மை கம்பியூட்டரை (MY COMPUTER) நீங்கள் ஓப்பன் செய்ய வேண்டுமானால், என்ன செய்வீர்கள்.ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று அதில் மை கம்பியூட்டரை கிளிக் செய்வீர்களா அல்லது டெஸ்க் டாபில் உள்ள மை கம்பியூட்டரின் சாட் கட்டை பயண்படுத்துவீர்களா.
அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படியுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும். சூ மந்திரக் காளி என்ற மந்திரம் போல இது வேகமாக செயல்படும்.(சும்மா தமாசுக்கு)
நீங்கள் செய்ய வேண்டியது-
1. விண்டோஸ் கீயுடன் சேர்த்து E பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு எஸ்போலர்(EXPLORER) கிடைக்கும்.இது ஒரு வகையான வழிமுறை.
2. விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீயை அழுத்தி ரன் புரோகராமை திறந்து கொள்ளவும். அதில் மூன்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளை வைத்துவிட்டு என்டர் செய்யவும். இப்போதும் உங்களுக்கு மை கம்பியூட்டர் கிடைக்கும்.
3. இறுதி வழி முறை என்னவென்றால் இரண்டாவது படியில் உள்ளதைப் போன்று ரன் புரோகிராமை திறந்துவிட்டு, அதில் explorer என்று டைப் செய்த பின் என்டர் செய்யவும்.
இந்த மூன்று வழிமுறைகளும் உங்களுடைய கணிப்பொறியை நீங்கள் இயக்கும் வேகத்தை அதிகரிக்கும் என்பதில் அச்சமில்லை. முயன்று பாருங்கள். நண்பர்களிடம் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். ஈசன் அருள் புரியட்டும்.