தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்,
- ஜெகதீஸ்வரன்.
வெள்ளி, 20 நவம்பர், 2009
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் இன்று.
தன் எடையில் சரி பாதி புத்தகம் சுமக்கும் கழுதையாய், பெற்றோர்களின் வறுமையை துடைத்தெரிய தொழிலாளியாய், பிச்சையெடுக்கும் மக்களுக்கு கருவியாய், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் அன்பு கிடைக்காமல் தனிமையாய் இன்னும் எத்தனை எத்தனையோ. இதில் புதியதாக சேர்ந்திருக்கிறது பாலியல் வன்கொடுமை. ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லா குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன இந்த கொடூரத்தில். இதை தடுக்கவும், விழிப்புணர்வு செய்திடவும் இங்கு ஆளில்லை என்பதே உண்மை.
தனக்கு என்ன நடக்க போகிறது என்று அறியாமலேயே ஒரு சாக்லேட்டுக்கும், விளையாட்டுப் பொருள்களுக்கும் ஆசைப்பட்டு செத்து போகும் குழந்தைகள் பற்றி நம்மில் எத்தனை பேர் கவலை படுகின்றோம். சரியாக சொல்லப் போனால் யாருமில்லை. நொய்டா பிரட்சனை பகிரங்கமாக தெரிந்தும் இதற்கென சிறப்பு தடுப்பு சட்டம் போடாமல். நம் அன்றாட பிரட்சனையை கவணிக்க போய் விட்டோம்.
நகரெங்கிலும் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கும் வேளையிலும் அந்தப் பெண்களிடம் போகாமல் குழந்தைகளை ருசி பார்த்து அலைகின்றது ஒரு கூட்டம். காவல் அதிகாரிகள் பிடித்து கொடுத்தாலும் விசாரனை முறைகளில் வெளியே வந்து விடுகின்றார்கள் குற்றவாளிகள். நாடு விட்டு நாடு வந்து ஒருவன் பல குழந்தைகளை சீரழித்திருக்கின்றான். அவனை பிடித்து ஊர் மக்கள் காவலர்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இப்போது அவன் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். எப்படி வெளிவந்தான் என எல்லோருக்குமே தெரிந்துவிட்டது.
மற்ற பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் நடைபெறும் குற்றங்களை கூட நாம் பெரிது செய்ய இயலாது. தனக்கு ஒத்து வராத மேல் அதிகாரிகள், கணவன் குடும்பத்தினர் என எல்லோரையும் சில பெண்கள் பழி தீர்ப்பதற்காக அபாண்ட குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள். காதல் என்று சொல்லி பலருடன் ஊர் சுற்றி கர்பம் தரித்துவிட்டு கலைக்க முடியாது போனால் மட்டுமே திருமணம் என்ற கொள்கை வைத்திருக்கின்றார்கள் பெண்கள்.மனைவி இருக்கும் போதே பிற பெண்களை தேடும் கணவன்கள். தங்களின் மகிழ்வுக்காக பெண்களை கிண்டல் செய்யும் வாலிபர்கள் என பலரும் இருக்கின்றனர்.
நாம் இவர்களுக்காக தான் கவலைப் படுகின்றோம். குழந்தைகளை மறந்து விடுகின்றோம். அவர்களுக்கென புத்தகங்கள் இல்லை, திரைப்படங்கள் இல்லை, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் இல்லை. மொத்தத்தில் கவணிப்பாரற்று தங்கள் போக்கில் வளரும் காட்டு செடியாக இருக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் சிறுமியும் சிறுவன் எந்தளவிற்கு கொடுமையை அனுபவிக்கிறான் என பள்ளியில் போய் பாருங்கள். பேச்சாலே கொல்லும் ஆசிரியர்கள் முதல் விதவிதமான கொடுமை செய்யும் சாடிஸ்டுகள் வரை இப்போது பள்ளிகளில் இருக்கின்றார்கள்.
மலரினும் மெல்லிய குழந்தைகள் கசக்கப்படுவதை முயன்றவரை தடுத்திடுவோம். அதற்காக உறுதி எடுத்திடுவோம்.
இந்தக் அழகிய குழந்தை யாரென தெரிகின்றதா.
உலகையே தனக்குகீழ் கொண்டுவர முயன்ற ஹிட்லர். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த மனிதனின் குழந்தை பருவமும் அழகு தான்.