை. அனைவருக்கும் நன்றி.

படத்தில் நூறு பூனைகளுடன் ஒரு எலியும் இருக்கிறது. அந்த எலியை கண்டுபிடிச்சுட்டா நீங்கதான் புலிகண்டுபிடிக்காதவங்க கீழே போங்க. கண்டுபிடிச்சவங்க பேரை கருத்துரையில் பதிவு செஞ்சிடுங்க.இது தான் அந்த எலி.

இலவச காமிக்ஸ் புத்தகங்கள்

மசாலா படம்
நகைச்சுவை படம்
கருத்துப்படம்குழந்தை படம்மசாலா படங்கள், நகைச்சுவை படங்கள், கருத்துப் படங்கள் என பல்வேறு படங்கள் இருந்தாலும் அந்தகாலம் முதல் இந்த காலம் வரை குழந்தைகள் படங்கள் என்றாலே எல்லோருக்கும் தனி ஆசைதான். ஆனால் குழந்தைகளுக்கு?. சந்தேகமே வேண்டாம் அவை காமிக்ஸ் புத்தகங்கள். இந்த இடுகை என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்காகவே.

புத்தக உலகின் ராஜ இந்த காமிக்ஸ் எனப்படும் படக்கதை புத்தகங்கள். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவை என்ன ஆனது என தெரியவில்லை. இப்போது இவற்றை தொகுத்து வழங்கும் பிரத்தியோக வலைப்பூக்கள் காணப்படுகின்றன.

வலைப்பூக்கள் என்றில்லை தின பத்திரிக்கைகளிலிலும் கார்டூன் படங்கள் வருகின்றன. நான்கே படங்களைப் போட்டு தினத்தந்தியை இன்று கின்னஸ்க்கு கூட்டிப்போகும் அளவிற்கு மாற்றியது கன்னித்தீவு படக்கதைதான். சிந்துபாத் கதையை பழைய தூர்தசனில் விடமல் பார்ப்பேன். ஆனால் கன்னி்த்தீவு முடியுமா என தலைமுறை. முடியவேண்டாம் என்றே மனம் விரும்புகிறது.

தலைமுறைகளை தாண்டி நிற்கும் ஹாலிவுட் படங்களான எஸ்.மேன், ஸ்பைடர் மேன், அயன் மேன், பேட் மேன் போன்றவை காமிக்ஸிலிருந்து திரைப்படமானவை. மார்வெல் நிறுவனமும் டிஸ்னி வேல்டும் உலக கதையில் முதலிடம் பிடித்து வெகு நாட்கள் ஆகின்றன. உயர்தரமான நாவல்களை கதையாக கொண்ட படங்களுக்கு மத்தியில் எந்த விதத்திலும் குறையாமல் பல மில்லியன் கணக்கில் பணத்தினை குவித்ததவை இந்த படங்கள்.

இங்கு மோகன்லால், மமுட்டி போன்ற கதாநாயகர்கள் நடிக்கும் படத்தை விட சேச்சி படம் வசூல் சாதனை செய்கின்றது.குழந்தைகளுகான படம் என்ற பெயரில் பெரியவர்களுக்கான படங்களை தான் எடுக்கின்றார்கள்.இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும்.குழந்தைகளுக்கென பிரத்யோக தொலைக்காட்சிகள் வந்துவிட்டன என்றாலும், சில கதைகள் காதலை மையம் கொண்டு குழந்தைகளை கெடுக்கின்றன.ஆனாலும் டோராவும், புஜ்ஜியும் அதையெல்லாம் தாண்டி வெற்றிபெற்றிருக்கின்றன.

ரோடு சைடு ரோமியோ என்ற புதிய படத்தின் புத்தகமும், வேதாளரின் திறமையை சொல்லும் புத்தகமும், 007 ஜேம்ஸ்பாண்டு துப்பரியும் இரண்டு புத்தகங்களும் கணினி மென்நூல்வடிவில் கிடைத்தன. ஏகப்பட்ட காமிஸ் புத்தகங்கள் இணையத்தில் இருந்தாலும் இந்த நான்கும் தமிழ் புத்தகம்.

பல வலைதளங்கள் காமிக்ஸ் கதைகளை படங்களாக தருகின்றன. யாரெனும் புத்தகங்களாக மாற்றி இதுபோல் இட்டால் நன்றாக இருக்கும்.வருமானம் வரும் போது என்னால் முடிந்ததை உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு செய்வேன்.இப்போது பொறுப்பை வேறு யாராவது ஏற்றுக் கொள்ள வேண்டும். இருப்பினும் மென்நூல் புதையல்களை நானும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.தேடுதல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.நான் படித்து ரசித்த அந்த புத்தகங்களின் முகவரிகள் உங்களுக்கு.பதிவிரக்கம் செய்து படியுங்கள்.
ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் கடல்கன்னி தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ரத்த காட்டேறி தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

வேதாளர் புகழ்சொல்லும் மந்திரக்கள்ளி மாயம் தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

குட்டிநாயின் சாகசங்கள் நாய் ரோட் சைட் ரோமியோ தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Greatest Ever Comics, comics book in pdf, Roadside Romeo Tamil Comics, Veethaalam-Mandhirak Kalli Maayam, Kadalkanni, and James Bond Raththak Kaatteri , famous tamil comics, picture story, free eBooks comics in Pdf format

இந்து மதத்தினை வளர்கக மதமாற்றம் அவசியமா

வாருங்கள் அன்பு தோழர்களே,

உலகமுழுவதும் இரண்டு பெரு மதங்கள் யானைகளைப் போல மோதிக் கொண்டிருக்கின்றன.ஒன்று மக்களுக்காக செத்துப்போன புண்ணிய ஏசுவின் கிறிஸ்துவ மதம், மற்றொன்று நபிகள் மூலம் வளர்ந்து இருக்கும் இஸ்லாம். ஒன்றையொன்று அழிக்கும் முயற்சியில் பல தீவிரவாத இயக்கங்களாக மாறி நாளைய உலகையே கேள்விக் குறியாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.எல்லா மதத்திற்கும் அடிப்படை அன்புதானே என்று யாராவது குறுக்கே சென்றால் அவர்கள் இரண்டுபுறமும் அடிவாங்கி சாக வேண்டியதான்.

மனிதனுடைய வளர்ச்சியினால் எப்படி மற்ற உயிரினங்கள் மெதுவாக அழிந்து கொண்டிருக்கின்றனவோ அது போல இந்த இரண்டு மதங்களின் வளர்ச்சியினால் சிறிய மதங்கள் பல அழிந்து கொண்டுதான் இருக்கின்றன. நாளுக்கு நாள் இந்தியாவில் இருக்கும் இந்துகள்,சீக்கியர்கள்,ஜைனர்கள் குறைந்து கொண்டே போகின்றார்கள்.மதமாற்றத்திற்கு இந்த இரண்டு மதமும் கையாளுவது இரண்டு பெரிய உத்திகள்.

1. பணம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் தங்கள் மதத்திற்கு ஏழை மக்களையும், பேராசை பிடித்தவர்களையும் மாற்றம் செய்வது.

2. பணத்தினால் முடியாததை பயம் காட்டி சாதிப்பது.

இந்த இரண்டும் செய்ய முடியாததை கொலை செய்து சாதித்துக் கொண்டிருக்கின்றன அல்கொய்தா,ஹிஸ்புல்லா என்று மக்களுக்கு தெரிந்த மிக பிரபலமான தீவிரவாத இயக்கங்கள். இவர்கள் கடவுளுக்கு செய்கின்ற பணியாக இதனை கருதி கொண்டிருக்கின்றனர் என்பது வேறு விசயம்.

மதமாற்றத்தின் விளைவாக இவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா.வெரும் மக்களுடைய எண்ணிக்கை. ஏசுவிற்கு காமாட்சி விளக்கு வைக்கும் கிறிஸ்துவர்கள்,கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொன்னாலும் மெக்கா போன்ற படங்களை மாட்டி பூ வைக்கும் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்து மதத்தின் தாக்கத்தினாலோ, இல்லை அவர்கள் உடலில் ஓடும் இந்து ரத்தத்தினாலோ இப்படி செய்கின்றாகள்.முழுமையான இந்துக்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ வாழாமல் பெயருக்காக வாழும் இவர்கள் அந்தந்த மதங்களின் கொள்ளிக் கட்டைகள் என்பதை மறக்க வேண்டாம். இந்துக்களின் பல கடவுள்களோடு ஏசுவும் சேர்ந்து கொண்டார் என்பதை கிறிஸ்துவர்கள் ஏற்றுக்கொண்டு சிரிப்பார்களா அல்லது அழுவார்களா என தெரியவில்லை.(ஏனென்றால் இந்து மதம் ஏசுவை சேர்த்துக் கொள்ள கூடாது என்று சொல்லாது.ஏசுவின் பெருமைகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தாய் மதம் அது).நாளையே அந்த லிஸ்டில் அல்லாவும் சேரலாம்.

