தட்டச்சு கருவி இல்லாமல் தட்டச்சு செய்ய முடியுமா?.
முடியும்.
எதிர்பாராத விதமாக உங்களுடைய தட்டச்சு கருவி பழுதாகினாலோ, இல்லை தட்டச்சு கருவின் ஒரு சில எழுத்துகள் மட்டும் பழுதாகினாலோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய விண்டோஸ் XP-ல் அதற்காக ஒரு புதிய வழி முறை உள்ளது.
.bmp)
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்,
1. START மெனுவிவை சொடுக்கி கீழே காண்பிக்கப்பட்டுள்ள வழியில் செல்க.
2. START-> ALL PROGRAMS-> ACCESSORIES->ACCESSIBIITY-> On-Screen Keyboard
3. இப்போது On-Screen Keyboard ஐ சொடுக்கினால் உங்களுக்கு தட்டச்சு கருவி விண்டோஸிலேயே கிடைக்கும்.
அல்லது விண்டோஸ் கீயுடன் R கீயையும் அழுத்தி கிடைக்கும் RUN –ல் osk என தட்டச்சு செய்த பின்னும், இதை பெறலாம். தட்டச்சு கருவி சரி வர இயங்காத நிலையில் இந்த வழிமுறை பயனற்றதாக இருக்கும் என்பது கொஞ்சம் வருத்தமான விசயம்.
ஆனால் ஒரு சில தட்டச்சு கீகளை தவிற மற்றவை வேலை செய்தால், இரண்டாவது முறை மிகவும் எளியது.
பிறகென்ன தட்டச்சு செய்ய வேண்டியது தானே?...