தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

சனி, 11 ஜூலை, 2009

கோவில்கள் இடிப்பு முதல் புதுபிப்புகள் வரை

அமைதியாக இந்து மதம் போதிப்பது ஒன்றை மட்டும் தான், அது அன்பு. பல வலைப்பூக்களில் இந்து மதத்தினை புரிந்து கொள்ளாதவர்கள், சில சம்பவங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு (பெரும்பாலும் பாபர் மசூதி இடிப்பு) சாடுகின்றனர். ஒரு உண்மையான விவாதத்தில் ஒரு செயலை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் முடிவெடுத்துவிடக் கூடாது.

ஆயிரமோ, இலட்சமோ மக்கள் பின்பற்றுகின்ற மதம் இல்லை இந்த இந்து மதம். கோடான கோடி மக்களின் இதயங்களை செம்மைப் படுத்துகின்ற பெரு மதம் இந்த இந்துமதம். எப்படி முகமது அலி பதினெட்டு முறை படையெடுத்து வந்து கோயில்களின் பெரும் செல்வத்தை எடுத்துக் கொண்டு ஓடியதுடன், அந்த கோய்ல்களையும் இடித்து விட்டதாக வரலாறு சொல்கிறதோ, அது போல பாபர் மசூதி இடிப்பும் ஒரு வரலாறுதான்.

இன்று எத்தனை இந்துகள் முகமது அலியின் மீது பகையோடு இருக்கிறார்கள். அல்லது ஆப்கானில் இருந்த புத்தர்கள் சிலையை பீரங்கி வைத்து தகர்த்து எரிந்துவிட்ட முகமதியர்கள் மீது யாராவது பகையோடு இருக்கிறார்களா. எதுவும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக மக்களை கோமாளிகள் ஆக்கி இங்கு நடக்கும் செயள்கள் வேடிக்கையானவை.

மீண்டும், மீண்டும் எல்லை தாண்டிய பயங்கிரவாதமாக சிங்கிலர்கள் இங்கே தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர். அதைக் கண்டிக்கவும், அனையை உயர்த்துதல், புது அனையை கட்டுதல் என்று தமிழக விவாசாயத்தை அடியோடு அழித்திடும் கேரளா அரசின் போக்கை எதிர்க்கவும் ஊடகங்கள் ஒன்றுபட வேண்டும்.

இன்னும் எத்தனை காலங்கள் தான் பாப்பானியம், இந்துத்துவம் என்ற குற்றசாட்டுகளை மட்டுமே கையாளுவார்கள் எனத் தெரியவில்லை. இந்துக்களிலும் சில கோபக்கார ஆசாமிகள் உண்டு என்பதன் உண்மைதான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம். கோயில்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒருவேளை நீங்கள் நாத்திகர்களாக இருந்தால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு வாழ்வின் மீதான பிடிப்பை கொண்டுவரவே மதங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் இந்து மதம் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் புத்தமும், சமணமும் தோன்றிய நேரத்திலேயே இந்து மதம் அழிந்திருக்கும். மக்களுக்கு தேவைப்படுகின்ற ஒன்றை தடுப்பதற்கோ, விவாதம் செய்வதற்கோ எவருக்கும் உரிமையில்லை.

அடுத்து ராமர் பாலம் பிரட்சனை. மக்களுடை நம்பிக்கை, நலம் என்ற இரண்டு விதமான மாறுபட்ட செயல்கள் ஒன்றாய் இருக்கும் இந்த பிரட்சனையில், நான் மக்கள் நலனையே கவனத்தில் கொள்கின்றேன். ஒருவேளை சேது சமுத்திர திட்டம் சரியாக நிறைவேறினால் தமிழ் நாட்டிற்கு இரண்டு நன்மை உண்டு.
1. கப்பல்கள் வருகையால் பாதுகாப்பு கூடும், இது தமிழக மீனவர்களின் மீதான இலங்கை ரானுவத் தாக்குதல்களை குறைக்கும்.
2. மக்களுடைய வரிப்பணம் விரயமாவது தடுக்கப்படுவதோடு, தமிழக துறைமுகங்களில் கப்பல்களின் வருகை பெருகும்.

ஆனால் இது எல்லா மக்களின் பூரண சம்மதத்தோடு நடக்கவேண்டிய ஒன்று. மக்களின் சம்மதம் இல்லாமல் முந்நாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததுபோல, மீண்டும் ஒரு தவறை நிகழாமல் செய்யவேண்டும்.
என்னுடைய கவிதை வலைப்பூவிற்காக நான் எழுதிய கவிதை.

ராமர் பாலம்

கடவுள் மனிதனைக் காத்தது போய்
மனிதன் கடவுளை காத்து நிற்கிறான்
மக்களுக்கு நன்மையென்றால்
ராமனென்ன மறுக்கவாப் போகிறார்
பாலம் உடைத்து பாதை அமைக்க?

இந்து மக்கள் சேது சமுத்திர திட்டத்தை கண்டிப்பாக வரவேற்பார்கள். ஏனென்றால் அவர்கள் அன்பினால் ஆனவர்கள். தம்மை வருத்திக்கொண்டு பிறருக்கு உதவும் போக்கு அவர்களுக்குள் கலந்திருக்கின்றது.

இறுதியாக கோவில்கள் புதுப்பித்தலைப் பற்றி... பல பிரம்மாண்டமான இந்துக்கோவில்கள் பராமரிக்க யாருமின்றி இருந்தாலும். தற்போது சில கோவில்கள் அன்பர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் ஒவ்வொறு தெருவிலும் புதுப்புது கோவில்கள் உதித்துக் கொண்டிருந்தாலும், பழமையான புராதானச் சிறப்புகள் கொண்ட கோவில்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. எனவே அதிக பணம் கொடுத்துதான் புதுபிக்க வேண்டும் என்றில்லை, இயன்றதை தந்து உங்கள் அருகிலுள்ள கோவில்களை பராமரியுங்கள். ஈசன் உங்களுக்கு என்றும் அருள் செய்வான்.