தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 16 ஜூலை, 2009

ஒரே செய்தி மீண்டும் மீண்டும் வந்திட

ஒரே செய்தி நீங்கள் படித்த முடித்த பின்னும் மீண்டும் மீண்டும் வந்து உங்களை கடுப்பேத்தும் படி உங்கள் நண்பர்கள் யாரேனும் செய்திருக்கிறார்களா. ஆம் என்றால் அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் நண்பர்களை கொஞ்சம் திக்குமுக்காட செய்திடுங்கள். இது ஒருவகையான குட்டி வைரஸ்(VIRUS) எனவோ, மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலோ(HACKING) இல்லை என்றாலும் நண்பர்களை தவிர மற்றவர்களிம் விளையாடி விபரீதங்களை வளர்த்து கொள்ள வேண்டாம்.

நீங்கள் விளையாட்டுக்கு செய்யப் போய் அது வில்லங்கமாய் முடிந்து விடப் போகிறது. ஜாக்கிரதை(BEWARE)...

இனி செய்ய வேண்டியது-
1. உங்களுடைய நோட்பேடை(NOTEPAD) திறந்து(OPEN) கொள்ளவும்.

2. அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புரோகிராமை(PROGRM) அப்படியே தட்டச்சு(TYPE) செய்யவும். உங்களுக்கு மேலும் எளிதாக இருக்க நகலொன்றை(COPY) வேண்டுமாலாலும் எடுத்துக் கொண்டு அதை ஒட்டி(PASTE) விடலாம். ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வெறும் நகலெடுக்கும் பழக்கம் மட்டும் இருந்தால் அதில் உள்ள நுனுக்கங்களை கற்றுக் கொள்ள இயலாது போய்விடும். @ECHO off
:Begin
msg * Hi friend,
msg * This is a trick for
msg * Cycle Msg
msg * I learn from
msg * jagadeesktp.bogspot.com
GOTO BEGIN


3. எல்லாவற்றையும் தட்டச்சு செய்த பிறகு எதாவது ஒரு பெயரில் BAT கோப்பாக சேமித்துக் கொள்ளுங்கள். அதற்காக அதனுடைய கடைசியில் .BAT என்று தட்டச்சு செய்தால் போதுமானது.

4. இப்போது அந்த FILE வேறு வடிவத்தில் இருப்பதால், உங்கள் நண்பர்கள் ஏமாற மாட்டர்கள். எனவே அவர்களிடம் காட்டும் போது ஐகானை(ICON) மாற்றி விடுங்கள்.


















அவர்கள் அதை கிளிக் செய்து விட்டு படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். பிறகு இந்த வழி முறைகளை கற்றுக் கொடுத்து பாராட்டை பெறுங்கள். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளால் உங்கள் நட்பு இன்னும் வலுபெறும் என்பதில் ஐயமில்லை.