மதமாற்றத்தின் மூலமாக அவர்கள் செய்வது மதத்தின் மீது நம்பிக்கையில்லாத ஒரு கூட்டத்தையும், மதநெறிகளை கடைபிடிக்க தெரியாத முட்டாள்களையும் தங்கள் மத அழிவிற்காக அழைத்து செல்வது மட்டுமே. பல இஸ்லாமிய பெரியோர்களின் கல்லறை இந்து மத பெரியோர்களின் மடத்திற்கு ஈடாக புகழ்பெற்று நிற்கின்றன. கடவுளோடு கலந்துவிட்ட மனிதர்களை இந்துக்கள் போல மதிக்க கற்றுக் கொண்டனர். மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒரு இஸ்லாமிய ஆலையத்தின் முன்பு தினமும் பூ விற்பனை ஜரூராக நடக்கின்றது.

கணபதி துணை, மாரியம்மன் துணை என காணப்படும் வாகணங்களில் ஏசுவே துணை வசனங்களும் அடிக்கடி தென்படுகின்றன. என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற தமிழை கொலை செய்கின்ற வசனம் வேறு. கடவுளை உருவத்தினாலேயே அடக்கி கொள்ள இயலாது என்று சொல்லும் இஸ்லாமியர்களும் ஒரு எண்ணை வாகணங்களில் பொறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்ததே.

இப்படி புரியாத மனிதர்களை மதமாற்றம் செய்வதை விட நம்முடைய மதத்தில் இருக்கும் மதநெறிகள் புரியாதவர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பதே சிறந்தது.வெறும் பணத்திற்காகவும் சலுகைக்காகவும் மதம் மாறி போகின்ற மானம் கெட்டவர்கள், நாளை அந்த மதத்தினை அழிக்கும் கையாட்களாக மாறக் கூடும். இந்து மதம் வலுவடைய எண்ணிக்கை வேண்டாம். உண்மையான மதநெறி தெரிந்த மனிதர்களே போதும். இல்லையென்றால் இஸ்லாமியர்களும்,கிறிஸ்துவர்களும் செய்து கொண்டிருக்கும் பெருந் தவறை நாமும் செய்வது போல ஆகிவிடும்.

மதமாற்றம் மூலமாக இந்து மதத்தினை வளக்க வழியுண்டா.இருக்கலாம் என்றால் கருத்துகளை சொல்லுங்கள்.என்னுடைய தனிப்பட்ட கருத்து இது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.இருப்பினும் உயரிய காரணங்கள் ஏதேனும் இருந்தால் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

இந்துக்களுக்கு எதிரான மறைமுகப் போரில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எதிரிகள் என்பதை மறவாதீர்கள்.இது விஷ விதையல்ல விழிப்புணர்வு.

பி.கு:-
என்னைப்போலவே மதமாற்றத்தினை வெறுக்கும் மக்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். இந்த கட்டூரையை படிக்கும் வேற்று மதத்தின நண்பர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Hindu, Muslim, christen, religion transaction, bad hobbit, how to serve Hindu, Hindu service, rss

சனி, 14 நவம்பர், 2009

வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்

வரலாற்றில் மன்னர்களைப் பற்றி வீரம் மிகுந்தவர்கள், ராஜதந்திர்கள், வள்ளல்கள் என ஓவராக மக்களுக்கு பொய் சொல்லிவிட்டு சில நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் கிறுக்குதனங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து விட்டனர். இதையெல்லாம் சேர்த்திருந்தால் வரலாறே பிடிக்கதே மக்கள் அதன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்திருப்பார்கள்.எப்போதுமே வெறும் ஆண்டுகளையும் அரசன் ஆண்ட பகுதிகளையும் மட்டுமே சொல்லி கொடுத்து நம்மை அலறவைக்கும் ஆசிரியர்கள் இதைப் படித்தாலாவது திருந்தட்டும்.

நாம் மன்னன் ஆண்ட ஆண்டு, அவருடைய சாதனை என்பதையெல்லாம் மறந்து ஜாலியாக ஒரு டூர் போவோம். மன்னரெல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல நம்மைப் போன்ற சாதாண மனிதர்கள் என்று நீங்கள் உணர்ந்து சமூக அறிவியல் புத்தகத்தினை தேடிப் போனால் அதுவே வெற்றி. வாருங்கள் பயணத்தினை ஆரமிப்போம்.


தைமூர் –:

தைமூர் இந்தப் பெயர் வரலாற்று ஆசிரியர்களிடையே மிகவும் பிரபலம். இந்தியாவிற்கு வந்து பலவித சேதங்களை ஏற்படுத்திய கொடூரன்.என்னத்தான் பெரிய ஆள் பயங்கர கொலைகாரன் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும்.அவன் செய்த ஒரு காரியம் நம்மை 23ம் புலிகேசிசியே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.அப்படி அவன் என்னதான் செய்தான்

டெல்லியை கைப்பற்ற வந்து அதையும் செய்தவனுக்கு ஒரு இந்திய விசயம் பிடித்துப் போனது.அது தான் யானை.பல இந்து அரசர்களிடம் யானைப் படை இருந்தது குறிப்பிடதக்கது.அதைப் பார்த்த அவன் சுமார் நூற்றி இருபது யானைகளை படைக்காக வரவழைத்தான்.டெல்லியையே கைப்பற்றியிருந்தாலும் அவன் தங்கியது அரண்மனைக்கு முன் டென்ட் அடித்து.(துரைக்கு அரண்மனையில தங்கனுமுன்னு கூட அறிவில்லை. அதுக்கு பின்னாடி பண்ணினார் பாரு ஒன்னு.)வந்திருந்த யானைகளை குளிப்பாட்டி மஞ்சள்,பச்சை,நீளம்,சிகப்பு என உடல் முழுக்க வண்ணம் பூசி கூடாரத்தை சுற்றி நிற்க வைத்தான்.(நினைச்சு பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது).


மாலிக் கபூர் –:

மன்னன் அலாவுதின் கில்ஜியை கொண்றுவிட்ட தளபதி மாலிக் கபூர். அலாவுதினின் மகனை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.அரண்மனை சிறையிலிருக்கும் இளவரசர் முபாரக் தான் அணிந்திருந்த ஆபரத்திலிருந்த வைரம் போன்ற விலையுயர்ந்த கற்களை அவர்களை நோக்கி வீச வந்தவர்கள் அதையெல்லாம் பொறுக்கிக் கொண்டு மாலிக் கபூரை கொன்றுவிட்டனர்.பல காலம் தளபதியாக இருந்து எல்லா காய்களையும் சரியாக நகர்த்தி ஆட்சிக்கு வந்த 36ம் நாளே மாண்டு போனான் மாலிக்.(ஒரே பீலிங்கா இருக்குதப்பா)

மாலிக் கபூர் ஒரு அலி (திருநங்கை) என்றாலும் அரசன் அலாவுதினின் மூன்றாவது மனைவியை அதற்குள் திருமணமும் செய்திருந்தான்.(என்ன கொடுமை சார் இது.ஆமா பஸ்ட் நைட்டுல என்ன பண்ணிருப்பாரு.)


முபாரக் –:

அவமானச்சின்னம் என்று முஸ்லீம்கள் கூறுவது இவனைதான்.அப்படி என்ன செய்தான் முபாரக்...

பெண்களெல்லாம் சலித்துப் போக இருதியில் குஸ்ரூகான் என்ற என்ற இளைஞனுடன் அந்தப்புறத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான். (ஓ இப்ப இதுக்கு அனுமதி கொடுத்துட்டாங்க) இவன் தான் முதல் ஓரினச் சேர்க்கை சுல்தான்.அந்தப்புறத்தில் இருந்த அழகிகலெல்லாம் சும்மா இவர்களின் கூத்தை பார்த்தபடி என்கிறது வரலாறு.(வெறென்ன செய்ய முடியும்).


