தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

திங்கள், 14 டிசம்பர், 2009

நேரு குடும்பத்தின் தேச துரோகங்கள்

நாடகமாடிய நேரு –

காங்கிரஸ் எனும் கட்சியை சுகந்திரம் வாங்கிய உடனே கலைத்துவிட வேண்டும். அதில் உழைத்த தலைவர்களெல்லாம் இந்தியாவிற்காக மீண்டும் உழைக்க வேண்டும் என்றார் காந்தி. சிலர் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் பணக்காரனாக பிறந்து, கொஞ்ச காலம் சுகந்திர தியாகி போல நடித்த நேருவோ ஒத்துக்கொள்ள வில்லை. காந்திக்கு எதிரான தலைவர்களை திரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்டார்.

காந்தியின் பேச்சையே கேட்கவில்லை –

இந்தியாவை ஒன்றினைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அவர்களின் பேச்சை பல தடவை கேட்கவில்லை. சீனாவின் மீது கவணமாக இருக்குமாரு அவர் சொன்னதை கேட்காமல்தான், இந்தியாவின் பெரும்பகுதியை போரின் போது தாரை வார்த்தார் நேரு. காந்தி சுட்டு கொல்லப்படுவதற்கு சில மணிதுளிகள் முன்பு கூட படேல் நேரு செய்யும் தவறுகளை காந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தாராம். எத்தனை முறை சொன்னாலும் நேரு திருந்துவதாக தெரியவில்லை வருத்தப்பட்டாராம் காந்தி.

வெளிநாட்டு மங்கையர் மோகம் –

சோனியா என்ற வெளிநாட்டு பெண்ணை நேருவின் பேரன் திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளையனே வெளியேரு என இந்திய மக்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில் கூட ஆங்கிலப் பெண்களுடன் கொட்டம் அடித்து இருக்கிறார் நேரு. பெண்களிடம் பேசி சிரித்தை கூட பொருத்துக் கொள்ளலாம், அந்த பெண்ணின் வாயில் சிகரெட் எல்லாம் வைத்திருக்கின்றார், ஒரு தேசத்தின் பிரதமர் செய்வதை நீங்களே பாருங்கள். இந்தப் புகைப்படங்களை வெளிநாட்டினர் பார்த்தால் நமக்கு எவ்வளவு கேவலம். உண்மைய சுகந்திரத்திற்கு உழைத்திருந்தால் இப்படியெல்லாம் கீழ் தரமாக நடக்க முடியுமா.

இந்திரா நேரு –

பதவி மோகம் காரணமாக காங்கிரஸ் மூர்த்த தலைவர்களுடனெல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பிரதமரான இந்திரா நேருவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். சீக்கிய மக்களின் புணித இடத்தை ரானுவத்தால் கெடுத்த்தற்காக சீக்கியர்களால் கொல்லப்பட்டார். ஞாயமாக தமிழர்கள் தான் கொன்றிருக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்களை பாதிக்கும் என தெரிந்தே இந்திரா நேரு இலங்கைக்கு கச்ச தீவை தாரை வார்த்தார். ஏதோ இவர்களின் நிலம் போல தங்கள் இஷ்டத்திற்கு மற்றவர்களுக்கு தருகின்றனர். அண்டை நாடான மேற்கு பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் சண்டை போட்டு இந்தியாவை சரணடைய இந்திய மக்களின் வரி பணத்தை வாரி இரைத்து பாக்கிஸ்தானை பங்களாதேசாக மாற்றினார். இப்போது இந்தியாவிற்கு இரண்டு எதிரிகள்.

ராஜிவ் நேரு –

அம்மாவைப் போலவே தமிழர்களின் நல விரும்பி ராஜிவ் நேரு(மக்களிடம் இருக்கும் காந்தியின் செல்வாக்கை ஓட்டாக மாற்ற அவர்கள் வேண்டுமானால் பரம்பரை பெயரை மாற்றி போட்டுக்கொள்ளட்டும் நாம் எதற்கு அவ்வாறு செய்ய வேண்டும்).. தாரை வார்த்த கச்ச தீவால் இந்திய தமிழர்கள் பாதிக்கப்பட. இலங்கை தமிழர்களை காக்க புலிகள் என்ற இயக்கம் உருவாகி இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளில் தோல்வி கண்டு, இறுதியாக யுத்தம் என முடிவுக்கு வந்த வேளையில். தமிழர்களை கொல்ல இலங்கை அரசிற்கு துணையாக இந்திய ராணுவத்தை அனுப்பி தன் பங்கிற்கு தமிழர்களை அழித்த இந்திராவின் மகன் ராஜிவ் நேரு. கொத்து கொத்தாய் செத்து மடிந்த இனத்தின் கோரம் தாங்காமல் சிலர் எடுத்த முடிவால் ராஜிவ் மரணம் நேர்ந்தது தமிழ் நாட்டில் தான்.

