தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
மென்நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மென்நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 நவம்பர், 2009

சுஜாதா மென்நூல்கள்

சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் திருவரங்கத்தில் பிறந்தவர்.பெரும்பாலான கதைகளில் அதன் தாக்கம் நிறைந்திருப்பதை காண முடியும். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எதுவுமே படிக்க படிக்க திகட்டாதவை.

சுஜாதாவின் அனைத்து படைப்புகளும் மென்நூல் வடிவில் கிடைப்பதில்லை. என்றாலும் இங்கு கொஞ்சம் மென்நூல்கள் இருக்கின்றன. தரவிரக்கம் செய்து படியுங்கள்.

ஆ நாவல் –

கணேஷ் வசந்த் நாவல்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ஆ. ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஆ என்ற சொல்லுடன் முடித்திருப்பார். நான் சில இடங்களில் அது திணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இருப்பினும் மிக அழகாக புதிய முறையை புகுத்தியமை வியப்பு தருவதாக இருந்தது.

இந்த நாவல் இந்து மதத்தின் பூர்வ ஜென்ம விசயங்களை சார்ந்தது. அதை மெய்யென சொல்லும் விதமாக எழுதப்பட்ட புனைவு கதை. தன் மனைவியை கொல்லும் ஒருவன், நான் அந்த கொலையை செய்யவில்லை என வாதிடுவதும், அந்த உண்மையை வக்கில் சரியாக வாதாடி நிறுபிப்பதும் கொஞ்சம் புதுமை. முக்கியமாக கட்டளை இடுவதாக ஒரு குரல் அவனுக்குள் ஒலிப்பது நமக்கு கூட சில சமயங்களில் இப்படி நடந்ததே என எண்ண வைக்கும். நாவல் படித்து பல மாதங்கள் ஆன பின்பும் கூட இன்னும் ஜெயலட்சுமி டீச்சர் மனதிலே இருக்கிறார். இது நாவலுக்கு கிடைத்திட்ட வெற்றி.

ஆ நாவல் தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

அனிதாவின் காதல்கள்

அனிதா மாதிரி ஒரு லூஸ் இருக்குமா என்று கதையை படிக்கும் போது தோன்றியது. இதில் அனிதா என்ற பிரமணப் பெண் எதையும் முடிவெடுக்காமல் இருக்கின்றாள். அவளுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானித்தாலும் கடைசியாக அவள் ஒரு முடிவெடுப்பதுதான் கதை. மிக பெரிய பணக்காரன் ஒருவன், சொந்தகாரன் ஒருவன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழன் ஒருவன், இப்படி வருவோர் போவோரெல்லாம் அனிதாவை காதல் செய்வதாக நாவல் போகின்றது. கோடிகளில் புரலும் கணவன் திடீரென நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் ஒரு தமிழ் பெண் என்ன செய்வாள். பெண் குடும்பம் அதை எப்படி பார்க்கும், ஆண் குடும்பம் எப்படி பார்க்கும் என சாதாரண சமூகத்தின் கதை இது.

எழுத்தாளர் சுஜாதா எழுதியதிலேயே சுமாரான நாவல் இதுவாகத்தான் இருக்கும். கணேஸ் வசந்தை இந்தக் கதையில் எதிர்பார்த்து நான் அடைந்த ஏமாற்றமாக கூட இருக்கலாம்.இருப்பினும் சேர் மார்கெட் போன்ற விளக்கங்களை கேட்கும் போது சுஜாதா அவர்களின் பல்துறை அறிவு வியப்பளிக்கிறது.

அனிதாவின் காதல்கள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

கற்றதும் பெற்றதும் -

ஆனந்த விகடனில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் தொகுப்பு. சுஜாதாவை வாரம் ஒரு முறை வீட்டிற்கு கூட்டிவந்த அற்புதமான தொடர். சுஜாதா சினிமா முதல் அரசியல் வரை அலசிய மேடை.

கற்றதும் பெற்றதும் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மெரினா நாவல் –

தீய நண்பர்களின் சகவாசமும் பணமும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதற்காக எழுதப்பட்ட நாவல். வழக்கமான முடிவை யூகம் செய்ய கூடிய நாம் கடைசியில் ஏற்படும் திருப்பத்தினை எண்ணி வியப்படைய வேண்டியிருக்கும்.

இது ஒரு கணேஷ் வசந்த் நாவல்.

மெரினா நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விக்ரம் நாவல் –
நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தின் மூலம் இந்த நாவல். இந்தக் கதை பலருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படம் வசுல் சாதனை புரியவில்லை என கமல் 50 ரசிகன் எக்ஸ்பிரசில் சொன்னார்கள்.

விக்ரம் நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்.