துக்ளக் –:

ஜோக், நகைச்சுவை என்பது மட்டும் பிடிக்காது துக்ளக்கிற்கு. ஆனால் கோமாலித்தனம் என்றதுமே நினைவுக்கு வருகின்ற முதல் சுல்தான் இவர்தான். (துக்ளக் லக் இல்லாத மனுசன் போல) வரலாறு முழுக்க தேடிப்பார்த்தாலும் இவர் நடத்திய காமெடிகள் போல யாரும் செய்யவில்லை.( ஐயோ பாவம்)

சீன நாட்டினைப் பார்த்து பணத்தினை அச்சடித்தார். அவரை விட அறிவாளியான நம் மக்கள் கள்ள பணத்தினை அச்சடித்தார்கள்.(அப்பவேவா).அதன் பின்பு பணம் அச்சடிப்பதை சுல்தான் நிறுத்திவிட்டார்.டெல்லியிலிருந்து தேவகிரி என்ற ஊருக்கு தலை நகரை மாற்றினார்.பின்பு மீண்டும் டெல்லிக்கே போனார்.(அட போங்கப்பா)இப்படி ஒன்று செய்வதும் பின்பு அதையையே மாற்றி பழைய நிலைக்கே வருவதும் என காமெடி செய்து கொண்டிருந்தவர் செத்தும் ஒரு காமெடியே.... எப்படி தெரியுமா

மசாலா மீனை தின்றவர் அது ஒத்துக் கொள்ளாமல் போக நோயால் அவதிப்பட்டு இறந்துபோனார்.வீரமரணம், இயற்கை மரணம் என்ற இரண்டுக்கும் இடம் கொடுக்காமல் இவர் இறந்த்து வியப்பு என்றாலும் இவரை மிஞ்சும் வகையில் இறந்த சுல்தான்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்(இதுக்கும் மேலையா).


குத்புதின் –:

நான்கு ஆண்டுகள் டெல்லியை ஆண்டவர் குத்புதின்.குதுப்மினாரை கட்டிய புண்ணியவான் என்றால் எல்லோருக்கும் தெரியலாம்.இதிலென்ன காமெடி இருக்கிறதென்றால் ஒருமுறை போலோ என்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்த சுல்தான் குதிரையிலிருந்து இடறி விழுந்து செத்து போனார். எதிரிகளால் பழி தீர்க்கப்பட்டு மரணமடைந்தவர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், நோயின் மூலம் இறந்தவர்கள் என பல மன்னர்களைப் பற்றி படித்திருந்தாலும் இப்படி கீழே விழுந்து செத்துப் போன மன்ன்ன் வரலாறும் இருக்கத்தான் செய்கின்றது.(இதுக்கு துக்ளக்கே தேவலாம்)


பாபர் –:

பாபர் என்ன தான் பெரிய முகலாய அரசனாக இருந்தாலும் இரவுகளில் திருப்தி அடையாத அவர் முதல் மனைவி அவரை விட்டு ஓடிவிட்டார்.ஆனால் அதனை பாபரை விட்டு விலகிவிட்டார் என்று மென்மையாக சொல்கின்றன வரலாற்று நூல்கள்.(அதான்னே பார்த்தேன், அரசர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை மறைப்பதே வேளையாகப் போய்விட்டது).


ஹூமாயூன் –:

மூட நம்பிகையின் மொத்த உருவம் இந்த மன்னர்.பாபரின் வாரிசு என்றாலும் எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்ப்பவர்.அதை கணிக்கும் திறமையும் இருந்த்தாக சொல்கின்றனர். எங்கு கிளம்பினாலும் வலது காலை முன் வைத்தே நடக்க கூடியவராக இருந்தார்.ஒரு அமைச்சா இடதுகாலை எடுத்து வைத்து உள்ளே வர, அவரை வெளியே அனுப்பி மீண்டும் வலது காலை முன்வைத்து வரச்சொல்லிய மகா அறிவாளி.

அவருடைய மரணம் கூட சற்று சோகமான காமெடி தான்.மந்திரியுடன் பேசிக் கொண்டு படிகளில் கீழிரங்கியவரின் காதுகளில் தொழுகைக்கான அழைப்புவிழ, உடனே திரும்ப முயன்று கால் இடறி மாடிப்படிகளில் உருண்டு கோமா நிலைக்கு போய் இறந்தார்.( ஐயோ பாவம்)


அக்பர் –:

முகலாய பெரும் சக்கிரவர்த்தி என்றே எல்லோறும் கூறினாலும் என் முகமதிய நண்பன் ஒருவன் அக்பர் முஸ்லிமே இல்லை என கூறுகிறான்.அந்த அளவிற்கு மற்ற மதங்களின் மீதும் மதிப்பு கொண்டிருந்தார் அக்பர்.

பீர்பாலைப் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை.அவருடைய கதைகளை நாடே அறியும்.ஆனால் பீர்பால் இல்லாமலே அக்பர் தனியாக ஒரு காமெடி செய்தார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா.

அக்பருக்கு 54 வயதாகிவிட்டதே நினைவில் இல்லை.ஏதோ தன்னை இளைஞனாக நினைத்துக் கொண்டு ஒரு பௌணர்னமி இரவில் மானைப் பிடிக்க சென்றிருக்கிறார்.மான் கையில் மாட்டிக் கொண்டதும் அக்பருக்கு சந்தோசம்.மான் என்ன நினைத்த்தோ அவர் கைகளிலிருந்து திமிர அந்த மானின் கொம்பு பதம் பார்த்த்தோ அக்பரின் மர்ம உறுப்பில் இருக்கும் கொட்டைகளை.அந்த விபத்திருந்து மீண்டுவர அக்பருக்கு இரண்டு மாதம் ஆனதாம்.

சக்ரவர்த்தியின் பிரத்யோகமான அந்த காயத்திற்கு மருந்து போடும் பாக்கியம் எனக்கு கிடைத்து என்று உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார் அப்துல் ஃபஸல்.(ஐயோ கருமம், கருமம்)

காமடிகள் மட்டுமல்ல “இந்துக்களிடையே இறந்தவருக்கு கூட குடி தண்ணீர் தருகின்ற பழக்கமிருக்கு, நீ ஒரு சிறந்த முஸ்லிம். உயிரோடு இருக்கும் தந்தைக்கு குடி தண்ணீர் தர மறுக்கலாமா” – ஷாஜகானான் ஔரங்கசிப்பிடம் அனுப்பிய கடிதம், முகமதியர்கள் அரண்மனையை கைப்பற்றியதும் தீக்குளித்து மாண்டு போன ராஜபுத்திர பெண்கள், கோயிலை காப்பாற்றுவதற்காக போராடி மாண்டு போன சாதாரண இந்து குடி மக்கள் போன்ற நெஞ்சத்தினை உருக்கும் கனமான சம்பவங்களும் உண்டு.

யாருக்காவது ஆங்கிலேயர்கள் செய்த காமெடிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள்.


நன்றி – :

வந்தார்கள் வென்றார்கள் விகடன் புத்தகம் – மதன் என்கின்ற மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார்.ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக -:

King Muslim jokes, Jokes of kings, Akbar joke, death of Indian Famous kings, Real incidents of kings life, Baber joke, human jokes, Adult jokes, Child Joke, Old king joke, Sultan jokes

சிறுவர் கதைகள்

என்னத்தான் வயதானாலும் கதைகள் படிப்பதில் ஆர்வம் குறைவதே இல்லை. சிறுவர் மலர் படிக்கும் எத்தனையோ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.சிறுவயதில் வெள்ளியன்று வரும் புத்தகத்தினை அடுத்த வெள்ளி வரை படித்த அனுபவம் கூட எனக்கிருக்கிறது.

கதை தாகம் அடங்காமல் இன்று ஜெயகாந்தன் முதல் ராமகிருஷ்ணன் வரை படித்தாயிற்று. சில சிறுகதைகளையும் படைத்தாயிற்று. தொடருகின்ற பயணத்தில் ஒரு சின்ன திருப்பம் இது.

6ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

7ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய. இங்கு சொடுக்குங்கள்.

8ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

9ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

10ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் பகுதி -1 தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் பகுதி – 2 தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

12ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Tamil short Story, Story books downloading, free e books, free tamil story e books, school books in tamil, Tirumurai 1, Tirumurai 2, Kathai Kovai, Araneri Kathaikal, Siruvar Kathaikal

வலைப்பூக்களின் முகவரிகள்

பலவகையான தமிழ் வலைப்பூக்களின் முகவரியோடு சிறு அறிமுகம்.அதென்ன பதினெட்டு என்பவர்களுக்கு மகாபாரதம் நடந்தது 18 நாட்கள் என நினைவுகூறுகறேன்.அவ்வளவுதான்.