சோனியா நேரு -

வெள்ளைக்கார பெண்களுடன் கொட்டம் அடித்த நேருவை பார்த்துவிட்டோம். அந்த தேசியவாதியின் கொள்கையை கடைபிடிக்க லண்டனிலிருந்து வந்த குலதெய்வம் சோனியா. ராஜிவ் இறந்துவிட அடுத்த பிரதமர் வாய்ப்பு சோனியாவிற்கு. ஏதோ கொஞ்சம் இந்தியாவின் மீது ஈடுபாடுள்ள மனிதர்கள் சத்தம் போட இப்போது சோனியா பதவியில்லாத பிரதமர்.

தன் கணவனை கொன்ற தமிழர்களை பழிவாங்கும் முயற்சியாய் அடுத்தடுத்து நிகழ்ந்தன செயல்கள். தமிழக மீனவர்கள் இன்றும் தாக்கப்படுவதையும், அவர்களை நிர்வாணப்படுத்தி கேவலம் செய்யும் செயலையும், வாழ்க்கைக்கு ஆதாரமான வலைகளை அறுத்தெரியும் சம்பவங்களையும் சோனியா தலைமையிலான இந்திய அரசு கண்டிக்கவில்லை. தூண்டி விட்டிருப்பதே அவர்கள் தான், பின் எப்படி தடுப்பார்கள்.

ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றதற்கும், அவர்களை கொடுமை படுத்தியதற்கும் இவர்கள் தான் காரணம் என்றால் நம்ப முடிகின்றதா. பிரியங்கா நேரு செய்ததை படியுங்கள் உண்மை விளங்கும்.

பிரியங்கா நேரு –

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க ராஜபக்சே தொடங்கும் முன்பே ராஜிவை நேரு கொன்றவர்களில் மீதம் இருக்கும் நளினியை பார்த்து சென்றாராம் பிரியங்கா நேரு. அந்த சந்திப்பில் என் தந்தை மிகவும் நல்லவர் ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என அடிக்கடி கேட்டாராம்.(ஆமாம் ரொம்ப நல்லவரு) இந்த சந்திப்பு நடந்த பின் தான் தமிழர்களுக்கு எதிராக பயங்கரப் போரில் இலங்கை ஈடுபட்டது. அம்மாவின் பொண்ணு என்ன போய் சொல்லுச்சோ தெரியலை.

தனித்தனி நிகழ்வாக நடந்திருக்கும் இவைகளை இணைத்துப்பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் மூல காரணம் விளங்கி இருக்கும். இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என கையை கட்டிக்கொண்டிருந்த இலங்கை அரசு, இந்தியாவின் தரப்பில் பச்சை கொடி காட்டிய பின்தான் தன் வேலையை காட்டி இருக்கிறது. பிரபாகரன் தலைமையிலான புலிகளை அழிப்பதாக சொல்லி ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அழித்து சின்னாபின்னமாக்கி விட்டது.

ராகுல் நேரு –என் சகோதரன் இந்தியாவின் பிரதமராவான். அவனுக்கு எல்லாம் தகுதியும் இருக்கிறது என சொன்னார் பிரியங்கா. நதி நீர் இணைப்பு திட்டத்தை எதிர்த்து, அதை உறுதி செய்திருக்கின்றார் ராகுல். இந்த முறையும் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்களும், தமிழகமும் தான். தமிழக்த்தில் காவெரி ஓடினாலும் கேரளா கொடுத்தால் தான் தண்ணிர். எல்லையில்லாத நீர் வளத்திற்கு அண்டை மாநிலங்களிடையே கையேந்தி நின்ற தமிழர்களுக்கு நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் கங்கையும், காவெரியும் இணைந்தால் நலம் என்ற செய்தி எப்படியோ ராகுலுக்கு தெரிந்துவிட்டது. அவர் பரம்பரை வேலையை காட்டிவிட்டார்.


எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து பார்க்கும் போது நேருவும் அவரது குடும்பமும் மொத்த இந்தியாவை எப்படி ஏமாற்றி இருக்கின்றன என தெரியும். தமிழக முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் கண்டிப்பாக ஈழத்தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். மத்திய அரசில் திமுகவின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தே. ஆனால் கொள்கை ரீதியாக ஒத்துப்போனதால் சோனியாவிடம் கலைஞர் கேட்டது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவிகள் மட்டும் தான்.

காங்கிரஸ், திமுக அணிக்கு ஓட்டுப்போட்டு விசுவாசம் காண்பித்தவர்கள் தயவு செய்து இந்த இடுகையின் மேல் இருக்கும் தமிழ்மண ஓட்டுப்பெட்டில் ஓட்டு போட்டு பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள். உண்மையான தமிழர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என எதிர் பார்க்கின்றேன்.

நேரு படங்களுக்கு நன்றி – பட்டாப்பட்டி வலைப்பூ.