அன்புள்ளம் கொண்ட மகா பெரியோர்களே,
நான் ஜெகதீஸ்வரன் .என் பெயரை சொன்னவுடன் உங்களுக்கு தெரிகின்ற முதல் செய்தி. நான் ஒரு இந்து மதம் சார்ந்தவன் என்பதே. அது என்னுடைய அடையாளம். அதனை மாற்றவே முடியாது.
எனக்கு பிடித்தவை, எனக்கு பிடிக்காதவை என்பதெல்லாம் வரும் நாட்களில் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரியும்.நான் சிவனுடைய பரம பக்தன்.இந்த வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையிலும் அன்பு நிறைந்திருக்கும் என நம்புகிறேன். அன்புதான் சிவம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஏசு சொன்னதை. முதல் நாகரீகம் தோன்றிய போதே எடுத்து சொன்ன மதம் சைவம்.
மதங்களில் கடைக்குட்டிகள் இரண்டும் பெரிய வளர்ச்சி பெற்று துள்ளிக் கொண்டிருக்க. உலகின் முதல் மதமான இந்து மதம் அமைதியாக புன்னகை பூத்துக் கொண்டிருக்கிறது.அது தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மருத்துவம், ஜோதிடம், வான சாஸ்திரம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களில் ஜொலிக்கும் இந்து மதம், இன்றும் மக்களுக்கு தேவையான யோகா,தியாணம் போன்றவற்றினை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது.
ஆயிரம் ஆயிரம் மதங்கள் தோன்றி மடியலாம்.ஆனால் இயற்கையையே கடவுளாக வழிபடும் இந்து மதம் நிலைத்து நிற்கும். இந்த வலைப்பூவில் நம்முடைய இந்து மதத்திற்காக சில இடுகைகள் இடம் பெறும்.மற்ற இடுகைகள் நகைச்சுவை,அனுபவம்,கதை,ரசித்தவை என்று சுவாரசியமானதாக இருக்கும்.
எல்லாம் சிவன் செயல் என்பது என்னுடைய மாறாத கருத்து.அவனன்றி அசையாது ஒரு அணுவும் என்பதால், அவனுடைய பெயரை சொல்லி நான் இன்று முதல் பறக்க இருக்கிறேன் பட்டாம்பூச்சியாக.
ஏன் இந்த பூவிற்கு பட்டாம்பூச்சி என பெயரிட்டேன் என சொல்லிதான் ஆக வேண்டும்.பூக்களில் தேன் குடிக்கும் வண்டு முதல் சிட்டுவரை பல உயிரினங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்றாலும் தன்னுடைய மெல்லிய சிறகில் வகைவகையான ஓவியங்களோடு பயணப்படும் ஒரு பட்டாம்பூச்சிக்கு எதுவும் ஈடில்லை.
புழுவாக தோன்றினாலும் முயற்சியால் அழகான பட்டாம்பூச்சியாய் மாறி விடுகின்ற வித்தை எனக்குள் தூண்டிய எண்ணங்கள் தான் இ்ந்த வலைப்பூ முழுவதும் காணப்போகின்றீர்கள்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
இங்கிருந்தே வேலையை தொடங்குவோம்.
மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையாலல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள் வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது! மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது…..
ஒரு பெண்ணும் ஆணும் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ, காவியமாகவோ ஆகலாம்…. திருமணத்தின் போது அக்கினி வளர்க்கிறார்களே, ஏன்? அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினியே அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான். அதனால்தான் கற்பு நிறைந்த பெண்ணை ‘கற்புக்கனல்’ என்கிறார்கள்….
பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ’காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ வேண்டும். இந்தக் காப்புகளுக்காகவே கையில் ’காப்பு’ அணியப்படுகிறது. ‘அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் ’காப்பு’க் கட்டப்படுகிறது…. பெண்ணைத் தெய்வமாக்கி, கணவனை பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஷமாக்க, இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.
– கவிஞர் கண்ணதாசன் - “அர்த்தமுள்ள இந்து மதம்” முதல் பகுதி.
சம்போ சிவ சம்போ
ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Pattampoochi website, butterfly website, Jagadeeswaran’s blog, Jagadeeswaran’s website, Jagadeeswaran’s Sites, Pattampoochi Hindu website, Sivam website, village guy website, tamil best website for Hindu religion, god Sivan, god Siva, Eeswar website