தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

உலகை ஏமாற்றும் நாத்திகவாதிகள்

பகுத்தறிவாதிகள் என்று ஊரை ஏமாற்றுகிறு ஒரு கூட்டம். பகுத்தறிவு என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மற்றவர்களுக்கு பகுத்தறிவே வேலை செய்வதில்லை என வாதம் செய்கின்றார்கள். பெரியார் இந்து மதத்தை அழித்துவிட்டு இஸ்லாமியர்கள் ஆகி விடுங்கள் என சொன்னதாக செய்தியை பரப்பி கொண்டிருக்கின்றார்கள். கடவுளை எதிர்ப்பவர்களுக்கு அல்லா கடவுளாக தெரிவதில்லையா. இல்லை அவரை கடவுளுலாக இவர்கள் மதிக்கவில்லையா என தெரியவில்லை.

பெண் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, மது, கள் ஒழிப்பு என அவருடைய மற்ற கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு இந்த ஒரே ஒரு கொள்கையை மட்டும் ஏற்று நடக்க என்ன காரணம். எல்லாம் பணம். முகமதியர்களுக்காக மதம் பரப்பும் வேலையை இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றே தெரிகிறது.

உண்மையில் எது பகுத்தறிவு –

நாம் செய்கின்ற செயலில் நன்மை இருக்கின்றதா தீமை இருக்கின்றதாவென ஆராய்ந்து செய்வது தான் உண்மையான பகுத்தறிவு. அது கருப்பு சட்டைகாரர்களைவிட ஆன்மீக வாதிகளுக்கு மிக அதிகமாக இருக்கின்றது. ஆடியில் உறவு கொண்டால் பத்து மாதம் கழித்து குழந்தை பிறக்கும் மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் பிரசவம் நடந்தால், குளிர் சாதன வசதியில்லாத அக்காலத்தில் பெண்கள் துன்பப் பட நேரிடும் என சொன்னது முதல், வடக்கே தலை வைத்து படுத்தால் புவிகாந்த ஈர்ப்பால் எதிர் விளவுகள் ஏற்படும் என்பது வரை ஒவ்வொறு செயலுக்கும் அர்த்தங்களோடு செய்வது இந்துகள் தான்.

எதிர்ப்பவர்களுக்கு பெயர்கள் –

இவர்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அவர்களை தமிழின துரோகிகள் என்று குற்றம் சாட்டிவிடுகிறார்கள். தமிழுக்கு இவர்கள் செய்யும் கொடுமைகள் பத்தாதம் . மக்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப் பட்ட புனைவுகளில் வக்கிர எண்ணகளுடன் அனுகி தீயவைகளை பரப்புகின்றார்கள். புராணங்களிலும், இதிகாசங்களிலும் தவறு இருப்பதாக சொல்லி புறக்கணிக்க சொல்லும் இவர்கள். தமிழர்களிடமிருந்து கம்பனையும், பாரதியையும் பிரிக்கின்றார்கள். ஏற்கனவே தமிழ் மக்கள் பலருக்கு வெண்பா முதல் அணிகள் வரை தொடர்புகள் அற்றுப் போய்விட்டது. இப்போது இவ்வாறு சொல்லி எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டால் எவ்வாறு தமிழ் தளைக்கும்.

ஏமாற்று வேலைகள் –

திராவிட மக்கள் இருந்த நாட்டில் வேறொரு நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அழித்ததாகவும், ஆரியர்கள் தான் பார்பனர்கள் என்றும் சொல்கிறார்கள். வெளி நாட்டு ஆரியர்களை விரட்ட வேண்டும் என்கிறார்கள். ஆரியர்களுக்கு பின்பு வந்த முகமதியர்களையும், கிறிஸ்துவர்களையும் பற்றி புகழ்ந்து பேசுகின்றார்கள். திராவிட மக்களை ஆரியர்களாக மாற வேண்டாம் முகமதியர்களாக மாறுங்கள், கிறிஸ்துவர்களாக மாறுங்கள் என்கிறார்கள். இது எப்படி ஞாயமாகும். வெளி நாட்டினரை விரட்ட வேண்டுமென்றால் ஆரியர்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோரையும் விரட்ட வேண்டியது தானே. முன்னுக்கு பின் முரனாக பேசி ஏன் மக்களை குழப்ப வேண்டும். அவர்களின் முரனான பேச்சுகளை ஏன் என கேட்க வேண்டி வந்த்தால் பிற மதங்களையும் இதில் இணைக்க வேண்டி வந்தது. பிற மத நண்பர்கள் மன்னிக்கவும்.

