தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

சொல்வதெல்லாம் உண்மை இலவச மென்நூல்

சொல்வதெல்லாம் உண்மை – நடிகர் பிரகாஷ்ராஜ்

நான் அதிகம் சுய சரிதைகளை வரும்பி படிக்கும் பழக்கம் உடையவன். உண்மை என்றவுடனே ஞாபகத்திற்கு வந்து நிற்கும் காந்தியடிகளின் சுயசரிதையை எண்ணற்ற முறை வாசித்திருக்கிறேன்.

காந்தியடிகள் போல உண்மையான சுயசரிதையை யாரும் எழுதமுடியாது என்று எண்ணினேன். ஆனால் பிரகாஷ் ராஜ் அதை உடைத்துவிட்டார். பல மொழிகளில் பேசி நடிக்கும் வித்தகனுக்கு பின்னால் உள்ள துயரங்களை விட சுவாரசியமும் அழகிய குடும்பமும் இருக்கிறது என நினைக்க தூண்டிய புத்தகம்.

எல்லோருக்கும் அனுபவங்கள் கிடைப்பதில்லை, அனுபவங்கள் சீப்பு போல அது கிடைக்கும் போது நம்மில் பெரும்பாலோனோர்க்கு முடியே இருப்பதில்லையென எஸ்.ராமகிருஷ்ணன் அழகாக சொல்லியிருப்பார் . அந்த அனுபவத்தினைப் பெற தரவிரக்கம் செய்து படித்திடுங்கள்.

நிறைய காதல்கள் திருமணம் முடிந்த்தும் முடிந்து விடுகின்றன.அதற்கு காரணம் காதலன் கணவனாயிடரான்.காதலி மனைவியாயிடரா.
- நடிகர் பிரகாஷ்ராஜ்

சொல்வதெல்லாம் உண்மை – நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தகத்தினை இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Prakashraj solvathalam unmmai e Book free downloading, free cost Tamil e books, downloading link for Tamil life history book