சுஜாதா சிறுகதைகள் -

சுஜாதாவின் குட்டி குட்டி சிறுகதைகளின் தொகுப்பு. யதார்த்ததோடு விஞ்ஞானமும் கூடி கலக்க கூடிய கதைகள். ஹிமோபிலியா நோய் முதல் திருபதி கோவிலின் தீர்க தரிசனம் முதல் சின்ன சின்னதாய் வியப்பு ஒவ்வொரு கதையிலும் இருக்கிறது.

சுஜாதா சிறுகதைகள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய Sujathavin Sirukathaigal.pdf

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Sujatha Aah..!, Sujatha Anithavin Kaathalgal,Tamil Novel, Sujatha Katrathum Petrathum, Sujatha-Eppadiyum Vaazalaam,Sujatha-Kadavul Irrukkiraram,Sujatha-Kanayaliyin Kadaisi Pakangal, Sujatha-Oru Vingyana PaarvailIrundhu,Sujatha-Vikram, Sujathavin Sirukathaigal ,Sujatha books in pdf format,Sujatha all book links,download Sujatha e book free,free download novels,shoetstory, free tamil novel,short story in PDF format

திங்கள், 16 நவம்பர், 2009

இலவச காமிக்ஸ் புத்தகங்கள்

மசாலா படம்




நகைச்சுவை படம்




கருத்துப்படம்



குழந்தை படம்



மசாலா படங்கள், நகைச்சுவை படங்கள், கருத்துப் படங்கள் என பல்வேறு படங்கள் இருந்தாலும் அந்தகாலம் முதல் இந்த காலம் வரை குழந்தைகள் படங்கள் என்றாலே எல்லோருக்கும் தனி ஆசைதான். ஆனால் குழந்தைகளுக்கு?. சந்தேகமே வேண்டாம் அவை காமிக்ஸ் புத்தகங்கள். இந்த இடுகை என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்காகவே.

புத்தக உலகின் ராஜ இந்த காமிக்ஸ் எனப்படும் படக்கதை புத்தகங்கள். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவை என்ன ஆனது என தெரியவில்லை. இப்போது இவற்றை தொகுத்து வழங்கும் பிரத்தியோக வலைப்பூக்கள் காணப்படுகின்றன.

வலைப்பூக்கள் என்றில்லை தின பத்திரிக்கைகளிலிலும் கார்டூன் படங்கள் வருகின்றன. நான்கே படங்களைப் போட்டு தினத்தந்தியை இன்று கின்னஸ்க்கு கூட்டிப்போகும் அளவிற்கு மாற்றியது கன்னித்தீவு படக்கதைதான். சிந்துபாத் கதையை பழைய தூர்தசனில் விடமல் பார்ப்பேன். ஆனால் கன்னி்த்தீவு முடியுமா என தலைமுறை. முடியவேண்டாம் என்றே மனம் விரும்புகிறது.

தலைமுறைகளை தாண்டி நிற்கும் ஹாலிவுட் படங்களான எஸ்.மேன், ஸ்பைடர் மேன், அயன் மேன், பேட் மேன் போன்றவை காமிக்ஸிலிருந்து திரைப்படமானவை. மார்வெல் நிறுவனமும் டிஸ்னி வேல்டும் உலக கதையில் முதலிடம் பிடித்து வெகு நாட்கள் ஆகின்றன. உயர்தரமான நாவல்களை கதையாக கொண்ட படங்களுக்கு மத்தியில் எந்த விதத்திலும் குறையாமல் பல மில்லியன் கணக்கில் பணத்தினை குவித்ததவை இந்த படங்கள்.

இங்கு மோகன்லால், மமுட்டி போன்ற கதாநாயகர்கள் நடிக்கும் படத்தை விட சேச்சி படம் வசூல் சாதனை செய்கின்றது.குழந்தைகளுகான படம் என்ற பெயரில் பெரியவர்களுக்கான படங்களை தான் எடுக்கின்றார்கள்.இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும்.குழந்தைகளுக்கென பிரத்யோக தொலைக்காட்சிகள் வந்துவிட்டன என்றாலும், சில கதைகள் காதலை மையம் கொண்டு குழந்தைகளை கெடுக்கின்றன.ஆனாலும் டோராவும், புஜ்ஜியும் அதையெல்லாம் தாண்டி வெற்றிபெற்றிருக்கின்றன.

ரோடு சைடு ரோமியோ என்ற புதிய படத்தின் புத்தகமும், வேதாளரின் திறமையை சொல்லும் புத்தகமும், 007 ஜேம்ஸ்பாண்டு துப்பரியும் இரண்டு புத்தகங்களும் கணினி மென்நூல்வடிவில் கிடைத்தன. ஏகப்பட்ட காமிஸ் புத்தகங்கள் இணையத்தில் இருந்தாலும் இந்த நான்கும் தமிழ் புத்தகம்.

