தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 மார்ச், 2009

நான் அழும் நிலையிலுள்ள கவிஞன்.

ஒரு கவிஞன் குழந்தை போன்றவன்.மற்றவர்களுக்கு மிகச் சாதாரணமாக படும் விசயம் அவனுக்கு பெரியதாகப் படும்.மகிழ்ச்சியென்றால் துள்ளி மகிழ்வான், துயரமென்றால் துவண்டு போவான்.சமீபத்தில் என்னை துயரப் படுத்திய நிகழ்ச்சிதான் இந்த கட்டூரையின் கரு.விடுமுறையை கழிக்க சிற்றன்னையின் ஊருக்கு சென்றேன்.அது மணவாடி என்னும் கிராமம்.கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ளது.
கரூர் தான்தோன்றி மலையருகே கலெக்டர் ஆபிஸ் கட்டிய பிறகு,அதைச் சுற்றியிருந்த கிரமங்களின் நில மதிப்பு பலமடங்காக அதிகரித்துவிட்டது.நில தரகர்களும்,பிளாட் விற்பனையாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு விவசாய நிலங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தார்கள்.இப்போது கரூரின் புதிய பேருந்து நிலையம் வெள்ளியனை அருகே அமையலாம் என்ற செய்தியும் சேர்ந்துள்ளது.இது வதந்தியாகவும் இருக்கலாம் என்கின்றனர் கிராமவாசிகள்.
விளைநிலம் விற்பனையாவதைக் கண்டு அமைதியாக என்னால் இருக்க முடியவில்லை.பசுமையான அந்த கிராமத்து நிலங்கள் கல்களால் பிரிக்கப் பட்டு கிடப்பதை பார்த்து வருத்தமாக இருந்தது எனக்கு.சில இடங்களில் வீடு கட்டும் பனியிலும் ஈடுபட்டிருந்தனர்.ஆனால் கிரமத்து வாசிகள் சந்தோசமாக இருக்கின்றனர்.கிராமத்திற்கு புதியதாக சாலை போடப் பட்டிருக்கின்றது, வீட்டிற்கு அருகிலேயே மினி பேருந்து வருகின்றது, கரூரில் வேலைக்கு பஞ்சமில்லை என எத்தனையோ காரணங்கள் அவர்களுக்கு.
இந்த மாற்றங்களை சில மக்கள் விரும்புகின்றார்களோ இல்லையோ,இவை காலத்தின் கட்டாயம்.என்னால் முடிந்தது வருத்தப்படுகின்ற செயல் மட்டும் தான்.
விடுமுறையென்றாலே ஓடிவருவேன்
சிற்றன்னையின் கிராமத்திற்கு
உச்சிபிளக்கும் வெயிலும்
தோகைவிரிக்கும் மயிலாய்
பச்சையுடுத்திய வயலும்
காட்சியளிக்கும் குளுமையாய்
அண்டைவீடும் என்வீடெனே
மழைபொழியும் பாசமாய்
ஆனால் இப்பொழுதோ
வீடெல்லாம் தன்னைச்சுற்றி
வேலி எழுப்பிவிட்டது
விளைநிலமெல்லாம் கல்ஊன்றி
காசுக்காய் விற்கப்பட்டுவிட்டது
செய்வதறியாது திகைத்துக்
கொண்டிருக்கின்றேன் நான்
என்னருகே சிட்டோன்று
நின்று கொண்டிருக்கின்றது
கூடகட்ட இடம்தேடி
வாயில் செத்தைகளுடன்.
முடிந்த வரை விளை நிலங்களை காப்பது நம்முடைய கடமை.