தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 மார்ச், 2009

கொல்லி மலை

கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்கொல்லி மலை-மாசிக் குன்றுகொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.