தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

எல்.டி.டி.இ தோற்றது ஏன்

சில பொதுவான கருத்துகளை மட்டுமே வைத்துள்ளேன். பிரபாகரன் செய்த தவறென்ன, பிறர் என்ன செய்திருக்க கூடும் என உள்ளே சென்று ஆராயும் அளவிற்கு எனக்கு ஞானமில்லை.ஏதோ வழிபோக்கன் புரிந்து கொள்கின்ற அளவிற்கு எனக்கு தெரிந்ததினை கூறியிருக்கிறேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் அதுவே என் முழு வெற்றி.

தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கக் கூடிய ஒரே குறிக்கோள் சுகந்திரம் பெறுவது.அடிமைதனத்தினை தகர்த்தெரிய தோன்றிய முதல் இயக்கம் டெரர்.அதன் பின் கொள்கை முழக்கத்துடன் அரசை எதிர்த்தவர்கள் அனைவருக்கும் டெரரிஸ்ட் என பெயர் வந்தது.

இதை தோல்வி என்று கூறாமல் பின்னடைவு என்றே விடுதலை புலிகளின் ஆதரவாலர்கள் கூறுகின்றார்கள்.எது எப்படியோ ஒட்டு மொத்த தமிழன மக்களும் விலங்குகள் போல வேலியில் அடைக்கப் பட்டு இருக்கின்றார்கள்.

எல்.டி.டி.இ தோற்றது

1.மொழியை அங்கிகாரம் செய்து அவர்கள் தமிழர்கள் என அழைக்கப்பட்டது.

2.விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தீவிரவாத இயக்கம் என மக்கள் நினைத்தது.

3.இந்தியாவின் பிரதமராக காங்கிரஸ் நபர் இருப்பது. கச்ச தீவு பிரட்சனை முதல் இந்த பிரட்சனை வரை இலங்கை என்ற அண்டை நாட்டின் வளர்ச்சியை மட்டுமே இந்திய காங்கிரஸ் வரவேற்கிறது.

4.சீனா இலங்கையுடன் கைகோர்த்துக் கொண்டது.

5.எங்கெல்லாம் தம் மக்கள் பாதிக்கப் படுகின்றார்களோ அங்கெல்லாம் அல்கயிதா குரல் கொடுக்கின்றது.அது போல விடுதலைப் புலிகள் ஆதரவைப் பெருக்கி கொண்டிருக்க வேண்டும்.ஆனால் செய்ததாக தெரியவில்லை.

6.இலங்கை வாழ் மக்களிடையே பல வேறுபாடுகள் இருந்ததாக கூறுகின்றார்கள்.

7.ஒரு சமயத் தீவிரவாத இயக்கத்தினை விட மொழி சார்ந்த தீவிரவாத இயக்கம் வலுவின்றிதான் இருக்கும்.காரணம் இன்று மொழியை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறைவென்பதால் மொழிபற்று மக்களிடையே அரவே இல்லை.

8.எல்லாவற்றையும் விட பல தமிழர்கள் தமிழர்களாகவே இல்லாதிருப்பது.தமிழ் தெரியாத தமிழர்களும்,தமிழர்களை ரசிக்க தெரியாத தமிழர்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றார்கள்.

வேலை,பொழுது போக்கு, உணவு பழக்கம்,கட்டிட அமைப்பு என தமிழ் நாடு குட்டி அமெரிக்காவாக மாறிக் கொண்டிருக்கிறது.தமிழ்நாடு மட்டுமல்ல எல்லா நாடுகளும்தான்.அப்படியிருக்கும் போது மொழி அடிப்படையிலான தீவிரவாதம் தோல்வியை சந்தித்ததில் ஆச்சிரியம் ஏதும் இல்லை. எல்.டி.டி.இ தோல்விக்கு தமிழும் தமிழர்களும் மட்டுமே முழு பொறுப்பு.

என்னுடைய எண்ணங்களில் முரன் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இது சர்ச்சைக் குரியது அல்ல.உண்மை.