தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 24 ஜூலை, 2009

ஆட்டம் போடும் புகைப்படங்கள்

இது என்னுடைய நண்பர்கள் சொல்லிக் கொடுத்த வழி முறை. முதன் முதலாக நான் இதைச் செய்து பார்த்த போது வியப்பில் மூழ்கிப்போனேன். அதே வியப்பு உங்களுக்கும் வந்திட வேண்டுமல்லாவா எனவே இந்த முறை செயல் விளக்கப் படங்களை மட்டுமே இடுவதாக முடிவு செய்தேன்.

HACKING பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அது தவறாது என்றா?. இல்லை. அது பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருந்தால் அது தவறுதான்.ஆனால் ஒரு விளையாட்டுக்காக அல்லது நம்முடைய பயண்பாட்டிற்காக புரோகிராம்களை மாற்றுதல் தவறில்லை என்கிறேன் நான். இது ஒரு சின்ன விளையாட்டான INTERNET HACKING TIPS . எனவே எந்த பயமும் இன்றி நீங்கள் இதைப் பயண்படுத்தலாம்.

இந்த வழிமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு INTERNET வசதி தேவையில்லை. OFF LINE என்று சொல்லப்படும் சாதாரண நிலையே போதுமானது. INTERNET EXPLORER , OPERA என்று எந்த வலையுலாவியையும் (BROWSERS) பயண்படுத்தலாம்

இந்த விளையாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டியது-
1. கீழே இருக்கும் இந்த புரோகிராமை காப்பி செய்து கொள்க.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval('A()',5); void(0);

2. பின்பு இதே BROWSER மேலே இருக்கும் ADDRESS BAR –ல் வலைப்பூவின் முகவரியை முழுவதுமாக நீக்கி விட்டு அந்த புரோகிராமை பெஸ்ட் செய்து விடுங்கள். (PASTE THAT CODE IN ADDRESS BAR IN YOUR BROWSER)3. இப்போது என்டர்(ENTER) கீயை அழுத்தினால் உங்களுக்கு அற்புதமான படங்களின் நடனம் தெரியும்.

அல்லது

4. மேலே இருக்கும் புரோகிராமை காப்பி செய்து விட்டு படங்களைக் கொண்டிருக்கும் ஒரு வலைப்பூவை திறந்து கொள்ளுங்கள்

5. அதனுடைய முகவரியை அழித்துவிட்டு PASTE AND GO அல்லது CTRL கீயுடன் சேர்த்து B கீயையும் அழுத்துங்கள்.

6. இப்போதும் உங்கள் கண் முன்னே வலைப்பூவிலிருந்த புகைப்படங்களின் நடனம் ஆரமிக்கும்.

இந்த வலைப்பூவில் இடப்படும் அனைத்து வழிமுறைகளும் என்னால் செய்து பார்க்கப்பட்டு முடிவுகள் நலமாக வந்தால் மட்டுமே இடப்படுக்கின்றன. அபயமான செயல்களை இதுவரை நாம் செய்யவில்லை. உங்களுடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புரோகிராம்களை நான் இங்கு கொடுக்கப்போவதில்லை.எனவே பயம் கொள்ள வேண்டாம்.
மேலும் சில முறை செய்து பார்த்த அனுபவத்தினால் உங்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இயலும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். என்னுடைய மெயிலின் மூலமாகவும் தொடர்பு கொள்ல்லாம். மறக்காமல் கருத்துரைகளை இடுங்கள்... அப்படியே உங்களுக்கு தெரிந்தவைகளை கூட எனக்கும் கூறுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.