தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

திருபிரமபுரீஸ்வரர் ஆலயம்

என்னுடைய முதல் இடுகையே ஒரு ஆலயத்தின் சிறப்பை கூறுவதாக அமைவது மகிழ்ச்சியளிக்கின்றது.நான் பார்த்து வியந்த பெருமைகள் மிக்க ஆலத்தைப் பற்றிய பகிர்வுகள் இதோ.திருபிரமபுரீஸ்வரர் ஆலயம் பற்றி கூறுவதானால் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மாவின் ஆலயம் என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே தரிசனம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.அற்புதமான சிலைகள்,வேறெங்கும் காண முடியாத தொன்மைமிக்க கலை என ஏகப்பட்ட பெருமைகள் உள்ள தளத்தை பற்றி வெளியிடுவதையே பெரும் பேராக நினைக்கின்றேன்.பகலில் கூட இரவு போல் குளுமையாக இருக்கின்றது தளம்.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.

சிறப்பு-

பிரமன் தனியாக வீற்றிருக்கிறார்.
பிரமனால் வழிபடப்பட்ட 12 சிவலிங்கங்கள் அதன் தொன்மை மாறாமல் இருக்கின்றன.
நான்கு வழிகள் கொண்ட குலம் இருக்கின்றது.
முழுக்க முழுக்க ருத்திராட்சதினால் வேயப்பட்ட கூறை நந்திக்கு இருக்கின்றது.
நூற்றாண்டுகளை கடந்த கோவிலும்,அலங்காரம் இல்லாமல் ஒரு பெரிய நந்தி இருக்கின்றது.
சிவன் கோயிலுக்குள் தச அவதார சிற்பங்கள் இருக்கின்றன.
தட்டினால் ஓசையெழுப்பும் தூண்கள் இருக்கின்றன.
அற்புதமான பாதால லிங்கம் இருக்கின்றது.
மனித முகம் கொண்ட நந்தியும் அதன் துனைவியாரும் இருக்கின்றன.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பூசாஞ்சலி முனிவர் காட்சிதருகின்றார்.

தளவரலாறு-

தொடக்கத்தில் அனைத்துமான ஈஸ்வரனுக்கும் படைக்கும் பிரமாவுக்கும் ஐந்து தலைகள்.அதனால் தனக்கும் ஈஸ்வரனுக்கும் சமமான சக்தியென ஆனவம் கொண்டார்.பிரம்மாவின் ஆனவத்தினால் படைக்கும் தொழில் பாதிப்படைந்த்து.முப்பத்து முக்கோடி தேவர்களும், கிங்கினர்கள், பூதங்கள், தேவதைகள் என அனைவரும் ஈசனிடம் முறையிட,அவர்களின் வேண்டுகோளுக்காக ஈசன் பிரமனின் ஒரு தலையை கொய்துவிட்டார்.அத்துடன் படைக்கும் தொழிலையும் நிறுத்தி வைக்க ஆனையிட்டார்.கோபம் கொண்ட ஈசனை குளிர்விக்க பிரமதேவன் சிவலிங்கத்தை வழிபட்ட இடம் இந்த திருபட்டூர்.

புலிகால் முனிவர்-

ஈசனிடம் பெரும் பக்தி கொண்ட முனிவர் தான் தினமும் மரத்தில் ஏறி பழம் பூ பரித்து பூஜை செய்ய ஏதுவாக தன்னுடைய கால்களை புலிக்காலாக மாற்றும் படி ஈசனிடம் வேண்டி தவம் செய்தார்.அந்த தவத்தில் மகிழ்ந்த ஈசன் அவ்வன்னமே அருளினார்.முனிவரும் தன்னுடைய புலிகால்களைக் கொண்டு ஈசனுக்கு பழம் பூ பரித்து பூஜை செய்துவந்தார்.அந்த இடமும் திருபட்டூர்தான்.அவருடைய சமாதி அருகிலேயே அமைந்துள்ளது மேலும் சிறப்பு.

செல்லும் வழி-

திருச்சியிலிருந்து சமயபுரம் தாண்டி பாதையில் சென்றால் சிருகனூர் என்னும் கிராமம் உள்ளது.அதிலிருந்து சற்று தூரம் தள்ளி திருபட்டூர் அமைதியாக வீரு கொண்டு இருக்கின்றது.மனச்சனல்லூரிலிருந்து எதுமலை செல்லும் வழியிலும் திருப்பட்டூர் செல்ல பாதை உள்ளது. திருபட்டூருக்கென தனிப் பேருந்து வசதியும் உள்ளது.

முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.