மீண்டும் மீண்டும்
“ஆ....அம்மா”
அவன் மீது பைக் விழுந்து கிடந்தது.இடதுகை எலும்பு முறிந்து ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.ரத்த போக்கு அதிகம் என்பதால் மெல்ல அவன் சுயநினைவுகளை இழந்து கொண்டிருந்தான்.அவனுக்கு அதிகபட்சம் இருபது வயதிருக்கலாம்.போட்டிருந்த தங்க பிரேஸ்லெட்டும் கழுத்து ஒட்டிய மைனர் செயினும் அவனை நடுத்தரக் குடும்பத்திற்கும் மேலே என காட்டியது.
அலரல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டின் வேலைக்காரன் ஓடி வந்தான்.
“இந்த காலத்து பையன்களுக்கு பைக் ஓட்டினா கண்ணு மண்ணு தெரியரதேயில்ல”, அந்த நிலையிலும் இளைஞனை திட்டிக் கொண்டே உதவிக்கு சிலரை அழைத்தான்.ஆட்டோ மூலம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அவனுக்கு நினைவு திரும்பியதும் அவனுடைய வீட்டிற்கும் தகவல் அனுப்ப பட்டது.
மூன்று மாதங்கள் கழித்து...
“பைக் எடுத்துக் கிட்டு போரதா இருந்தா கவணமா போ. முன்னாடி நடந்த சம்பவத்த நினைவுல வைச்சுக்கோ”, அப்பாவின் அட்வைஸ் மழையில் அவன் நனைந்து கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டாள்.
“பையன் பிழைச்சு வந்ததே பெருமால் புண்ணியமுன்னு, நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கிட்டு இருக்கேன்.நீங்க என்னாடானா அவனை எப்ப்பார்த்தாலும் கரிச்சு கொட்டிக் கிட்டு இருக்கீங்க.”
“பையன் புது பைக் ஓட்டரத பார்த்து யார் யாரெல்லாம் பொறாமை பட்டாங்களோ, நீ இப்படி திரும்புடா” கையிலிருந்ததினை கொண்டு அவனுக்கு திருஷ்டி சுற்றினாள்.
“அம்மா, என்னாம்மா இதெல்லாம், இப்ப எதுக்கு தேவையில்லாம“
“அவ சொன்னா கேட்கமாட்டா டா”
“பொறுப்புள்ள அப்பா மாதிரி என்னைக்காவுது பேசறிங்களா”, அம்மா சலித்துக் கொண்டாள். அப்பா அவரின் அறைக்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் அந்த பெரிய வீட்டின் வாசல் முன்பு பூசணிக்காய் சிதறிக்கிடந்தது.
(கதையை முதலிலிருந்து படிக்கவும்).
சிறுகதை