1. இந்துக்களின் முதன்மையான வலைப்பூவாக தன்னை நிறுத்திக் கொள்ளும் வலைப்பூ தமிழ்இந்து www.tamilhindu.com/

2. கடவுள் முதல் கவிதை வரை ஒரு வலைப்பூ எல்லாம் இருக்கும் வரை ellaam-irukkum-varai.blogspot.com/

3. திரைப்படங்கள் பற்றிய விளக்கமான பார்வையுள்ள வலைப்பூ கேபில் சங்கர் cablesankar.blogspot.com/

4. வா வாத்தியாரே ஊட்டாண்ட என அன்போடு அழைக்கும் நகைச்சுவை வலைப்பூ ஜாம் பஜார் ஜக்கு jambazarjaggu.blogspot.com/

5. சினிமா முதல் செய்தி வரை விமர்சனம் செய்யும் வலைப்பூ பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் jackiesekar.blogspot.com/

6. நீங்கள் புகைப்படங்களின் காதலன் என்றால் இது உங்களுக்கான வலைப்பூ pukaippadangal.blogspot.com/

7. 50% ஜாலி 50% லொள்ளு என நகைச்சுவையில் கலக்கும் வலைப்பூ இட்லிவடை idlyvadai.blogspot.com/

8. எனக்கு வள்ளலாரும் பெரியாரும் ஒன்றுதான் என நம்முடைய கருத்தை ஒத்துப்போகும் கோவி.கண்ணனின் வலைப்பூ காலம் govikannan.blogspot.com/

9. ஜென் கதைகள், இன்று ஒரு தகவல்,தெரியுமா உங்களுக்கு என பலவற்றின் கலவை வலைப்பூ மேலிருப்பான் padmahari.wordpress.com/

10. நகைச்சுவை மட்டுமல்ல சிறந்த இடுகளைகளையும் கையில் வைத்திருக்கும் வலைப்பூ லொடு்க்குபாண்டி lodukkupandi.blogspot.com

11. ஜோதிடத்தினைப் பற்றி அதை அறிந்தவர் கற்றுதரும் வலைப்பூ வகுப்பு அறை classroom2007.blogspot.com/

12. கண்ணதாசன் கவிதையால் கவலைகள் இல்லாமல் போனேன் என்று தன்னை அறிமுகம் செய்யும் மனிதரின் பல்சுவை வலைப்பூ devakottai.blogspot.com/

இவருடைய புகைப்படங்களுக்கு நான் பெரும் ரசிகன்.

13. நகைச்சுவைக்கான ஒரு தனி வலைப்பூ சிரிப்பு வருது orecomedythaan.blogspot.com/

14. உங்களில் யாருக்காவது முஸ்லிம் மதம் பற்றியோ அல்லது அவர்களின் நடவெடிக்கைகள் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதற்கு சரியான விளக்கம் அளிக்கும் வலைப்பூ தமிழ் முஸ்லிம் tamilmuslim.wordpress.com/


15. பலவிதமான கணினி உபயோக குறிப்புகள் மற்றும் இணையதள முகவரிக்கான வலைதளம் இராஜகை ராபர்ட் denaldrobert.blogspot.com/

16. தமிழ் வலைப்பூக்களை வகை படுத்தி வைத்திருக்கும் வலைப்பூ தொகுப்பான் தமிழிஸ் www.tamilish.com

17. நாத்திகத்தின் தலைவன் பெரியாரின் கருத்துகளை தொகுத்து தரும் வலைப்பூ தமிழ்ஓவியா thamizhoviya.blogspot.com/

18. காமிக்ஸ்,வெளிநாட்டு கார்டூன்,சிறந்த படங்கள் கொண்ட வலைப்பூ அழகிய படங்களுடன் கூடியது www.neerottam.com/artpost


தமிழ் இந்து, தமிழ் முஸ்லிம் என நம் மொழியை மதத்துடன் இணைத்து வன்மம் இல்லாமல் தங்கள் தரப்பு ஞாயங்களையும், சாதனைகளையும் பட்டியல் போடும் தளங்களைப் போல மற்ற தளங்களும் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Tamil website links, use full websites, tamil Hindu website, tamil Muslim website, Comics website, religion websites, joke website, Computer link websites, Short Story website, Jen Story website, Jagadeeswaran’s website list, best list of different sites

அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியரே இல்லை

என்ன அதிர்ச்சியாய் இருக்கின்றதா.உண்மையில் பல தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியாகதான் இருக்கும்.இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த ஒரு தலைசிறந்த விஞ்ஞானியை மதம் என்ற ஒற்றை சொல்கொண்டு சிலர் தவறாகவே சொல்கின்றார்கள். காரணம் கலாம் இந்து மதங்களிலிருந்தும் நல்லதை எடுத்து சொல்கின்றார்.

வரலாறுகளில் அக்பர் என்ற அரசர் இந்துகளையும், கிறிஸ்துவர்களையும் ஆதரத்ததால் அவரை பல முகமதியர்கள் முஸ்லிமே இல்லை என கூறுவது பலருக்கு தெரிந்திருக்கலாம்.(வரலாறு தெரியாவிட்டாலும், ஜோத அக்பர் படம் பார்த்தவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.)ஆனால் 21ம் நூற்றாண்டிலும் அப்படிபட்ட ஆட்கள் இருக்கதான் செய்கின்றார்கள். நாம் ஔரங்கசிபை எடுத்துக் கொண்டால் அவர் முழு முகமதியன் கிடையாது.ஏனென்றால் அவருடைய தாய் ஒரு இந்து.அவருடைய மனைவியிலும் ஒரு இந்துப்பெண் இருந்ததாக குறிப்பிடுகின்றார்கள்.ஆனால் அவர் தன்னை முகமதியனாக கருதி புனித நூலான குரானை படித்ததன் மூலமே கொடூர எண்ணங்களை விட்டொழித்தார்,என்கின்றது வரலாறு.(இந்துக் கோயில்களை அழித்தும்,இந்துக்ள் மீது அதிக வரி செலுத்தியும்,சொந்த சகோதரர்களை கொண்றும் கொடுமை புரிந்தது உங்களுக்கு நிச்சியம் தெரிந்திருக்கும்).

தீர்க்கமாக பார்க்கப் போனால் இந்தியாவிலிருக்கும் யாரையுமே முஸ்லிம் என சில இயக்கங்கள் சொல்வதேயில்லை.(பாக்கிஸ்தானில் இருப்பவர்களை கொன்று குவிக்கும் தீவிரவாத இயக்கங்கள் அவர்களையும் இஸ்லாமியர்கள் இல்லை என்பது வேறு விசயம்.)காஷ்மிரில் நடக்கும் பல கொலைகளில் முஸ்லிம் மக்களும் செத்துதான் போகின்றார்கள்.(இவர்களை இந்தியர்கள் என்றே தீவிரவாத இயக்கங்கள் சொல்லுகின்றன).இவர்கள் இந்துக்களிலிருந்து(அல்லது வேறு மதங்களிலிருந்து) மதம் மாறியவர்கள், அல்லது மதம் மாறிய பெண்ணிலிருந்து (அல்லது ஆணின் மூலம்) பிறந்தவர்கள் என்றெல்லாம் கூறுகின்றனர் சிலர். ஒரு மதம் தோன்றிய இடங்களில் வேண்டுமானால் பரம்பரை மதவாதிகள் இருக்கலாம்.மற்ற இடங்களில் இருப்பவர்கள் வழி தோன்றல்களாக இருக்க வாய்ப்பே இல்லை.தூய்மையான முகமதியர்களின் ரத்தம் எனக்குள் ஓடுகின்றது என்று இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீமும் சொல்வது கேள்விக்குறியதே என்ற விவாதமும் இருக்கிறது.

சரி கலாமை முஸ்லிமல்ல என சில முஸ்லிம்கள் சொல்வதைப் போலவே வேற்றுமதத்தினர், பத்திரிக்கையாளர்கள் கூறுவதையும், எழுதுவதையும் கண்டிருக்கிறேன். ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஞாநி ஒரு உதாரணம். கலாமை அய்யராகவே ஆக்கிவிட்டார் அவர்.(கலாம் அய்யர் என்று தான் குறிப்பிடுவார்.04.11.2009 குமுதம் வாரஇதழிலின் 77ம் பக்கம் பார்க்க).உண்மையில் கலாம் இந்துக்களை மட்டும் ஆதரிக்கவில்லை.எல்லா மதங்களிலும் உள்ள தலைசிறந்தவர்களையும் ஆதரிக்கிறார். இந்த வார புதிய தமிழகம் இதழில் இளைய இந்தியா 2020 என்ற கட்டூரையில் அவர் குறிப்பிட்டு பேசியது சகோதரி அன்டோனியா என்கிற கிறிஸ்துவ பெண்மணியை.இஸ்லாமிய நண்பன் ஒருவன் கலாமை ஏற்றுக் கொள்ளாததற்கு சொன்ன காரணம் அவர் திருமணம் செய்து கொள்ளாததுதான்.உண்டு,உறங்கி தன்னுடைய சந்ததியை பெருக்குவது என்பது எல்லா உயிர்களும் செய்யும் வேலை.அந்த கடமையை செய்யாமல் இந்த மனிதர் இருக்கின்றார் என்பது அவனுடைய விவாதம். (இந்து மதத்தில் இல்லறவாழ்க்கையை துறந்து மக்களுக்காக சேவை செய்த விவேகநந்தர்,வாஜ்பாயி போன்றோரை கடவுளாகவே போற்றுவது உண்டு.)

