அன்பானவர்களே,
மிக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுதாங்கனின் வலைதளத்தில் விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்? என்ற கட்டூரையைப் படித்தேன்.மிகவும் எளிமையான எழுத்துகளில் விநாயகனின் வடிவங்களைப் பற்றி எழுதியிருந்தார்.அதைப்படித்து வியப்படைந்தேன்.மேலும் சில சிந்தனைகள் மனதினுள் எழுந்தது,அதன் விளைவே இந்தக் கட்டூரை.
விநாயகனின் ஐந்து கைகளுக்கு விளக்கமாக பஞ்ச பூதங்களின் சக்தியையும்.அவற்றின் செயல்களாக ஒரு கை தனக்கும்,ஒரு கை தேவர்களுக்கும், ஒரு கை பெற்றோர்களுக்கும்,இரு கைகள் நம்மைக் காக்கவும் என்று கச்சியப்ப முனிவர் கூறியதை முன்வைக்கின்றார். விநாயகனுக்கு எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் அதன் பிறகு விரிவாகச் சொல்லுகிறார்.
முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:
1.ஸ்ரீபால விநாயகர்
2.ஸ்ரீ தருண விநாயகர்
3.ஸ்ரீ பக்தி விநாயகர்
4.ஸ்ரீ வீர விநாயகர்
5.ஸ்ரீ சக்தி விநாயகர்
6.ஸ்ரீ துவிஜ விநாயகர்
7.ஸ்ரீ சித்தி விநாயகர்
8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்
9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்
10.ஸ்ரீ விக்ன விநாயகர்
11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்
12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்
13.ஸ்ரீ மகர விநாயகர்
14.ஸ்ரீ விஜய விநாயகர்
15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்
16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்
17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்
18.ஸ்ரீ வரத விநாயகர்
19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்
20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்
21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்
22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்
23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்
24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்
25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்
26,ஸ்ரீ துண்டி விநாயகர்
27.ஸ்ரீ இருமுக விநாயகர்
28.ஸ்ரீ திரிமுக விநாயகர்
29.ஸ்ரீ சிங்க விநாயகர்
30.ஸ்ரீ யோக விநாயகர்
31.ஸ்ரீ துர்க்கா கணபதி
32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்
முப்பத்தியிரண்டு திருவுருவங்களின் பெயர்களை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன்.அவருடைய கட்டூரையில் இந்த திருவுருவங்களின் அமைப்புகளையும் கூறியிருக்கிறார்.அவருடைய கட்டூரையை படிக்க விரும்புகிறவர்கள் http://sudhanganin.blogspot.com/2008/09/blog-post.html க்கு சென்று படியுங்கள்.
என்னுடைய ஆச்சிரியம் என்னவென்றால் விநாயகர் என்னுடைய இஷ்ட தெய்வம்.அப்படியிருக்கும் போது அவருடைய அவதாரங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதுக் கூட இல்லை.இந்த இஷ்டதெய்வ வழிபாடு இந்து மதத்தில் இருக்கும் சிறப்புகளில் ஒன்று.தங்களுக்கு பிடித்த தெய்வத்தை வழிபட இந்து மதம் அனுமதி தருகின்றது.இது போன்ற சுகந்திரங்கள் தான் இந்து மதத்தினை பல காலம் அழியாமல் காத்துக்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி,பத்திரிக்கை,சிற்றிதல்கள் என எல்லா ஊடகங்களிலும் ராமாயணமும்,மகாபாரதமும் மட்டுமே இடம் பிடிக்கின்றன.மற்ற கதைகளையோ,புராணங்களையோ அவைகள் மறந்து விடுகின்றன.சொன்ன கதைகளையே அவர்கள் சொல்வதும் அதையும் நாம் சலிக்காமல் மீண்டும் மீண்டும் படிப்பதும்,பார்ப்பதுமே வாடிக்கையாகிவிட்டது.இந்த அவலம் கண்டிப்பாக மாற வேண்டும்.அதற்கான சில முயற்சிகளை நானும் எடுக்கிறேன்.எந்த மாற்றமானாலும் அதை நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
கதைகளைத் தேடுவோம் கொட்டிக் கிடக்கும் புதையல்களிலிருந்து ராமாயணம்,மகாபாரதம் என்னும் இரண்டு முத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமா.மாணிக்கங்களையும்,வைரங்களையும் விட்டு சென்று விட முடியுமா.கொஞ்ச காலம் ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மறப்போம்.அப்போது தான் புதிய கதைகள் கிடைக்கும்.வாருங்கள் அன்பானவர்களே நம் தேடுதல் வேட்டையை இன்றையிலிருந்து தொடங்குவோம்.