தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

வெளிச்சத்திற்கு வரும் கருணாநிதியின் மூடநம்பிக்கைகள்.

உலகம் முழுதும் தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லி திரியும் கூட்டத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள் மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாய் இருப்பதை உலகிற்கு எடுத்து சொல்வதே இக் கட்டுரை.

தினம் நடக்கும் பூஜை –


ஒன்றும் அறியாத தொண்டர்களை மடையர்களாக மாற்றி விட்டு அவர்கள் தலைவர் கருணாநிதி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். அதுவும் எப்படி இந்து மதத்தின் எல்லா பலன்களையும் அனுபவித்துக் கொண்டு. தினம் தினம் அவர் வீட்டில் பூஜை நடக்கிறது. பகவானுக்கு தினம் பஜனை நடக்கிறது. என்னவென்று கேட்டால் எல்லாம் தலைவரின் மனைவி செய்கின்றார், அதில் தலைவருக்கு பங்கில்லை. அதெப்படி குடும்ப தலைவரின் பங்கில்லாமல் பூஜை செய்ய முடியும், யாகம் செய்ய முடியும். புரோகிதர்கள் அதற்கு சம்மதம் தர மாட்டார்கள்.




என்பதாம் திருமணம் கருணாநிதியின் ஊரான திருவாருர் தியாகராஜர் சந்ததியில் ரகசியமாக நடந்ததாக சில நாளேடுகள் சொன்னன. தகுந்த ஆதாரம் இல்லாத்தால் அவற்றை விட்டுவிட வேண்டிதுதான். ஆனால் நெருப்பின்றி புகையாது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் பூஜை செய்து கடவுள் அருளை பெறலாம். தினம் கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழ் நாட்டின் ஏழை பாமரன் மட்டும் பூஜை செய்ய கூடாது. இதாவது பரவாயில்லை. இந்து மதத்தின் விழாக்களை பொய் என்றும் அவற்றை கொண்டாட கூடாதென்றும் அறிக்கை விட்டுவிட்டு குடும்பத்துடன் இவர்கள் கொண்டாடியிருக்கின்றார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி கொண்டாடிய கருணாநிதி குடும்பம் -


விஜய் தொலைக்காட்சியில் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி தீபாவளியின் போது ஆதவன் படம் பற்றி பேச சூரியாவுடன் காப் வித் அனுவில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது தீபாவளி என்றால் மாறன் மாமா குடும்பம், மற்றும் எல்லா சொந்தங்களும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்போது 5000 வாலா, 10000 வாலா போன்ற பெரிய பெரிய பட்டாசுகளையெல்லாம் மாமா, அப்பா போன்ற பெரியவர்கள் வைப்பார்கள், நான் குஜிலி பட்டாசு வைப்பேன் என்று சொன்னார்.

நரகாசுரன் செத்து போனதை நாத்திகர்களின் தலைவன் குடும்பம் கொண்டாடலாம். அதுவும் மாறன் போன்ற தி.மு.க பெரியவர்கள் குடும்பத்துடன். ஆனால் பாவப்பட்ட ஏழை தொண்டனின் குடும்பமும், குழந்தையும் கொண்டாட கூடாது. அடடா என்ன ஒரு தீர்ப்பு. என்ன ஒரு தீர்மானம். பல வருடங்களாக குடும்பமே சேர்ந்து தீபாவளியின் போது ஆயிரமாயிரம் வாலாக்கலாக கும்மி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி எதுவும் நடக்காதது போல நரகாசுரனைப் பற்றியும் , பகவான் கிருஷ்ணனைப் பற்றியும் குறை பேசி அறிக்கை விட்டுவிட்டு பட்டாசு கொலுத்த போய் விடுகிறார். அதெல்லாம் தெரியாமல் பாவப்பட்ட நாத்திகன் தன் குழந்தையை தெருவில் வேடிக்கை பார்த்து வைக்கின்றான்.

உலகிற்கே தெரிந்த பக்தி –




கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் இந்து சாமியார் சத்திய சாய் பாபாவை வீட்டிற்கே அழைத்துவந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். அதுவும் யார் முன்னிலையில் பகுத்தறிவு பகலவன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் முன்னிலையில். உண்மையான நாத்திகவாதியென்றால் அப்படி செய்ய விட்டிருப்பாரா. கருணாநிதியின் மனைவி மட்டுமல்ல உடன் இருந்த தயாநிதி மாறன் உட்பட எல்லோரும் மோதிரமும் செயினும் வாங்கிக் கொண்டார்கள். இந்துகளில் சிலரே நம்பாத சாமியாரான சத்திய சாய் பாபாவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரிடம் மோதிரமும் செயினும் வாங்கியதை மேடையில் பரவசமாய் பேசிவிட்டு இவர்களால் எப்படி மீண்டும் பெரியாரை பற்றி பேச முடிகிறது. தமிழக மக்களை முட்டாள்கள் என்றல்லவா இந்த கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. சிந்திப்பார்களா நம் மக்கள்.