உண்மையில் இஸ்லாம் என்னதான் சொல்கிறது.தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் மக்களை கொன்று குவிக்கின்ற மிருகங்கள் தான் உண்மையான இஸ்லாமியர்களா.கண்டிப்பாக இல்லை எனவும் அப்படி மற்றவர்களை அழிக்கக் கூடிய பணியை செய்யும் நபர்கள் அல்லாவின் விரோதிகள் என்று இங்குள்ள இஸ்லாமிய தலைவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு இஸ்லாமின் நெரிகளையும்,புனித குரானில் தீவிரவாத்திற்கு இடமே இல்லை என்பதனையும் தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனால் ஊடகங்கள் மக்களை ஆட்கொள்ள ஆரமித்து பல வருடங்கள் ஆகிறது.ஒரு நல்ல தொலைக்காட்சி ஒன்றை அமைத்து தங்களுடைய நியாயமான அனுகுமுறைகளை இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும்.(இந்துக்களுக்கென ஒரு தனி தொலைக்காட்சியும், பத்திரிக்கையும் வேண்டும்.) எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என நான் சொன்னால் எனக்கெதிராய் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே என்று குரல் வருகிறது.இதை மறுக்கும் சிலர், ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, ராம்சேனா போன்ற இந்து இயக்கங்களையும் அவர்களில் சிலர் தீவிரவாத இயக்கங்கள் என்கின்றனர்.இந்த இயக்கங்கள் எங்கெல்லாம் பாசரை வைத்து எத்தனை இரட்டை கோபுரங்களை தகர்த்தது என கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை.சேவா சங்கங்களையும் இதி்ல் இணைத்தது இன்னும் பெரிய கொடுமை.

எது எப்படியோ ஒரு நல்ல மனிதன் அவனுடைய உண்மையான செயல்களுக்காக ஒரு சாராரின் எதிர்ப்புக்கு ஆளாவது வேதனைக்குறியதே. கவிஞர் அப்துல் ரகுமான் இது சிறகுகளின் நேரம் புத்தகம் முழுவதும் மத நல்லினக்கத்தினை சொல்லியிருப்பார்.அதையும் மற்றவர்களும் படித்தால் நன்றாக இருக்கும் நாடு.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
A.P.J Abdul Kalam, Kalam, India president Kalam, Kalam is not a Muslim, puthiyathalaimurai

கணினி மென்நூல் தமிழில்

எல்லா வீடுகளிலும் கணினி வந்தாச்சு.அடுத்த தேர்தலில் கலர் டிவி எங்களுக்கு வேண்டாம் கணினி கொடுங்கன்னு மக்கள் கேட்டாலும் ஆச்சிரியமில்லை.

எனக்கு கணினி தெரியுன்னு கம்பியூட்டர் இஞ்சினியர் சொன்னா, எனக்கும் அது தெரியுன்னு ஒரு வாண்டு சொல்லுது.அதள பாதாளத்துக்கு போயிட்ட கணினி மென்பொருள் துறை மேலே வருமுன்னு நம்பி படிச்சதையே படிச்சிக்கிட்டு கிடக்கிறோம் நாங்க.

இந்த புத்தகம் ஏதாச்சும் உங்களுக்கு உதவுச்சுன்னா, உங்க குலதெய்வத்துக்கிட்ட எனக்காக கொஞ்சம் வேண்டிக்கோங்களேன்.பிளீஸ்.

சி கணினி மொழி மென்நூல் (Introduction to C in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

சி++ கணினி மொழி மென்நூல் (C++ in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

பாக்கியநாதனின் எளிய தமிழில் ஜாவா கணினி மொழி மென்நூல் (Bakiyanathan-Eliya Tamilil Java.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

கணினி மென்நூல் (Introduction to Computer in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

விண்டோஸ் எஸ்.பி மற்றும் விண்டோஸ் எஸ்புரோலர் மென்நூல் (Introduction to Windows XP and Windows Explorer in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

பரிமலாவின் விண்டோஸ் எஸ்.பி மென்நூல் (J.Perumal Windows XP Guide in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.


அடோப் போட்டோ சாப் மென்நூல் (Adobe Photo Shop in Tamil.pdf ) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

இணையதள உருவாக்கம் எனப்படும் வெப் டிசைன் மென்நூல் (Introduction to Web Design in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

லினிக்ஸ் (Introduction to Linux in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
C in tamil book, C++ in tamil book, Java in tamil e book, tamil e books , downloading links for tamil software books, tamil Pdf books, free Pdf books in tamil, web design eBook in tamil, Linux eBook, windows xp eBooks, java guide, computer guide, free guides,

புதன், 11 நவம்பர், 2009

வேட்டைக்காரன் திரை விமர்சனம்

நவம்பர் 12:

மச்சி டிசம்பர் 18 வேட்டைக்காரன் ரிலிசுன்னு சொன்னது தான். துள்ளிக் குதித்தான் என் நண்பன். நீ எப்பருந்துடா விஜய்க்கு ரசிகனானேன்னு நான் விசாரிச்சா.ரொம்ப எதிர் பார்த்த ஆதாவன் ஊத்திக்கிச்சு.இதையெல்லாம் பார்க்கிறத்துக்கு வடிவேலு படம், விவேக் படம் ஏதாவது வந்தா தேவலான்னு இருந்தேன்.விஜய் படமே வருதா எனக்கு சந்தோசம் தாங்கல.... அவன் பேசிக்கொண்டே போக நான் வியந்து போனேன்.

டிசம்பர் 18:

ஏதோ ஆளும்கட்சி பந்த் போல சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது. பாதி மக்கள் தியேட்டரில் கியூவில் நிற்க. மீதி பேர் வேட்டைக்காரன் படம் ஒரு அதிரடி ஆக்ஸன் படம் என பயந்து வீட்டில் பகுங்கியிருக்கிறார்கள்.( திரைக்கு வந்து சில நாட்களே ஆன சூப்பர் ஷிட் திரைப்படம் வேட்டைக்கான் இந்த ஞாயிற்றுக்கு கிழமை உங்கள் சன் டிவியில் என விளம்பரம் ஓடுகிறது கேட்கின்றதா?)

அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் உட்காருகிறோம். இளைய தளபதி வருங்கால முதல்வர் டாக்டர் விஜய் என பெயர் வந்ததும் எங்கும் சிரிப்பலை.ஒரு ரசிகன் வருங்கால அமெர்க்க ஜனாதிபதி விஜய் வாழ்கன்னு கோசம் போட அவனை எல்லோரும் கொலை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கிடையே அனுஸ்கா என்ற பெயரை பார்த்த்தும் விசில் தெறிக்கிறது.விஜய் வெளிநாட்டில் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டு இந்தியாவிற்கு சேவை செய்ய வருகிறார்.ஏர்ப் போட்டில் எதிர்பாரத விதமாக அனுஸ்கா மேல் மோதிவிட அவருடைய பொருட்களெல்லாம் சிதறி விடுகிறது.சிதறு தேங்காய் ஞாபகம் வர விஜயும் பொருக்குகிறார். விஜயை திருடன் என நினைத்து அனுஸ்கா தலையிலேயே அடித்துவிடுகிறார்.
உடனே “எம் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது” பாடல் ஆரம்பமாகிறது. அனுஸ்காவும் விஜயும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த விசயம் எப்படியோ அனுஸ்காவின் அண்ணன் பன்னி பெருமாளுக்கு தெரிந்து விடுகிறது.அவர் அடியாட்களை அனுப்பி விஜயை கொல்ல சொல்கிறார்.விஜயும்,அனுஸ்காவும் அப்போது டைட்டானிக் கப்பலில் இருக்கிறார்கள். அடியாட்களும் விஜயும் சண்டை போடும் போது கப்பல் இரண்டாக உடைந்து மூழ்க தொடங்குகிறது.விஜய் சற்றும் யோசிக்காமல் கடலில் குதித்து ஒரு கையில் கப்பலையும், இன்னொறு கையில் அனுஸ்காவையும் எடுத்துக் கொண்டு நீந்துகிறார். அப்போது ஒரு பாடல்
“ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே”.பாடல் முடியும் போது கரையில் அனுஸ்காவின் அண்ணன் நிற்கிறார் அவர் விஜயை பார்த்ததும் நீ இன்னும் உயிரோடவா இருக்கிற என ஆச்சிரியப்பட்டு கத்துகிறார்.

