தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

பெரியார் என்றொரு மதவாதி

ஒரு மனிதனுடைய அழிவிற்க்கு எப்படி அவனை தட்டிக் கேட்காத தந்தை ஒரு காரணமோ அப்படியே மதத்திற்கும்.மதம் மேல் கொண்ட அன்பு காரணமாக மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து செயல்களையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டிருந்தனர் மக்கள். தவறு விதைக்கப்பட்டது அங்கு தான்.மக்களுடைய எண்ண ஓட்டங்களில் உண்மை புரியும் போது தவறு மரமாக வளர்ந்திருந்தது.

வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மதங்களில் சாதிகள் என்ற பாகுபாடு நிலைத்து நின்றது. தவறை சுட்டிகாட்டியவர்களை புறந்தள்ளிவிட்டு மக்கள் பயணங்களை மேற்கொண்ட போது அவர்கள் அடிமைகளாக மாறியிருந்தார்கள். சுட்டிக்காட்டியவர்கள் மௌனமாக வெளியேரினார்கள், சிலர் ஊர்களை விட்டும், சிலர் மதங்களை விட்டும்.

உண்மையை உணர்ந்தவர்கள் மௌனத்தை விட்டுவிட்டு உரக்கச் சொன்னபோது மக்கள் உண்மையை உணர்ந்தார்கள். ஆனால் உண்மையோடு கொஞ்சம் பொய்யும் அவர்களுக்கு தேவைப்பட்டது. தவறை திருத்த முயற்சி மேற்கொள்ளாமல் தவறுக்கு காரணமானவர்களை தண்டித்தார்கள். இன்று பார்ப்பன இனம் அந்த தண்டனையை தான் பெற்றுக்கொண்டிருக்கிறது. மூடப்பழக்கங்களை அழிக்க முற்பட்டவர்கள் பாதைமாறி முழுவதையும் அழிக்க ஆசைப்படுகின்றார்கள்.

பெரியாரின் கொள்கையை பரப்புவதாகச் சொல்லி இந்து மதத்தில் அவர் எதிர்த்த உருவ வழிபாட்டை அவருடைய சிலைகளை தெருக்கு தெரு வைத்தே உறுதி செய்கின்றனர். இன்னும் சில காலம் கழித்து கற்பூரம் காட்டி தேங்காய் உடைப்பார்களோ என பயமாக இருக்கிறது. நான் என்ன oதான் ஆத்தகன் என்றாலும் பெரியாரின் கொள்கைகள் தகர்க்ப்படுவதை பார்த்து வேதனை கொள்கிறேன். காரணம் பெரியாரை தவறாக அல்லவா அவர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

ஒரு மதத்தினை ஆதரிக்கவோ எதிர்க்கவோ காரணங்கள் இருக்கதான் செய்யும். ஏனென்றால் மதம் பெரியது. ஒரு மனிதனிடம் உள்ள குறைகளுக்காக அவனுடைய உறவுகள் அவனை விட்டு ஓடிப்போனால் அவன் திருந்துவானா.அவனுடைய குறைகளை அருகிலிருந்தல்லவா சரி செய்ய வேண்டும் அதை தான் பெரியார் செய்தார். அவர் மறைந்த பின்பு தவறான மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டனர் அவரது தொண்டர்கள்.

சாதிகள் சாலைகளின் பெயர்களிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது ஆனால் அரசாங்த்திற்கு இடம் பெயர்ந்து விட்டனவே.சாதிகள் இல்லையடிப் பாப்பாவென படிக்கவே சாதிப் பெயர் சொல்லிதான் பள்ளியில் சேர வேண்டியிருக்கிறது.சாதிக்கட்சி துணை இல்லாமல் இங்கு ஆட்சி செய்ய முடியவில்லை. சாதியை உடைத்தெரிவதற்கு பதிலாக வழு சேர்த்து கொண்டிருக்கிறார்கள் பெரியாரின் வாரிசுகள்.

இதோ இன்று உலகம் முழுதும் தங்களுடைய மதம் பரப்ப மௌனமாக யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது இந்த வலைப்பூவும் அதில் அடக்கம். இருப்பினும் சாதியை அழித்து சமத்துவம் கொண்டு வர பள்ளியின் சேர்க்கை முதலே நடைமுறைப்படுத்தினால் நான் கண்டிப்பாக மகிழ்வேன்.ஏனென்றால் பெரியாரும் என்னைப் போல மக்களை நேசித்த மதவாதி.