1. சமஸ்கிருதம் வேறு மொழி அதை ஏற்க வேண்டாம் எனச் சொல்பவர்கள், இஸ்லாமியர்களின் உருதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவது ஏன்?.
2. தமிழில்தான் முஸ்லிம் எல்லோரும் பேசுகின்றார்கள் என நெஞ்சல் கைவைத்து இவர்களால் சொல்ல முடியுமா?
3. தமிழுக்கென ஒரு கடவுளாக முருகனை வைத்து வழிபடும் மனிதர்களை மதம் மாற வற்புருத்துவது ஏன்?.
4. மதமில்லை மார்கம் என்று சொல்லி உலகில் தீவிரவாத தாக்குதல் நடத்தி வருபவர்களை ஆதரித்து பேசுவது ஏன்?
5. இந்து ஆட்டை வெட்டினால் ஐயோ கொலை என கத்தும் இவர்கள், வான் கோழி கழுத்தை கார் கதவில் சாத்தி கொல்லும் போதும், ஒட்டகத்தை வெளிநாட்டிலிருந்து வர வைத்து கொன்று சாப்பிடும் போதும் அவர்களுடன் ஓடிப்போகின்றார்களே ஏன்?.
6. சாதி ஒழிப்பிற்காக தான் முகமதிய மதம் போனோம் என்று சொல்லும் நாத்திகவாதிகள் அங்கும் பிரிவுகள் இருப்பதையும் அவர்கள் அடித்துக்கொள்ளும் கொடுமையையும் சொல்வதில்லையே ஏன்?
7. தமிழ் கடவுள் முருகன் இரண்டு பெண்களை கட்டி கொண்டிருக்கிறான் என பேசும் அவர்கள், அவர்களின் தலைவர் பெரியாருக்கும், கருணாநிதிக்கும் எத்தனை மனைவிகள் என நினைத்துபார்க்க மறுக்கிறார்கள் ஏன்?
8. எப்போதோ நடந்த பாபர் மசுதியை பற்றி வாய்கிழிய பேசிவிட்டு இரட்டை கோபுர தாக்குதலையும், காசி, கோயமுத்தூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களையும், மும்பை தாஜ் ஓட்டல் உட்பட எட்டு இடங்களில் நடந்த தாக்குதல், பாராளுமன்றத்தில் நடந்த முஸ்லிம் வெறித் தாக்குதலையும் என எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றார்கள். இப்போது கூட எங்கே தாக்குதல் நடத்த முடியுமென இந்தியாவிற்குள் ஊடுருவிக் கொண்டிருப்பவர்களை பற்றி பேச மறுக்கின்றார்கள் தேச துரோகிகள்.
9. சகோரத்துவ மதம் எது கூடப்பிறந்தவகளையே கொன்று குவிக்கும் இஸ்லாமிய மதமா?. தாலிபன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானிய முஸ்லிம்களும் அடித்துக்கொள்கின்ற கொடுமையை தான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே நாம்.
10. இந்தியா கிரிக்கெட்டில் தோற்றால் அது பார்ப்பன சதி, ஒலிம்பிக்கில் விருது வாங்காமல் போனால் அதற்கு காரணம் இந்துகள் என சொல்கிறார்கள்.
11. பார்ப்பனர்களை எதிர்ப்பதாய் சொல்லி சொல்லியே சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற பெரிய எழுத்தாளர்களையும், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்ற கலைதுறையினறையும் மிகவும் கேவலமாக பேசுகின்றார்கள்.
12. சாதி எதிர்ப்பு பற்றி பேசுகையில் அ.தி.மு.க, தி.மு.க என திராவிட கட்சிகளில் மாறி மாறி கூட்டனி வைக்கும் ராமதாஸை பற்றி பேசுவதில்லை. மாறாக தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள் என்ற பெருந்தலைவரைப்பற்றி தவறாக பேசுகின்றார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகிறது. பகுத்தறிவுகாரர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு இவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று தங்களை சொல்லிக்கொண்டால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். என்ன நான் சொல்வது சரிதானே.

இந்த கட்டுரையை நாத்திகர்கள் யாராவது படித்தால் என் கேள்விக்கு பதில் சொல்லவும்.

நாத்திகர்கள் சாதியை ஒழிக்கின்றார்களா என்பதைப் பற்றி விரைவில்.