தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

சனி, 11 ஜூலை, 2009

வலைப்பூவின் மாற்றம்

எமக்கென ஒரு தனித் தன்மை கிடைப்பதற்காக தான் இந்த பட்டாம்பூச்சி வலைதளத்தினை ஆரமித்தேன். அடிப்படையில் ஒரு ஆன்மீகவாதியாகவும், நடைமுறையில் அறிவியல் சார்ந்த படிப்பின் காரணமாகவும் எனக்குள் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் பகிர்தலினால் அறிவு குறைவதில்லை வளர்கின்றது. அதனால் தான் சிவராத்திரி கதைகள், சித்தர்களின் மகிமைகள், சித்தர்களின் பாடல்கள் என்பவைகளை வெளியிட்டு வந்தேன். பழைமைகளை மறக்காமல் கடைபிடித்தாலும், புதியவைகளின் தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

இத்தனை தமிழ் வலைப்பூக்கள் இந்த வலைதள உலகில் பூப்பதற்கு முக்கிய காரணம், தனித் தன்மையும், பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற பெரிய மனமும் தான். உலக அளவில் புகழ் பெற்றவர்கள் முதல் என்னைப் போன்ற மாணவர்கள் வரை வலைப்பூக்களை தொடங்க காரணமும் அதுதான். மொத்தத்தில் அனைவருக்கும் ஒரு தனி இடம் தேவைப்படுகிறது. என்னுடைய இடத்தினை நான் நிறைவு செய்ய சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரப் போகின்றேன்.

சற்று நாட்களுக்கு முன்பு வரை வெறும் ஆன்மீக வலைப்பூவாக வாசம் வீசிய இந்த வலைப்பூ, இனி கணினி பற்றிய தேடல்களுக்கு விடை சொல்லும் வலைப்பூவாகவும் மாறுகிறது. இந்த மாற்றம் சக வலைதள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் போய் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது வரை வந்தவை தொடரும், அத்துடன் கணினி சம்மந்தமான கட்டூரைகள், வினா விடை என புதிய பகுதிகளும் வெளிவரும்.

அறிவியலும் ஆன்மீகமும் கைகோர்த்து வலம் வரப்போகின்ற இந்த வலைப்பூவில், ஆங்கிலமும் சேருகிறது. கணினி பற்றிய சேதிகளில் சற்று கூடுதலாக தமிழில் தந்தால் மிகவும் அது சிரமமாக இருக்கும் என்பதாலும் பயண்பாடுகள் முறையில் ஆங்கிலம் தவிர்க்க இயலாததாக மாறிவிடுகின்ற காரணத்தினாலும் முழுமையான தூய தமிழில் கட்டூரைகளை வெளியிட இயலாது என்பது சற்று வருத்தமானது.

ஆனாலும் வலைதள நண்பர்கள் பலர் தமிழ்99 என்ற ஒரு பெரிய மாற்றத்திற்கு தங்களை உட்படுத்தி, தமிழை காக்க போராடும் போது என்னுடைய இந்த சிறிய வலைப்பூவும் உதவும் என நம்புகிறேன். தமிழின் பெருமை அதன் தொண்மையில் இல்லை, அதன் பயண்பாட்டில் இருக்கிறது என்பதை உணர்ந்து பலரும் தமிழை பயண்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஈசனின் ஆசிர்வாதங்களோடு உங்களுடைய ஆசிர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கணினி பற்றிய தேடுதல்களுக்கும், தெரியாத புதிர்களுக்கும் விடை தேடி பயணத்தை தருகிறேன். எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வரை காத்திருந்த அன்பானவர்களுக்கு நன்றிகள் பல.

உங்கள் மேலான கருத்துகளை இடுங்கள், அது மட்டுமே இந்த அன்பன் மீது நீங்கள் வைத்திருக்கும் மாறாத அன்பிற்கு சான்று.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!