இடைவேளை :

விஜய் சின்ன பையனா இருக்கும் போது பன்னி பெருமாளோட ஒரு பன்னியால ஊரிலே பன்னி காய்ச்சல் வந்திடுது.அதுல விஜயோட குடும்பம் செத்து போயிடுது. உடனே விஜய் உலகத்தில்ல இருக்கிற எல்லா பன்னி சாகடிக்கரதுக்காக ஒரே ஜம்பில் கடலை தாண்டி வெளிநாட்டுல போயிடறாரு. எல்லா பன்னியும்
“நான் அடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்கமாட்ட
மோதிபாரு வீடு போய் சேரமாட்ட”ன்னு பாட்டுபாடி டான்ஸ் ஆடியே சாகடிக்குறாரு அதாவது வேட்டையாடுராரு.அதுல டாக்டர் பட்டம் வாங்கிட்டு இந்தியா வந்ததுக்கப்புரம் தான் முதல் பார்ட்டுல நடந்தது.

அனுஸ்காவோட அண்ணனுக்கும் விஜய்க்கும் சண்டை நடக்குது. அவனுக்கு துணையா பன்னிகளும் வந்து சேர அத தூரத்திலிருந்து பார்த்த விஜய் வெள்ளை புலின்னு நினைச்சு
“புலி உறும்முது புலி உறும்முது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரதபார்த்து”ன்னு விஜய் பாட்டு பாடி டான்ஸ் ஆடுராரு.அதைப் பார்த்துட்டு பன்னிக் கூட்த்தோட அனுஸ்கா அண்ணனும் செத்து போயிடறான்.

விஜயும் அனுஸ்காவும்
“கரிகாரன் காலப்போல கருத்திருக்கிறது குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மகால் நிழலு”ன்னு
டூயட் பாடிக்கிட்டு இருக்காங்க. சுபமுன்னு போடுவாங்கன்னு பார்த்தா, இவரு பாட்டுப்பாடி டான்ஸ் அடினதுள்ள ஆடு,மாடு கோழி எல்லாம் செத்துப்போச்சு.
“டேய் எல்.கே.ஜி பெயிலான்னவெல்லாம் டாக்டர் பட்டம் வாங்கின இப்படிதான்” என ஊரே துரத்த மருத்துவர் ராமதாசிடம் அரசியலில் சேர ஓடுகிறார் விஜய்.

வேட்டைக்காரனின் வேட்டை தொடரும்.

குறிப்பு:- :இந்த வேட்டைக்காரன் கதை விளையாட்டுக்கு தான், யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வேட்டைக்காரனின் பட்டையகிளப்பும் பாடல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Vijay’s latest film review, vettaikaran film review, Story of vettaikaran movie, anuiska, A.V.M in vettaikaran, SUN PICTURES in vettaikaran, Actor Vijay Joke, Vijay funny

செவ்வாய், 10 நவம்பர், 2009

வேட்டைக்காரன் (கோமாளி) விஜய்

கோமாளி விஜய்

இன்று என்ன வலைப்பூவில் பதியலாம் என மண்டையை கசக்கி யோசனை செய்த போது ஒரு குறுஞ்செய்தி வந்து கிச்சுகிச்சு மூட்டியது. சரி நாமும் நம்முடைய வலைப்பூவில் தேன் தேட வருபவர்களுக்கும் கிச்சுகிச்சு மூட்டுவோம் என்று எடுத்த முயற்சியே இது.

நடிகர் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம். அப்படியே பேச்சை மீறி ரொம்ப ஆர்வமாக படித்தாலும் வீடு தேடி வந்து அடிக்க வேண்டாம். சிரிக்க மட்டுமே மற்றவர் மனதினை புண்படுத்த அல்ல.

இன்றைய புதிய காமெடி பீஸ் யார் தெரியுமா அட நம்ம இளைய தளபதி விஜய் தானுங்க. இளசுகளின் மொபைல் இன்பாசில் இவரைப் பற்றிய காமெடி தான் இப்போதைக்கு லேட்டஸ்ட். அரசியலுக்கு வந்திடுவாரோ என பயந்து சிற்றிதல்கள் முதல் தின செய்திதால்கள் வரை அடக்கி வாசிக்க. கைப்பேசியில் கதரவிடுகின்றனர் எதிரணியினர்.பீடிகையெல்லாம் போதும் அப்படி என்ன தான் செய்தி வருகிறது என நீங்கள் கேட்பது புரிகிறது, சீக்கிரம் கீழே போங்க.
>>>>
>>>>
ஏங்க கொஞ்சம் சிரிங்க,

சிரிக்க மாட்டிங்களா...

சிரிக்க வைச்சுடுவேன்...

அப்புறம் கோவிச்சுக்க கூடாது

சிரிச்சிடுங்க

அட விஜய் அடுத்த படத்துல சிக்ஸ் பேக் வைக்கப் போராராம்.
பாத்திங்களா சிரிச்சிட்டிங்களே...இதுக்கு தான் முன்னையே சொன்னேன்.
>>>>
>>>>
விஜய் – நான் நம்ப பையனை வேட்டைக்காரன் படத்துக்கு கூட்டிட்டுப் போகப் போரேன்.
சங்கீதா - அப்பனாயா நீ, பெத்த புள்ளையையே கொல்ல பார்க்கறியே
விஜய் –????????
>>>>
>>>>
ரசிகர்- தலைவா உன் படம் ஒன்னு விடாம நான் திருட்டு விசிடியில பார்த்திருக்கேன்
விஜய் – அண்ணா தியேட்டருல்ல போயி படம் பார்த்தே இல்லையிங்களாண்ணா
ரசிகர் – போ தலைவா தனியா பார்க்க் பயமா இருக்குதில்ல
>>>>
>>>>
நடிகர் சூர்யாவின் வீடு...
சூர்யா – ஜோ காபி எடுத்துக்கிட்டு வா
ஜோ – என்னங்க ஒரு பிச்சக்காரன வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிரீங்க
சூர்யா – மெதுவா பேசு.அது விஜய், மேக்கப் இல்லாம வந்திருக்கிரார்
>>>>
>>>>
விஜய் – ஒரு தடவ முடிவெடுத்துட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்
ஒருவர் – உங்க பொண்டாட்டி
விஜய் – நானே கேட்க மாட்டேன்னு சொல்லறேன் எம் பொண்டாட்டி எப்படியா கேப்பா (அழுகிறார்)
>>>>
>>>>
அமெரிக்க உளவுதுறையின் மிகமிக ரகசியமான எச்சரிக்கை இது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அடுத்த மாசம் பல பேர் சாகப் போராங்கலாம்.அதைப் பத்தி தீவிரமாக விசானை செஞ்சதுள்ள வேட்டைக்காரன் படம் வெளிவரதுக்கு தயாரிப்பாளர் சம்மதம் தெரிவிச்சாச்சுன்னு தெரிஞ்சதாம்.எல்லாரும் படத்த பார்க்காம எச்சரிக்கையா இருங்க நமக்கு உயிர் தான் முக்கியம்.
>>>>
>>>>
ஒருவர் - தமிழ்நாட்டின் சிறந்த காமெடியனுக்கான விருது கொடுக்கரதுள்ள ஏதோ பிரச்சனையாமே
வேறெருவர் – ஆமான்யா எத்தன தடவ தான் விஜய்க்கே விருது தருவிங்கன்னு வடிவேலுவும், விவேக்கும் கோவிச்சுக்கிட்டாங்கலாம்
>>>>
>>>>
விஜயும், அஜித்தும் தேர்வு அறையில்....
விஜய் – தல கொஞ்சம் பேப்ரை காமியேன், பார்த்து எழுதிக்கிறேன்
அஜித் – டேய் நான் எழுதுரது தெலுங்கு பரிட்சை
விஜய் – நீ காட்டு மட்டும் காட்டு தல, நான் ரீமேக் பண்ணி எழுதிக்கிறேன்
அஜித் – அடப்பாவி
>>>>>>>>
இன்னும் மோசமாகவெல்லாம் குறுஞ் சேதிகள் வந்தன. வருங்கால தமிழக முதல்வரைப் பற்றி தப்பாக எழுத கூடாதென விட்டுவிட்டேன்.அட ஏம்பா சிரிக்கிரீங்க.

வேட்டைக்காரன் பாடல்:

புலி உறும்முது புலி உறும்முது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரதபார்த்து
.......................................................................................................
.......................................................................................................
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வரான் பாரு வேட்டைக்காரன்

அட வாரான்யா.(படம் வரத சிம்பாலிக்கா சொல்லறாங்களா?)

அடுத்த சுவையான செய்தியோட சீக்கிரமே வாரேன்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Vijay joke, funny actor joke, tamil joke, tamil actor joke, Dr. Vijay , latest SMS jokes, child joke

காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்

காலத்தால் அழியாதவை என சில இருக்கத்தான் செய்கின்றன.அந்த வகையில் யாரும் மறக்க முடியாத திரைக்காவியங்கள் சம்பூரண ராமாயணம், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மந்திரி குமாரி.

