ராதாவுக்கு மண்டை உடைஞ்சு போச்சி ராமு சொல்வதைக் கேட்டதும் சம்பூரணம் வீட்டில் உள்ளவர்கள் பேசத்தொடங்கினர். ராதா பக்கத்து தெரு பெண்.ராமு எல்லோர் வீட்டிலையும் எடுபிடி வேலை செய்யும் பையன். உடனுக்குடன் செய்திகளை பரப்புவதில் வல்லவன்.
இதோட, மூனாவுது பேர். இந்த மணல் லாரியையெல்லாம் ஏன்தான் இந்தப் பக்கம் அனுப்பராகளோ இது கமலத்தில் பேச்சு
அட கருமாந்திரம் புடிச்சவங்க வேகமா வந்து நம்ம உயிர எடுக்கரத்துக்கே பார்க்குரான்னுங்கோ இது ரத்தினம்
பாவி பயலுக, அவளுக்கு குழந்தை பொறந்து இரண்டு மாசம் தானே ஆவுது. பச்ச புள்ள எப்படி தாங்குறாளோ இது சம்பூரணம்.
எல்லோரும் கொஞ்சம் வாய மூடுறீகளா. சொல்லவந்ததை முழுசா கேட்காம நீங்கபாட்டுக்கு ஏதேதோ பேசுரீகளே. ராதாவுக்கு மண்டை உடைஞ்சது உண்மைதான். ஆனா லாரில அடிப்பட்டு இல்ல.
பின்ன எல்லோரும் ஆவலானார்கள்
ராதாவோட புருசன் குடிபோதையில அவள தள்ளி மண்டையை உடைச்சுப்புட்டான் என்று ராமு கத்தினான்.
ஓ... குடும்ப பிரட்சனையா... அது தானா சரியாப் போயிடும் எல்லோரும் அவரவர் வேலையை கவணிக்க தொடங்க ராமுவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது.