மொழி வேறுபாடற்றது மதம்.ஆனால் மொழி இன்றியமையாதது.உலகின் தலைசிறந்த மதங்களின் புனித நூல்கள் தமிழில் இங்கு. எல்லா மதத்தினரும் மத பாகுபாட்டினை விட்டுவிட்டு அன்பு கூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.
விருப்பமில்லாமல் இந்த நூல்களை தரவிரக்கம் செய்ய வேண்டாம்.படிக்கும் எண்ணமிருப்பின் தடையேதுமில்லை.
கிறிஸ்துவர்களின் பைபில்
பைபில் கதைகள் பெரும்பாலும் நமக்கு நன்கு தெரிந்தவையே.டாவின்சி கூறிய குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற கூற்றிக்கு உலகமுழுவதும் எதிர்ப்பு கிளம்ப காரணம், இந்த நூலின் படி ஆதாமும் ஏவாலுமே முதல் மனிதர்கள் என மக்கள் ஏற்றுக் கொண்டது. இன்னொரு சுவாரசியம் அவர்கள் கடித்தது ஆப்பில் என இந்த புத்தகத்தில் குறிப்பிடவே இல்லையாம்.அதை மறுக்கப்பட்ட கனி எனவே கூறியிருக்கிறார்களாம்.இதை ஆனந்த விகடனில் மதன் அவர்கள் எழுதியிருந்தார்.
பைபில் தமிழ் புத்தகத்தினை இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்
முகமதியர்களின் குரான்
இந்த புனிதநூலை கடவுளே எழுதி பூமிக்கு அனுப்பியதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அதைத் தவிற வேறெந்த குறிப்பும் எனக்கு தெரியாது. இருப்பினும் முகமதிய நண்பர்கள் மற்றும் ஆர்வமுள்ளோர்க்காக.
குரான் தமிழ் புத்தகத்தினை இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்
நம்முடைய கீதை
பார்த்தனின் பயம் விலக கிருஷ்ணன் எடுத்துரைத்த உண்மைகளே இந்த கீதை.வேதங்கள்,புராணங்கள் மற்றும் இதிகாசங்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்து மதத்தின் முக்கிய நூலாக அங்கிகாரம் பெற்ற ஒப்பற்ற நூல்.
இந்த நூலுக்கு முன்பே சிவகீதை என்றொரு நூல் எழுதப்பட்டதாக வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.இருந்தாலும் வைணவர்களின் முக்கிய நூல் இந்த கீதை.
கீதை தமிழ் புத்தகத்தினை இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்
பெரியபுராணம்,சிவ புராணங்கள்,திருமந்திரம்,திருப்பதிகம்,திருவாசகம் என பல நூல்கள் மதுரைத் மின்தொகுப்பு திட்டத்தின் கீழ் மின்நூல்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த பெருநூல்களின் இலவச பதிவுகள் உங்களுக்காக விரைவில் இந்த வலைப்பூவில் வரும்.