விசைக் குறி என நான் சொல்லுவது ARRO KEY ஐயை தான். நீங்கள் மைக்ரோ சாப்ட் ஆபிஸ் வேர்ட் டாக்குமென்ட்(WORD DOCKUMENT), நோட் பேட்(NOTEPAD) போன்றவற்றில் வலது, இடது விசைக் குறியை(LEFT AND RIGHT ARROW KEYS) அழுத்தினால் அது ஒரு எழுத்தினை விட்டு அடுத்த எழுத்திற்கு செல்லும். அதுவே மேல்,கீழ் விசைக்குறிகளை(UP AND DOWN ARROW KEYS) அழுத்தினால் ஒரு வரியை(SENTENCE) விட்டு அதன் மேலுள்ள அல்லது கீழுள்ள வரிகளுக்கு செல்லும். இப்படியில்லாமல் அதே குறிகளைக் கொண்டு ஒரு பத்தியிலிருந்து(PARAGRAPH) இன்னொரு பத்திக்கு செல்ல முடியும். அதே போல ஒவ்வொறு வார்த்தையாகவும் செல்ல முடியும்.
இனி செய்ய வேண்டியது-
1. கன்ரோல்(CTRL) கீயை அழுத்திக் கொண்டு விசைக் குறிகளை இயக்குங்கள். நீங்கள் இயக்குவது வலது மற்றும் இடது விசைக் குறிகளாக இருப்பின், உங்களுடைய கர்சர்(CURSER) ஒவ்வொறு வார்த்தைகளாக போகும்.
2. அல்லது நீங்கள் இயக்குவது மேல் மற்றும் கீழ் விசைக் குறிகளாக இருந்தால் உங்களுடைய கர்சர் பத்தி பத்தியாக செல்லும்.
முயன்று பாருங்கள்... இந்த வழிமுறைகள் உங்களுடைய செயல்களை எளிமையாக மாற்றும் என நினைக்கிறேன்.