தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
முஸ்லிம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 மார்ச், 2010

இஸ்லாம் இறை தூதர் கார்டூன் படங்கள்










இஸ்லாம் கடவுள் படமும் வரலாறும்










டென்மார்க்கில் வெளியான முகமது நபி கார்டூன்கள்













ஒன்றை செய்யக் கூடாது எனும் போது தான் அதை செய்ய வேண்டும் என்ற ஆவல் மக்களுக்கு வருகிறது. உலகமுழுவதும் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளுக்கு உருவம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டாலும், மற்றவர்கள் அதை பொருட்படுதத்வில்லை.

முகமது நபி தூதுவர் என்றாலும், அவரு்ம் கடவுளுக்கு நிகராக பார்க்கப் படுகின்றார். அந்த முகமது நபியின் சில கார்டூன்களை டென்மார்க் பத்திரிக்கையொன்று வெளியிட்டது. அந்தப் படங்கள்.

சனி, 14 நவம்பர், 2009

அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியரே இல்லை

என்ன அதிர்ச்சியாய் இருக்கின்றதா.உண்மையில் பல தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியாகதான் இருக்கும்.இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த ஒரு தலைசிறந்த விஞ்ஞானியை மதம் என்ற ஒற்றை சொல்கொண்டு சிலர் தவறாகவே சொல்கின்றார்கள். காரணம் கலாம் இந்து மதங்களிலிருந்தும் நல்லதை எடுத்து சொல்கின்றார்.

வரலாறுகளில் அக்பர் என்ற அரசர் இந்துகளையும், கிறிஸ்துவர்களையும் ஆதரத்ததால் அவரை பல முகமதியர்கள் முஸ்லிமே இல்லை என கூறுவது பலருக்கு தெரிந்திருக்கலாம்.(வரலாறு தெரியாவிட்டாலும், ஜோத அக்பர் படம் பார்த்தவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.)ஆனால் 21ம் நூற்றாண்டிலும் அப்படிபட்ட ஆட்கள் இருக்கதான் செய்கின்றார்கள். நாம் ஔரங்கசிபை எடுத்துக் கொண்டால் அவர் முழு முகமதியன் கிடையாது.ஏனென்றால் அவருடைய தாய் ஒரு இந்து.அவருடைய மனைவியிலும் ஒரு இந்துப்பெண் இருந்ததாக குறிப்பிடுகின்றார்கள்.ஆனால் அவர் தன்னை முகமதியனாக கருதி புனித நூலான குரானை படித்ததன் மூலமே கொடூர எண்ணங்களை விட்டொழித்தார்,என்கின்றது வரலாறு.(இந்துக் கோயில்களை அழித்தும்,இந்துக்ள் மீது அதிக வரி செலுத்தியும்,சொந்த சகோதரர்களை கொண்றும் கொடுமை புரிந்தது உங்களுக்கு நிச்சியம் தெரிந்திருக்கும்).

தீர்க்கமாக பார்க்கப் போனால் இந்தியாவிலிருக்கும் யாரையுமே முஸ்லிம் என சில இயக்கங்கள் சொல்வதேயில்லை.(பாக்கிஸ்தானில் இருப்பவர்களை கொன்று குவிக்கும் தீவிரவாத இயக்கங்கள் அவர்களையும் இஸ்லாமியர்கள் இல்லை என்பது வேறு விசயம்.)காஷ்மிரில் நடக்கும் பல கொலைகளில் முஸ்லிம் மக்களும் செத்துதான் போகின்றார்கள்.(இவர்களை இந்தியர்கள் என்றே தீவிரவாத இயக்கங்கள் சொல்லுகின்றன).இவர்கள் இந்துக்களிலிருந்து(அல்லது வேறு மதங்களிலிருந்து) மதம் மாறியவர்கள், அல்லது மதம் மாறிய பெண்ணிலிருந்து (அல்லது ஆணின் மூலம்) பிறந்தவர்கள் என்றெல்லாம் கூறுகின்றனர் சிலர். ஒரு மதம் தோன்றிய இடங்களில் வேண்டுமானால் பரம்பரை மதவாதிகள் இருக்கலாம்.மற்ற இடங்களில் இருப்பவர்கள் வழி தோன்றல்களாக இருக்க வாய்ப்பே இல்லை.தூய்மையான முகமதியர்களின் ரத்தம் எனக்குள் ஓடுகின்றது என்று இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீமும் சொல்வது கேள்விக்குறியதே என்ற விவாதமும் இருக்கிறது.

சரி கலாமை முஸ்லிமல்ல என சில முஸ்லிம்கள் சொல்வதைப் போலவே வேற்றுமதத்தினர், பத்திரிக்கையாளர்கள் கூறுவதையும், எழுதுவதையும் கண்டிருக்கிறேன். ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஞாநி ஒரு உதாரணம். கலாமை அய்யராகவே ஆக்கிவிட்டார் அவர்.(கலாம் அய்யர் என்று தான் குறிப்பிடுவார்.04.11.2009 குமுதம் வாரஇதழிலின் 77ம் பக்கம் பார்க்க).உண்மையில் கலாம் இந்துக்களை மட்டும் ஆதரிக்கவில்லை.எல்லா மதங்களிலும் உள்ள தலைசிறந்தவர்களையும் ஆதரிக்கிறார். இந்த வார புதிய தமிழகம் இதழில் இளைய இந்தியா 2020 என்ற கட்டூரையில் அவர் குறிப்பிட்டு பேசியது சகோதரி அன்டோனியா என்கிற கிறிஸ்துவ பெண்மணியை.இஸ்லாமிய நண்பன் ஒருவன் கலாமை ஏற்றுக் கொள்ளாததற்கு சொன்ன காரணம் அவர் திருமணம் செய்து கொள்ளாததுதான்.உண்டு,உறங்கி தன்னுடைய சந்ததியை பெருக்குவது என்பது எல்லா உயிர்களும் செய்யும் வேலை.அந்த கடமையை செய்யாமல் இந்த மனிதர் இருக்கின்றார் என்பது அவனுடைய விவாதம். (இந்து மதத்தில் இல்லறவாழ்க்கையை துறந்து மக்களுக்காக சேவை செய்த விவேகநந்தர்,வாஜ்பாயி போன்றோரை கடவுளாகவே போற்றுவது உண்டு.)

உண்மையில் இஸ்லாம் என்னதான் சொல்கிறது.தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் மக்களை கொன்று குவிக்கின்ற மிருகங்கள் தான் உண்மையான இஸ்லாமியர்களா.கண்டிப்பாக இல்லை எனவும் அப்படி மற்றவர்களை அழிக்கக் கூடிய பணியை செய்யும் நபர்கள் அல்லாவின் விரோதிகள் என்று இங்குள்ள இஸ்லாமிய தலைவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு இஸ்லாமின் நெரிகளையும்,புனித குரானில் தீவிரவாத்திற்கு இடமே இல்லை என்பதனையும் தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனால் ஊடகங்கள் மக்களை ஆட்கொள்ள ஆரமித்து பல வருடங்கள் ஆகிறது.ஒரு நல்ல தொலைக்காட்சி ஒன்றை அமைத்து தங்களுடைய நியாயமான அனுகுமுறைகளை இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும்.(இந்துக்களுக்கென ஒரு தனி தொலைக்காட்சியும், பத்திரிக்கையும் வேண்டும்.) எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என நான் சொன்னால் எனக்கெதிராய் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே என்று குரல் வருகிறது.இதை மறுக்கும் சிலர், ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, ராம்சேனா போன்ற இந்து இயக்கங்களையும் அவர்களில் சிலர் தீவிரவாத இயக்கங்கள் என்கின்றனர்.இந்த இயக்கங்கள் எங்கெல்லாம் பாசரை வைத்து எத்தனை இரட்டை கோபுரங்களை தகர்த்தது என கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை.சேவா சங்கங்களையும் இதி்ல் இணைத்தது இன்னும் பெரிய கொடுமை.

எது எப்படியோ ஒரு நல்ல மனிதன் அவனுடைய உண்மையான செயல்களுக்காக ஒரு சாராரின் எதிர்ப்புக்கு ஆளாவது வேதனைக்குறியதே. கவிஞர் அப்துல் ரகுமான் இது சிறகுகளின் நேரம் புத்தகம் முழுவதும் மத நல்லினக்கத்தினை சொல்லியிருப்பார்.அதையும் மற்றவர்களும் படித்தால் நன்றாக இருக்கும் நாடு.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
A.P.J Abdul Kalam, Kalam, India president Kalam, Kalam is not a Muslim, puthiyathalaimurai