தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கமல் என்றொரு மனிதன்




ஆத்திகன் நாத்திகனை பற்றி பேசுவதும் நாத்திகன் ஆத்திகனைப் பற்றி பேசுவதும் இது வரையில் குற்றம் சொல்வதற்காக மட்டும் இருந்திருக்கலாம். ஆனால் இந்த இடுகை வாழ்த்துவதற்கு.

கலத்தூர் கண்ணம்மா முதல் உன்னைப் போல் ஒருவன் வரை தமிழ் சினிமா மூலம் பல கமலை பார்த்துவிட்டோம், எல்லாம் நடிப்பு. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கைகூப்பி கமல் ஆண்டவனை வழிபட நினைப்பதே இல்லை என்றாலும், அவர் உண்மையான மதத்தின் பொருளை பல முறை உணர்த்தியிருக்கிறார்.



அன்பே சிவம் படத்தில் கிறிஸ்துவ மதத்தின் சேவை மனப்பான்மையை அழகாக விவரித்திருப்பார். சிவம் என்றாலே கடவுள், அன்பு தான் கடவுள் எனவும் ஒவ்வொறு மனிதனும், உயிரினமும் கடவுள் தான் எனவும் கூறியிருப்பார். உண்மையில் அதை தான் இந்து மதமும் சொல்கிறது. மற்ற மதங்களும் சொல்கின்றன.இதைப் பற்றி கூறுவதற்கு பல இடுகைகள் தேவைப்படும்,மேலும் இந்த இடுகையின் காரணத்தினை அது போக்கிடும் என்பதால் இதோடு இதனை முடிவு செய்வோம்.

சாதி அரசியலுக்காக தேவர் மகன், வேலையில்லா திண்டாட்டத்திற்காக சத்தியா,லஞ்ச ஒழிப்பிற்காக இந்தியன், விஞ்ஞான அழிவுக்காக தசவதாரம் என பல நன்மைகளை படத்தின் மூலம் எடுத்து சொல்லி விட்டு வாழ்க்கையில் அவர் கடைபிடிக்காமல் போயிருந்தால் என்னைப் போன்ற ஒரு ரசிகக் கூட்டம் அவருக்கு இருந்திருக்காது.

இதோ இறுதியாக தீவிரவாதம் பற்றியும் சொல்லிவிட்டார். அடுத்து அவர் என்ன சொல்லப் போகின்றார் என நான் மன்னிக்கவும் நாங்கள் ஆவலோடு எதிர் பார்க்கின்றோம்.

ரத்தம், உடல் என பல தானம் செய்துவிட்டு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக்காகவும் பணியாற்றி வருகின்றார். வலைதலங்களில் அவரைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனம் பார்த்தேன் படித்தேன். அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கின்றேன்.

பட்டை தீட்டிக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும் அவர் நடித்திருப்பது வேண்டுமானால் போலியாக இருக்கலாம்.ஆனால் அவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பகுத்தறிவு வாழ்க்கை உண்மையானது. மற்ற மனிதர்கள் போல பகுத்தறிவு பேசிக் கொண்டு மஞ்சள் பச்சையென நிறங்களில் மட்டுமல்லாது மறைமுக யாகம், சாமியாரை வீட்டிற்கு கூட்டி வந்து கொட்டமடிப்பது என எதிலும் ஈடுபடாமல் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இறுதியாக கமலுக்கு ஒரு சின்ன அறிவுரை இன்னும் உங்கள் ரசிகர்களில் சிலர் உங்கள் அளவிற்கு பகுத்தறிவு தனத்தினை வளர்த்துக் கொள்ளவில்லை. கமலுக்கு கும்பாபிசேகம் என விளம்பரம் செய்துள்ளனர். கடவுளின் முகத்திற்கு பதிலாக உங்கள் முகத்தினை மாற்றியுள்ளார்கள். உங்களை உங்களாகவே ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை அவர்களுக்கு தரவேண்டியது உங்களுடைய தலையாயபணி. முறன்களை தகர்த்தெரியுங்கள்.



ரசிகன் என்ற முறையில் பொன்விழா நடிகன் உலக நாயகன் கமலுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.