பல வலைதளங்கள் காமிக்ஸ் கதைகளை படங்களாக தருகின்றன. யாரெனும் புத்தகங்களாக மாற்றி இதுபோல் இட்டால் நன்றாக இருக்கும்.வருமானம் வரும் போது என்னால் முடிந்ததை உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு செய்வேன்.இப்போது பொறுப்பை வேறு யாராவது ஏற்றுக் கொள்ள வேண்டும். இருப்பினும் மென்நூல் புதையல்களை நானும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.தேடுதல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.நான் படித்து ரசித்த அந்த புத்தகங்களின் முகவரிகள் உங்களுக்கு.பதிவிரக்கம் செய்து படியுங்கள்.




ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் கடல்கன்னி தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ரத்த காட்டேறி தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

வேதாளர் புகழ்சொல்லும் மந்திரக்கள்ளி மாயம் தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

குட்டிநாயின் சாகசங்கள் நாய் ரோட் சைட் ரோமியோ தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Greatest Ever Comics, comics book in pdf, Roadside Romeo Tamil Comics, Veethaalam-Mandhirak Kalli Maayam, Kadalkanni, and James Bond Raththak Kaatteri , famous tamil comics, picture story, free eBooks comics in Pdf format

சனி, 14 நவம்பர், 2009

சிறுவர் கதைகள்

என்னத்தான் வயதானாலும் கதைகள் படிப்பதில் ஆர்வம் குறைவதே இல்லை. சிறுவர் மலர் படிக்கும் எத்தனையோ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.சிறுவயதில் வெள்ளியன்று வரும் புத்தகத்தினை அடுத்த வெள்ளி வரை படித்த அனுபவம் கூட எனக்கிருக்கிறது.

கதை தாகம் அடங்காமல் இன்று ஜெயகாந்தன் முதல் ராமகிருஷ்ணன் வரை படித்தாயிற்று. சில சிறுகதைகளையும் படைத்தாயிற்று. தொடருகின்ற பயணத்தில் ஒரு சின்ன திருப்பம் இது.

6ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

7ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய. இங்கு சொடுக்குங்கள்.

8ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

9ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

10ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் பகுதி -1 தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் பகுதி – 2 தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

12ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Tamil short Story, Story books downloading, free e books, free tamil story e books, school books in tamil, Tirumurai 1, Tirumurai 2, Kathai Kovai, Araneri Kathaikal, Siruvar Kathaikal

கணினி மென்நூல் தமிழில்

எல்லா வீடுகளிலும் கணினி வந்தாச்சு.அடுத்த தேர்தலில் கலர் டிவி எங்களுக்கு வேண்டாம் கணினி கொடுங்கன்னு மக்கள் கேட்டாலும் ஆச்சிரியமில்லை.

எனக்கு கணினி தெரியுன்னு கம்பியூட்டர் இஞ்சினியர் சொன்னா, எனக்கும் அது தெரியுன்னு ஒரு வாண்டு சொல்லுது.அதள பாதாளத்துக்கு போயிட்ட கணினி மென்பொருள் துறை மேலே வருமுன்னு நம்பி படிச்சதையே படிச்சிக்கிட்டு கிடக்கிறோம் நாங்க.

இந்த புத்தகம் ஏதாச்சும் உங்களுக்கு உதவுச்சுன்னா, உங்க குலதெய்வத்துக்கிட்ட எனக்காக கொஞ்சம் வேண்டிக்கோங்களேன்.பிளீஸ்.

சி கணினி மொழி மென்நூல் (Introduction to C in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

சி++ கணினி மொழி மென்நூல் (C++ in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

பாக்கியநாதனின் எளிய தமிழில் ஜாவா கணினி மொழி மென்நூல் (Bakiyanathan-Eliya Tamilil Java.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

கணினி மென்நூல் (Introduction to Computer in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

விண்டோஸ் எஸ்.பி மற்றும் விண்டோஸ் எஸ்புரோலர் மென்நூல் (Introduction to Windows XP and Windows Explorer in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

பரிமலாவின் விண்டோஸ் எஸ்.பி மென்நூல் (J.Perumal Windows XP Guide in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.


அடோப் போட்டோ சாப் மென்நூல் (Adobe Photo Shop in Tamil.pdf ) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

இணையதள உருவாக்கம் எனப்படும் வெப் டிசைன் மென்நூல் (Introduction to Web Design in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

லினிக்ஸ் (Introduction to Linux in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
C in tamil book, C++ in tamil book, Java in tamil e book, tamil e books , downloading links for tamil software books, tamil Pdf books, free Pdf books in tamil, web design eBook in tamil, Linux eBook, windows xp eBooks, java guide, computer guide, free guides,

ஞாயிறு, 8 நவம்பர், 2009

விழி ஈர்ப்பு விசை இலவச மென்நூல்

தமிழ் படிப்பது இன்பம்

உருகி ஓடும் காதலுக்கு சொந்தக்காரன் யாரோ - ஆனால்
படிக்க துடிக்கும் பாமரனுக்கு சொந்தக்காரன் நானே
-ந.ஜெகதீஸ்வரன்.


