தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

புதன், 11 நவம்பர், 2009

வேட்டைக்காரன் திரை விமர்சனம்

நவம்பர் 12:

மச்சி டிசம்பர் 18 வேட்டைக்காரன் ரிலிசுன்னு சொன்னது தான். துள்ளிக் குதித்தான் என் நண்பன். நீ எப்பருந்துடா விஜய்க்கு ரசிகனானேன்னு நான் விசாரிச்சா.ரொம்ப எதிர் பார்த்த ஆதாவன் ஊத்திக்கிச்சு.இதையெல்லாம் பார்க்கிறத்துக்கு வடிவேலு படம், விவேக் படம் ஏதாவது வந்தா தேவலான்னு இருந்தேன்.விஜய் படமே வருதா எனக்கு சந்தோசம் தாங்கல.... அவன் பேசிக்கொண்டே போக நான் வியந்து போனேன்.

டிசம்பர் 18:

ஏதோ ஆளும்கட்சி பந்த் போல சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது. பாதி மக்கள் தியேட்டரில் கியூவில் நிற்க. மீதி பேர் வேட்டைக்காரன் படம் ஒரு அதிரடி ஆக்ஸன் படம் என பயந்து வீட்டில் பகுங்கியிருக்கிறார்கள்.( திரைக்கு வந்து சில நாட்களே ஆன சூப்பர் ஷிட் திரைப்படம் வேட்டைக்கான் இந்த ஞாயிற்றுக்கு கிழமை உங்கள் சன் டிவியில் என விளம்பரம் ஓடுகிறது கேட்கின்றதா?)

அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் உட்காருகிறோம். இளைய தளபதி வருங்கால முதல்வர் டாக்டர் விஜய் என பெயர் வந்ததும் எங்கும் சிரிப்பலை.ஒரு ரசிகன் வருங்கால அமெர்க்க ஜனாதிபதி விஜய் வாழ்கன்னு கோசம் போட அவனை எல்லோரும் கொலை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கிடையே அனுஸ்கா என்ற பெயரை பார்த்த்தும் விசில் தெறிக்கிறது.விஜய் வெளிநாட்டில் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டு இந்தியாவிற்கு சேவை செய்ய வருகிறார்.ஏர்ப் போட்டில் எதிர்பாரத விதமாக அனுஸ்கா மேல் மோதிவிட அவருடைய பொருட்களெல்லாம் சிதறி விடுகிறது.சிதறு தேங்காய் ஞாபகம் வர விஜயும் பொருக்குகிறார். விஜயை திருடன் என நினைத்து அனுஸ்கா தலையிலேயே அடித்துவிடுகிறார்.
உடனே “எம் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது” பாடல் ஆரம்பமாகிறது. அனுஸ்காவும் விஜயும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த விசயம் எப்படியோ அனுஸ்காவின் அண்ணன் பன்னி பெருமாளுக்கு தெரிந்து விடுகிறது.அவர் அடியாட்களை அனுப்பி விஜயை கொல்ல சொல்கிறார்.விஜயும்,அனுஸ்காவும் அப்போது டைட்டானிக் கப்பலில் இருக்கிறார்கள். அடியாட்களும் விஜயும் சண்டை போடும் போது கப்பல் இரண்டாக உடைந்து மூழ்க தொடங்குகிறது.விஜய் சற்றும் யோசிக்காமல் கடலில் குதித்து ஒரு கையில் கப்பலையும், இன்னொறு கையில் அனுஸ்காவையும் எடுத்துக் கொண்டு நீந்துகிறார். அப்போது ஒரு பாடல்
“ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே”.பாடல் முடியும் போது கரையில் அனுஸ்காவின் அண்ணன் நிற்கிறார் அவர் விஜயை பார்த்ததும் நீ இன்னும் உயிரோடவா இருக்கிற என ஆச்சிரியப்பட்டு கத்துகிறார்.

இடைவேளை :

விஜய் சின்ன பையனா இருக்கும் போது பன்னி பெருமாளோட ஒரு பன்னியால ஊரிலே பன்னி காய்ச்சல் வந்திடுது.அதுல விஜயோட குடும்பம் செத்து போயிடுது. உடனே விஜய் உலகத்தில்ல இருக்கிற எல்லா பன்னி சாகடிக்கரதுக்காக ஒரே ஜம்பில் கடலை தாண்டி வெளிநாட்டுல போயிடறாரு. எல்லா பன்னியும்
“நான் அடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்கமாட்ட
மோதிபாரு வீடு போய் சேரமாட்ட”ன்னு பாட்டுபாடி டான்ஸ் ஆடியே சாகடிக்குறாரு அதாவது வேட்டையாடுராரு.அதுல டாக்டர் பட்டம் வாங்கிட்டு இந்தியா வந்ததுக்கப்புரம் தான் முதல் பார்ட்டுல நடந்தது.

அனுஸ்காவோட அண்ணனுக்கும் விஜய்க்கும் சண்டை நடக்குது. அவனுக்கு துணையா பன்னிகளும் வந்து சேர அத தூரத்திலிருந்து பார்த்த விஜய் வெள்ளை புலின்னு நினைச்சு
“புலி உறும்முது புலி உறும்முது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரதபார்த்து”ன்னு விஜய் பாட்டு பாடி டான்ஸ் ஆடுராரு.அதைப் பார்த்துட்டு பன்னிக் கூட்த்தோட அனுஸ்கா அண்ணனும் செத்து போயிடறான்.

விஜயும் அனுஸ்காவும்
“கரிகாரன் காலப்போல கருத்திருக்கிறது குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மகால் நிழலு”ன்னு
டூயட் பாடிக்கிட்டு இருக்காங்க. சுபமுன்னு போடுவாங்கன்னு பார்த்தா, இவரு பாட்டுப்பாடி டான்ஸ் அடினதுள்ள ஆடு,மாடு கோழி எல்லாம் செத்துப்போச்சு.
“டேய் எல்.கே.ஜி பெயிலான்னவெல்லாம் டாக்டர் பட்டம் வாங்கின இப்படிதான்” என ஊரே துரத்த மருத்துவர் ராமதாசிடம் அரசியலில் சேர ஓடுகிறார் விஜய்.

வேட்டைக்காரனின் வேட்டை தொடரும்.

குறிப்பு:- :இந்த வேட்டைக்காரன் கதை விளையாட்டுக்கு தான், யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வேட்டைக்காரனின் பட்டையகிளப்பும் பாடல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Vijay’s latest film review, vettaikaran film review, Story of vettaikaran movie, anuiska, A.V.M in vettaikaran, SUN PICTURES in vettaikaran, Actor Vijay Joke, Vijay funny