மஞ்சள் துண்டு –


இதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்த எல்லா மனிதர்களுக்கும் அவரின் மீது அமர்ந்திருக்கும் மஞ்சள் துண்டைப் பற்றி தெரியும். தொடக்க காலத்தில் திமுகாவினரின் தெருகூட்டும் துண்டுகளை தான் கருணாநிதியும் அணிந்திருந்தார். பதவி ஆசையும், அதை தக்க வைக்கவும் பிரபல சோதிடர் அணிய சொன்னது தான் அந்த மஞ்சள் துண்டு என்றும் அதனால் தான் தலைவர் அதை விடாமல் அணிந்து கொண்டிருக்கின்றார் என்கின்றார்கள். எப்படி பட்ட மூட நம்பிக்கை பாருங்கள். அவரிடம் சென்று கேட்டால் மஞ்சள் துண்டை அணிவதால் ஏற்படும் நன்மைகளை அவர் பட்டியல் இடக்கூடும். நாத்திகர்கள் யாராவது அந்த செயலை எனக்காக செய்து வரவும். எங்கள் ஊர் சோதிடர்கள் இதை சொல்லிதான் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் அந்த பட்டியலை கொடுத்தால் அவர்கள் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள். ஒரு பொருளுக்கு எவ்வாறு நிறம் வருகின்றது என்பது அறிவியலில் இயற்பியல் பாடம் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த மஞ்சள் துண்டின் மகிமையை எவ்வாறு சொல்ல.



பவள மோதிரம் –


கருணாநிதியின் மிக அருகே இருக்கும் சிலருக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இந்த பவள மோதிரம். ஏனென்றால் தூரத்திலிருக்கும் மக்களின் கண்களுக்கு இது தெரிவதில்லை. மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக திகழும் கருணாநிதி கற்களின் மூலமாக வாழ்க்கையில் முன்னேரலாம் என்று நம்புகிறார். சாதாரண மக்களின் சின்ன சின்ன நம்பிக்கைகளை கேலி செய்யும் கூட்டத்தின் தலைவர் மூடநம்பிக்கைகளால் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்வாரா. சிரிப்பொலி தொலைக்காட்சியில் தினம் தினம் விவேக்கின் நகைச்சுவையை பார்த்து சிரிப்பவர்கள் இதையும் பார்த்து சிரியுங்கள்.

சல்லடை ஒன்று ஊசியைப் பார்த்து உனக்கும் ஒரு ஓட்டை என்றதாம் அது போல மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கும் நாத்திக கூட்டம் இதையும் கவணிக்கட்டும். தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டு இந்து மதத்தின் மூடநம்பிக்கை வரை எல்லாவற்றையும் கடைபிடிக்கும் கலைஞரை ஓர் நாத்திகன் என்று இனியும் யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்து இப்படி கூறுங்கள்..... முட்டாள்கள்.

உண்மையான நாத்திகம் எது என்பதை நாத்திக மக்கள் மறந்துவிட்டார்கள். பெரியார் சொன்ன அளவு கூட நாத்திகம் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. கடவுள் மறுப்பு கொள்கையை முன் வைக்கில் இந்து மதம் தவிற மற்ற மதங்களைப் பற்றி பேச பயந்து ஓடிவிடுகின்றார்கள். பதவிக்காகவும், மறைமுக அரசியல் செல்வாக்கிற்காகவும் நாடகம் நடத்துகின்றார்கள். இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும் நாத்திக தலைவரென ஊரை ஏமாற்றும் கருணாநிதியின் சுயரூபத்தினை காட்டவே இங்கு எழுதினேன்.




நாத்திகத்தினை பக்குவமில்லாத பெரும்பாலும் இளைஞர்கள் தான் கடைபிடிக்கின்றனர். பக்குவம் வந்ததும் ராமா, கிருஷ்ணா, ஏசு, அல்லா என சொல்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரசியல் சாராத துறையிலிருக்கும் நாத்திக மனிதர்களும் ஆன்மீகத்தை விட்டு விலக மறுக்கின்றார்கள் என்பது கண்கூடான உண்மை.