தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 நவம்பர், 2009

சாதிகள் இல்லையடி பாப்பா – சிறுகதை

அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் அறையில்,

“ஐந்து வயசாயிடுச்சா”

“ஆயிடுச்சுங்க”

தலைமையாசிரியர் ஒரு தாளை எடுத்து எழுது தொடங்கினார்

“பொண்ணு பேரு”

“பூங்கொடி”

“அப்பா பேரு”

“நான்தானுங்க”

“யாருன்னா கேட்டேன். பேரைச் சொல்லுயா”

“ராசய்யா சாமி”

“இந்து தானே”

“ஆமாம் சாமி”

“முன்னையெல்லாம் பேரைச் சொன்னாலே மதமும் தெரிஞ்சு போயிடும். இப்ப மதம் மாறினாலும் பேரையும் விடரதில்லை, சாதியையும் விடரதில்லை” என மெதுவாக முனகியபடி,

“சரி, என்ன சாதி”

“ ****************** ”

“பார்க்கரப்பவே நினைச்சேன்” மீண்டும் முனகல்.

“பையனை பள்ளிக்கூடத்துல சேத்தாச்சு. வலது கை பக்கமா போயி ஒன்னவது வகுப்பு எதுன்னு கேளு, சொல்லுவாங்க அங்க உட்காரவைச்சுட்டு போ”

“ஏ புள்ள சாமிக்கு வணக்கம் வையி”. சிறுமி வணக்கம் வைத்தாள். ஏதோ ஞாபகம் வந்தவராக,

“பொண்ண, பின்னாடி வரிசையில உட்கார சொல்லு”

“நல்ல படிப்பா சாமி, அதனால...”

“சொல்லரத கேளுயா, நீங்க பாட்டுக்கு முன்வரிசையில உட்கார வைச்சிட்டு போயிடறீங்க, எப்படி எங்க குழந்தைகங்க அவங்கள தாண்டிப் போயி உட்காருன்னு மேல்சாதி காரங்க சண்டைக்கு வாராங்க”

முகம் வாடிப்போய் அவர் வெளியேர, சிறுமி சுவரில் மாட்டப்பட்டுருந்த படத்தை பார்த்தபடியே அவருடன் சென்றாள். தலைமையாசிரியரும் கவணித்தார் பாரதியாரின் புகைப்படம் கீழ் “சாதிகள் இல்லையடி பாப்பா” வரிகள் மின்னின. அதை நோக்கி சென்றார் அகற்றுவதற்கு.

பி.கு –

பள்ளிக்கு படிக்க வருகின்ற குழந்தை முதன் முதலாக கற்றுக் கொள்வது தனது சாதியைதான். பள்ளியின் குறிப்புகளிலிருந்து அகற்றினாலே சாதிகள் அழிந்துவிடும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக-

Short story, Tamil story, Tamil short story, small Tamil story, free story