நான் படித்து கொண்டாடிய புத்தகங்கள் இவை. ஈ புக் எனப்படும் மென்நூல் வடிவில் யாரோ ஒரு நல்லவர் இணையத்தில் உலவவிட்டிருக்கிறார். தரவிரக்கம் செய்து படியுங்கள்.

விழி ஈர்ப்பு விசை - தபூ சங்கர்

கவிஞர் தபூ சங்கரின் காதல் கவிதைகள் அடங்கிய அழகிய தொகுப்பு.

விழி ஈர்ப்பு விசை - தபூ சங்கர் புத்தகத்தினை இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Tabu sanker e Book free downloading, free cost tamil e books, downloading link for tamil kavethi book

சொல்வதெல்லாம் உண்மை இலவச மென்நூல்

சொல்வதெல்லாம் உண்மை – நடிகர் பிரகாஷ்ராஜ்

நான் அதிகம் சுய சரிதைகளை வரும்பி படிக்கும் பழக்கம் உடையவன். உண்மை என்றவுடனே ஞாபகத்திற்கு வந்து நிற்கும் காந்தியடிகளின் சுயசரிதையை எண்ணற்ற முறை வாசித்திருக்கிறேன்.

காந்தியடிகள் போல உண்மையான சுயசரிதையை யாரும் எழுதமுடியாது என்று எண்ணினேன். ஆனால் பிரகாஷ் ராஜ் அதை உடைத்துவிட்டார். பல மொழிகளில் பேசி நடிக்கும் வித்தகனுக்கு பின்னால் உள்ள துயரங்களை விட சுவாரசியமும் அழகிய குடும்பமும் இருக்கிறது என நினைக்க தூண்டிய புத்தகம்.

எல்லோருக்கும் அனுபவங்கள் கிடைப்பதில்லை, அனுபவங்கள் சீப்பு போல அது கிடைக்கும் போது நம்மில் பெரும்பாலோனோர்க்கு முடியே இருப்பதில்லையென எஸ்.ராமகிருஷ்ணன் அழகாக சொல்லியிருப்பார் . அந்த அனுபவத்தினைப் பெற தரவிரக்கம் செய்து படித்திடுங்கள்.

நிறைய காதல்கள் திருமணம் முடிந்த்தும் முடிந்து விடுகின்றன.அதற்கு காரணம் காதலன் கணவனாயிடரான்.காதலி மனைவியாயிடரா.
- நடிகர் பிரகாஷ்ராஜ்

சொல்வதெல்லாம் உண்மை – நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தகத்தினை இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Prakashraj solvathalam unmmai e Book free downloading, free cost Tamil e books, downloading link for Tamil life history book

செவ்வாய், 3 நவம்பர், 2009

மென்நூல்





மென்புத்தகங்களின் சிறப்பு

1)இரவல் கொடுத்தால் திருப்ப கிடைக்குமா என்ற அச்சம் தேவையில்லை.

2)வைத்த இடம் மறந்து போகும் தொல்லையில்லை.

30காசு கொடுத்து வாங்கினாலும் மற்றவர்களுக்கு இலவசமாக தந்துவிடலாம்,அதிலொன்றும் குறையப்போவதில்லை.

4)இன்னும் பல இருக்கின்றன, அவை வரும் பதிவுகளில்....

இணையத்தில் காணக்கிடைக்கும் மென் நூல்களின் சில தொகுப்புகள் இங்கே.முகவரியை பயன்படுத்தி நீங்கள் இம்மென்நூல்களை இறக்கம் செய்து கொள்ளலாம். இப்புத்தகங்களை படிக்க அடோபி அக்ரோபாட் ரீடர் போன்ற pdf reader ஒன்று தேவைப்படும்.

தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.மேலும் பல நூல்கள் இந்த வரிசையில் வந்து சேரும்.

FAMOUS BEST NOVELEST AND A GREAT TOP BESTSELER JEFFREY ARCHER E-BOOK IN PDF FORMAT
Honour Among Thieves – BY Jeffrey archer
Download
http://rapidshare.com/files/38039670/Jeffrey_Archer_1.rar
A Prison Diary – Purgatory - BY Jeffrey archer
Download
http://rapidshare.com/files/38040026/Jeffrey_Archer_2.rar
Twelve Red Herrings - BY Jeffrey archer
Download
http://rapidshare.com/files/38040947/Jeffrey_Archer_3.rar
if you want jeffrey archer book A Twist in the tale in a pdf format, kindly send email to me.