தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 24 ஜூலை, 2009

எளிய முறையில் START மெனுவை திறக்க இரண்டு வழிகள்

நீங்கள் கணிப்பொறியை வெகு நாட்களாக உபயோகம் செய்கிறீர்கள் என்றால் இந்த வழி முறை உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்.கணினியை பயண்படுத்துபவர்களின் நேரத்தினை மிச்சம் படுத்த KEYBOARD SHORTCUTS பயண்படுகின்றன.



புதிய கணிப்பொறி பயண்பாட்டாளர்கள் இதனை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த வழி முறைகள் உங்களுக்கு எளிமையான இருப்பதோடு, நேரத்தையும் மீதப் படுத்தும்.

1. WIN கீயுடன் சேர்த்து R கீயையும் அழுத்தவும். இப்போது விண்டோவில் START மெனு கிடைக்கும்.
அல்லது
2. தட்டச்சு கருவியில் (KEYBOARD ) விண் கீயை அழுத்தவும். இப்போதும் விண்டோவில் START மெனு கிடைக்கும்.

இப்போது கிடைக்கும் மெனுவில் சில கோடிட்ட எழுத்துகளை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக RUN –ல் R என்ற எழுத்து அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். உடனே நீங்கள் தட்டச்சுகருவியில் R தட்டச்சை அழுத்தினால் ரன் புரோகிராம் கிடைக்கும். ARROW கீயையும் உபயோகித்து உங்களுக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து பயண்படுத்தலாம்

CONTRO PANEL - C
HELP AND SUPPORT - H
SEARCH – S
RUN – R

நீங்கள் சாதாரணமாக மவுசை கொண்டு கிளிக் செய்து ஸ்டார்ட் மெனுவை பெறும் போது உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.

தட்டச்சு கருவியில் உள்ள எளிமையான வசதிகளை பிறகொரு இடுகையில் சொல்கிறேன்.