கோடிக் கணக்கான சம்பளம் வாங்கும் நடிகர்கள் முதல் பத்து ரூபாய்க்கு தினக்கூலி செய்யும் பாமரன் வரை மீண்டும் மீண்டும் பார்க்க துடிக்கும் இந்த படங்களை எத்தனை முறை திரைப்பட வளாகத்திற்கும் தொலைக்காட்சி பெட்டியிலும் பார்த்திருபப்போம்.அனால் மீண்டும் மீண்டும் பார்க்க தினம் அவை திரைக்கு வருவதில்லை. எல்லாம் வல்லவன் போல் இணையம் இருக்க நாம் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. தரவிரக்கம் செய்யுங்கள் தாராளமாக பாருங்கள்.

திருவிளையாடல்

ஈசன் திருவிளையாடலை அருமையாக பதிவு செய்த படம். கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்த மனிதர்களால் நேரில் கண்டது போல ஒரு எண்ணம். தருமி,நக்கீரன் என நம்முடைய முன்னோர்களுடன் இறைவனும் ஒரு பாத்திரமாக வளம் வரும் படம்.

இப்பொழுதெல்லாம் இது போன்ற படங்கள் வருவதில்லையே என திரைப்பட ரசிகர்கள் நாள்தோறும் கவலைகொள்ளும் அளவிற்கு காண காண திகட்டாத முக்கனி இப்படம்.

திருவிளையாடல் படத்தினை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

சரஸ்வதி சபதம்

கடவுள்கள் நம் முன்னோர்களோடு பின்னிப் பினைந்து திருவிளையாடல் செய்த மற்றொரு படம்.

சரஸ்வதி சபதம் படத்தினை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

சம்பூரண ராமாயணம்

கடவுள் மனிதனாக அவதாரமெடுப்பது எல்லா மதங்களிலும் உண்டு என்றாலும் ராமன் போல ஒருவன் உண்டோ என 21ம் நூற்றாண்டிலும் வியந்து போகும் ஒரு மனித கடவுளின் வரலாறு.

சம்பூரண ராமாயணம் படத்தினை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

மந்திரி குமாரி

அரசர்களின் வரலாற்றை புரட்சி தலைவன் தன் சிந்தைனையால் மக்களுக்கு தந்த படம். ராமன் மனிதனாக அவதரித்த கடவுள் என்றால் புரட்சி தலைவன் கடவுளாக வாழ்ந்த மனிதன்.

இறந்து பல நூற்றாண்டுகள் ஆனாலும் இளமையாகவே தமிழனுடைய நெஞ்சங்களில் வாழும் தலைவனின் படம்.எம்.ஜி.ஆர் நடித்த படம் என்ற ஒன்றே போதும் இதை தரவிரக்கம் செய்து பார்ப்பதற்கு.

மந்திரி குமாரி படத்தினை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Free tamil film download, tamil old film download, Manthir Kumari M.G.R film free download, Sampoorna Ramaayanam film free download, Saraswathi Sabatham film free download, Thiruvillaiyaadal film free download, sivan film free download, lord Siva film free download, god story film free download, Cost Free tamil Movie, Sivagi film free download, Tamil God Story in Movie, blockbuster Tamil old movie free cost downloading.

விளையாட்டு தரவிரக்கம்

டேவ்

டேவ் விளையாட்டு எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டு. டாஸ் எனப்படும் கணினி மொழியில் இயங்கும் இந்த விளையாட்டு இப்போது பல பரிணாமங்களை கடந்து வந்துவிட்டது.

இருப்பினும் இந்த விளையாட்டின் தொடக்க நிலையில் இருந்து விளையாட ஆசைக் கொள்பவர்களுக்காக குறைந்த நேரத்திலேயே இலவசமாக தரவிரக்கம் செய்து விளையாட இங்கே சொடுக்கவும்.

கிரிக்கெட்

மட்டைப்பந்து என தமிழில் அழைக்கப்பட்டாலும் கிரிக்கெட் என்றால் நிறைய பேருக்கு கிறுக்கு பிடித்துவிடும்.இந்த அளவிற்கு அடிமைப்படுத்திய விளையாட்டு உயர்தரமான பிளாஸ் தொழில்நுட்ப முறையில் இலவசமாக தரவிரக்கம் செய்து கணினில் விளையாட இங்கே சொடுக்கவும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Free game download, free flash game download, free dos game download, dos Dave game download, flash cricket game download, game download instruction in tamil language.

சுஜாதாவின் நகரம் சிறுகதை

சுஜாதாவின் நகரம் சிறுகதை

சுஜாதாவுடைய மென்புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தால் விரைவில் உங்களுக்கும்.... அதுவரை இந்த சிறுகதையை படியுங்கள்

சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன, நிஜாம் லேடி புகையிலை ஆ.கே. கட்பாடிகள் எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் ஹாஜி மூசா ஜவுளிக் கடை (ஜவுளிக்கடல்), 30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்:

மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்’ அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தலம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்’ கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்’ செல்லும் வாகன, மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம்போல் இருந்தது. (பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்) கதர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக் கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகை, பாவம்…மதுரை!

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தன் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி. டிபார்ட்மெண்டின் காரிடாரில் காத்திருந்தாள் முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்ட்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டி விட்டார். ‘‘உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போ’’ என்றார்.

அதிகாலை பஸ் ஏறி…பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தான். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக்கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன நெற்றியில் விபூதிக் கீற்று. மார்புவரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி ஜுரத் தூக்கத்தில் இருந்தாள். வாய் திறந்திருந்தது.

பெரிய டாக்டர் அவன் தலையைத் திருப்பிப் பார்த்தார். கண் இரப்பையைத் தூக்கிப் பார்த்தார். கன்னங்களை விரலால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்து பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர். போஸ்ட் கிராஜுலேட் வகுப்புகள் எடுப்பவர்கள், ப்ரொஃபஸர், அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள்.

‘Acute case of Meningitis. Notice the…’’

வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாஷணையின் ஊடே தன் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆஃதால் மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குள்ளே பார்த்தார்கள். ‘‘டார்ச்’ அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள். குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள்.

பெரிய டாக்டர். ‘‘இவனை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள்’’ என்றாள்.

வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி ‘‘மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், ‘‘இத பாரும்மா, இந்தப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்கார்ந்திருக்காரே, அவர் கிட்ட போ. சீட்டு எங்கே?’’ என்றார்.

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

‘‘சரி, அவரு கொடுப்பாரு. நீ வாய்யாஇப்படி பெரியவரே’’

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, ‘‘அய்யா, குளந்தைக்குச் சரியாய்டுங்களா?’’ என்றாள்.

‘‘முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம். டாக்டர் தனசேகரன். நானே இந்தக் கேஸைப் பார்க்கிறேன். ஸீ தட் ஷி இஸ் அட்மிட்டட். எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கிறேன்.’’

மற்றவர்கள் புடை சூழ அவர் ஒரு மந்திரிபோல் கிளம் பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டுப் பெரிய டாக்டர் பின்னால் விரைத்தார்.

சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.

‘‘இங்கே வாம்மா. உன் பேர்?… டேய் சாவு கிராக்டிக! அந்த ரிஜிஸ்தரை எடுடா!’’

‘‘வள்ளியம்மாள்.’’

‘‘பேஷண்ட் பேரு?’’

‘‘அவரு இறந்து போய்ட்டாருங்க.’’

சீனிவாசன் நிமிர்ந்தான்.

‘பேஷண்ட்டுன்னா நோயாளி… யாரைச் சேர்க்கணும்?’’

‘‘என் மகளைங்க.’’

‘பேரு என்ன?’’

‘‘வள்ளியம்மாளங்க.’’

‘‘என்ன சேட்டையாக பண்றே? உன் மக பேர் என்ன?’’

‘‘பாப்பாத்தி.’’

‘பாப்பாத்தி!… அப்பாடா. இந்தா, இந்தச் சீட்டை எடுத்துக்கிட்டுப்போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுக்கிட்டு ஒருத்தர் உக்கார்ந்திருப்பார். வருமானம் பாக்கறவரு. அவருகிட்ட கொடு.’’

‘‘குளந்தைங்க?’’

‘‘குளந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்திருக்கட்டும். கூட யாரும் வல்லையா? நீ போய் வா… விஜயரங்கம் யாருய்யா?’’

வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை. அந்த க்யூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இறந்து போன தன் கணவன்மேல் கோபம் வந்தது.

அந்தச் சீட்டைக் கொண்டு அவள் எதிரே சென்றாள். நாற்காலி காலியாக இருந்தது. அதன் முதகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள். அவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால் பாகத்தால் பார்த்தார். ‘‘இரும்மா, அவரு வரட்டும்’’ என்று காலி நாற்காலியைக் காட்டினார். வள்ளியம்மாளுக்குத் திரும்பத் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில், காத்திருப்பதா குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிட்ததது.

‘‘ரொம்ப நேரமாவுங்களா?’’ என்று கேட்கப் பயமாக இருந்தது அவளுக்கு.

வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமகனை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார். ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்ச்சீப்பைக் கயிறாகச் சுருட்டித் தேய்த்துக் கொண்டு சுறுசுறுப்பானார்.‘‘தயார், வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்பூச்சி மாதிரி வந்தீங்கன்னா என்ன செய்யறது?’’

வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.

‘‘டாக்டர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா. டாக்டர் கையெழுத்தே இல்லையே அதிலே!’’

‘‘அதுக்கு ‘‘எங்கிட்டுப் போவணும்?’’

‘‘எங்கேருந்து வந்தே?’’

‘‘மூனாண்டிப்பட்டிங்க!’’

கிளார்க், ‘‘ஹைத்’’ என்றார். சிரித்தார். ‘‘மூணாண்டிப் பட்டி! இங்கே கொண்டா அந்த சீட்டை.’’

சீட்டை மறுபடி கொடுத்தாள். அவர் அதை விசிறி போல் இப்படித் திருப்பினார்.

‘உன் புருசனுக்கு என்ன வருமானம்?’’

‘‘புருசன் இல்லீங்க’’

‘‘உனக்கு என்ன வருமானம்?’’

அவள் புரியாமல் விழித்தாள்.

‘‘எத்தனை ரூபாப மாசம் சம்பாதிப்பே?’’

‘‘அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேவரகு!’’

‘‘ரூபா_கிடையாதா!… சரி. தொண்ணூறு ரூபா போட்டு வெக்கறேன்.’’

‘மாசங்களா?’’

‘‘பயப்படாதே. சார்ஜு பண்ணமாட்டாங்க. இந்தா இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு இப்படியே நேராப் போய் இடது பக்கம்_பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும். 48_ஆம் நம்பர் ரூமுக்குப் போ.’’

வள்ளியம்மாள். அந்தச் சீட்டை இருகலரங்களிலும் வாங்கிக் கொண்டாள். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க, காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்குப் படிக்க வராது. 48_ஆம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பிப் போய் அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.

ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு நோயாளிகள் உட்கார்ந்து கொண்டு, பாதிபடுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வ்ண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தின் சாம்பார். சாதம் நகர்ந்து கொண்டிருந்தது வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தது. அலங்கரித்துக்கொண்டு, வெள்ளைக்கோட் அணிந்து கொண்டு, ஸ்டெதாஸ்கோப் மாலையிட்டு, பெண்டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்ஸ்கள் எல்லோரும் எல்லாத் திசையிலும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்குப் பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு ஆள் அவள் சீட்டுப் போலப் பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் தன் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கிக் கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்தப் பெண் அங்கே தனியாக இருக்கிறாள் சீட்டுக்களைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாகஅவர்களை உட்கார வைத்தான் பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்தச் சீட்டைப் பார்த்து, ‘‘இங்கே கொண்டு வந்தியா! இந்தா,‘‘சீட்டைத் திருப்பிக் கொடுத்து, ‘‘நேராப்போ,’’ என்றான். வள்ளியம்மாள், ‘‘அய்யா இடம் தெரியலிங்களே’’ என்றாள். அவன் சற்று யோசித்து எதிரே சென்ற ஒருவனைத் தடுத்து நிறுத்தி, ‘‘அமல்ராஜ், இந்த அம்மாளுக்கு ‘‘நாற்பத்தி எட்டாம் நம்பரைக் காட்டுய்யா. இந்த ஆள் ‘பின்னாடியே போ. இவர் அங்கேதான் போறார்’’ என்றான்.

அவன் அமல்ராஜின் பின்னே ஓடவேண்டி இருந்தது.

அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு வட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கிக் கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.

அரை மணி கழித்து அவள் அழைக்கப்பட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக ஒருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பிப் பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்.

‘‘ஓ.பி.டிபார்ட்மெண்டிலிருந்து வரியா?’’

இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

‘அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக் காலையிலே சரியா ஏழரை மணிக்கு வந்துடு. என்?’’

‘‘எங்கிட்டு வர்றதுங்க?’’

‘இங்கே வா. நேரா வா, என்ன?’’

வள்ளியம்மாளுக்கு அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தனியாக விட்டு வந்துவிட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று. அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. ஒரே ஆசாமி திரும்பத் திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. ஒரு வார்டில் கையைக் காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட் பல பேர் படுத்திருந்தார்கள். ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன. மிஷன்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக அவளுக்குத் திரும்பவும் வழி புரியவில்லை.

‘அம்மா’’ என்று ஒரு பெண் டாக்டரைக் கூப்பிட்டு தான் புறப்பட்ட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். ‘‘நிறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க, பணம் கொடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. எம் புள்ளையை அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா!’’

அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக ஒதுங்கி நின்று அழச் சொன்னான். அந்தஇடத்தில் அவள் அழுவதுஅந்தஇடத்து அஸெப்டிக் மணம்போல் எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.

பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டுப் பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்?’’ என்று பேசிக் கொண்டே நடந்தாள். ‘ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதன் கேட்டைத் திறந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.

வெளியே வந்துவிட்டாள். அங்கிருந்துதான் தொலை தூரம் நடந்து மற்றொரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!

ஆனால் வாயில்தான் மூடப்பட்டிருந்தது. உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரெச்சரில் கண்மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.

‘‘அதோ! அய்யா, கொஞ்சம் கதவைத் திறவுங்க. எம்மல அங்கே இருக்கு.’’

‘‘சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்.’’ அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள் அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான் அவன் கேட்டது அவளுக்குப் புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக்கொண்டு யாருக்கோ அவன் வழிவிட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினான். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்.

பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிடுடு விட்டு வார்டுக்குச் சென்றார். அவருக்குக் காலை பார்த்த மெனின்ஸைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது. ஙி வி யி யில் சமீபத்தில் புதிய சில மருந்துகளைப் பற்றி அவர் படித்திருந்தார்.

‘‘இன்னிக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே மெனின் ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா?’’

‘‘இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர்’’

‘‘என்னது? அட்மிட் ஆகலையா? நான் ஸ்பெஸிஃபிக் காகச் சொன்னேனே! தனசேகரன். உங்களுக்கு ஞாபகம் இல்லை?’’

‘‘இருக்கிறது டாக்டர்!’’

‘‘பால்! கொஞ்சம் போய் விசாரிச்சுட்டு வாங்க. அது எப்டி மிஸ் ஆகும்?’’

பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளார்க்குகளிடம் விசாரித்தார்.

‘‘எங்கேய்யா! அட்மிட் அட்மின்னு. நீங்க பாட்டுக்கு எழுதிப்புடறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது!’’

‘‘ஸ்வாமி! சீஃப் கேக்கறார்!’’

‘‘அவருக்குத் தெரிஞ்சவங்களா?’’

‘‘இருக்கலாம். எனக்கு என்ன தெரியும்!’’

‘‘பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ப பக்கம் வரலை. வேற யாராவது வந்திருந்தாக்கூட எல்லாரையும் நாளைக்கு காலை 7.30க்கு வரச் சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூஹ பெட் காலியாகும். எமர்ஜன்ஸினனா? முன்னாலேயே சொல்லணும்! இல்லை, பெரியவருக்கு அதிலே இண்ட்ரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா?’’

வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை 7.30 வரை தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டான். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.

‘‘வாட் நான்ஸென்ஸ்! நாளைக்குக் காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்தப் பெண் செத்துப் போய்டும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி. யிலே போய்ப் பாருங்க. அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிபார்ட்மெண்ட் வார்டிலே பெட் இருக்குது. கொடுக்கச் சொல்லுங்க! க்விக்!’’

‘‘டாக்டர்! அது ரிஸர்வ் பண்ணி வெச்சுருக்கு!’’

‘‘I don’t care. I want that girl admitted now. Right now!’’

பெரியவர் அம்மாதிரி இதுவரை இருந்ததில்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளைத் தேடி ஓ.பி. டிபார்ட்மெண்டுக்கு ஓடினார்கள்.

‘‘வெறும் சுரம்தானே? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போய்விடலாம். வைத்தியரிடம் காட்டி விடலாம் கிராம ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம். அந்த டாக்டர்தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாகப் போய்விடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்.’’ சைக்கிள் ரிக்ஷா பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது வள்ளியம்மாள், பாப்பாத்திக்குச் சரியாய்ப் போனால் வைதீஸ்வரன் கோவிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன்’’ என்று வேண்டிக் கொண்டாள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sujatha short story, writer Sujatha story